திங்கள், 21 மார்ச், 2016

[9:42 AM, 9/13/2015] +91 90925 52551: ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்.! அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..!

இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..!

சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?"

இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!"

சீனன்;- "அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்..! மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள் எனக்கு தரவேண்டும்..!
போட்டிக்கு இப்போது சம்மதமா..?

இந்தியன்;- "நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னே'னே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்..!

சீனன்;- (விடுவதாக இல்லை) "சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று.. நான் தோற்றால்.. 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..??

இந்தியன்;- "சரி..சம்மதம்..!"

சீனன்;- " போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்..! நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..??

இந்தியன்;- " தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..!"

சீனன்;- "மகிழ்ச்சி நண்பரே..!"

இந்தியன்;- "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?"

சீனன்;- "கேளுங்கள்..!"

இந்தியன்;- "ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள்.. இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும்.. அது என்ன விலங்கு..??

சீனன்;-( அதிர்ச்சியானான்.. நீண்ட நேரம் யோசித்து விட்டு ) "தெரியவில்லை..500 ரூபாயை பிடியுங்கள்..!"

இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..!

சீனன்;- "ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு.. கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..?

இந்தியன்;- தெரியவில்லை..50 ரூபாயை பிடியுங்கள்..!!

கொய்யால
யார்கிட்ட....

தமிழன்டா !!

உண்மையான தமிழர்கள் லைக் பண்ணுங்க!!



✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
[9:57 AM, 9/14/2015] +91 95516 56551: ஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம்                                                               மறைந்த ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் மரணத்திற்கு முன், 2006 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கென, 175 ஏக்கர் பரப்பளவில், அலுவலக வளாகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தார். உலகிலேயே தனித்துச் சொல்லப்படும் அளவிற்கு அது இருக்கும் என்றார். அவரின் கனவு விரைவில் நனவாகப் போகிறது. இதனை 'ஆப்பிள் வளாகம் இரண்டு (Apple Campus 2)' என அவர் அழைத்தார். அந்த வளாகம் தொடர்ந்து கட்டப்பட்டு, தற்போது அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த 2016 ஆண்டு முடிவதற்குள் அல்லது 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த அலுவலகம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளாகத்தினை விண்வெளி ஓட வளாகம் (ஸ்பேஸ் ஷிப்) என்றே அனைவரும் அழைக்கின்றனர். இதன் தோற்றம் அந்த வகையில் அமைந்துள்ளது.  இது 176 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இடத்தில் அமைக்கப்படுகிறது. அலுவலக வளாகம் 28 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைகிறது. ஒரே கட்டடத்தில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் 13,000 பேர் பணியாற்றுவார்கள். சுற்றி வந்தால், இது ஒரு மைல் தூரத்திற்கும் சற்று அதிகமாகவே இருக்கும்.

வட்ட வடிவ வளாகமாக அமைக்கப்படும் இந்த கட்டடம் நான்கு மாடிகளால் ஆனது. இதன் இரு பக்க சுவர்களும் கெட்டியான கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு பணி புரிபவர்கள், இரண்டு பக்கமும் உள்ள இயற்கைச் சூழலைக் கண்டவாறே பணியாற்றலாம். கண்ணாடிகளால் ஆன மாடிப் படிக்கட்டுகளை அமைக்கும் சீலே (Seele) நிறுவனத்தின் கட்டட பொறியாளர் பீட்டர் ஆர்பர் இது பற்றிக் குறிப்பிடுகையில், இந்த கட்டடத்தில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளை வரிசைப்படுத்தினால், ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான Foster+Partners இந்த வளாகத்தினைக் கட்டித் தரும் பொறுப்பினை ஏற்றுள்ளது. உலகின் மிகச் சிறந்த, பல பெரிய கட்டடங்களைக் கட்டிய அனுபவம் கொண்டது இந்த நிறுவனம். இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளன. மிகப் பெரிய வளாகமாக அமைக்கப்பட்டுள்ளதால், ஆங்காங்கே உணவு நிலையங்களும், நடைவெளிகளும், நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய உணவகம், அங்குள்ள பரந்த புல்வெளியை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு மட்டும் 21,468 சதுர அடியாகும். Caffè Macs என அழைக்கப்படும் இந்த உணவகம், ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே. இரண்டு மாடிகளில் இது அமைகிறது. பொது மக்கள், இந்த வளாகத்தினுள் நுழைய அனுமதி இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இதன் ஊழியர்களும், ஆய்வாளர்களும் கலந்தாலோசிக்கும் வகையில், பொதுமக்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
[9:58 AM, 9/14/2015] +91 95516 56551: புல்வெளியின் கீழாக, பூமிக்கு அடியில் கார்களை நிறுத்துமிடம் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 14,200 கார்களை நிறுத்தலாம்.இதனால், கார்கள் நிறுத்தப்பட்டு அவை வளாகத்தின் அழகான தோற்றத்தைக் குறைக்கும் நிலையே ஏற்படாது. வளாகத்தைச் சுற்றி 7,000 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பார்ப்பதற்கு இந்த வளாகம் ஒரு மிகப் பெரிய பூங்காவாக இருக்கும். மொத்தப் பரப்பளவில், 80% இடம் 'பசுமை வளாகம்' ஆக அமையும்.

இந்த வளாகம் அமைய இன்றைய திட்ட மதிப்பீட்டின்படி 500 கோடி டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது தேவையற்ற ஆடம்பரம் என ஆப்பிள் நிறுவன பங்கு முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் தனி இருப்பு நிதியில் 1% என்பது நூறு கோடி டாலர் ஆகும். இருந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இங்கு அமையும் உடற்பயிற்சி மையம் 7.5 கோடி டாலர் செலவில் அமைக்கப்படுகிறது. இதனை சிலிகான் பள்ளத்தாக்கில் வசிக்கும் 20 ஆயிரம் ஆப்பிள் நிறுவனத்தினர் பயன்படுத்தலாம். வளாகத்தைச் சுற்றி சுற்றி, நடை பயிற்சி மற்றும் ஓடும் பயிற்சி மேற்கொள்ள பல மைல்கள் அளவிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்திற்குள்ளாக ஊழியர்கள் சென்று வருவதற்கெனத் தனியே 1,000 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும். இது பயன்பாட்டிற்கு வந்த பின்னரும், குபர்டீனோ நகரில் உள்ள தற்போதைய ஆப்பிள் நிறுவன வளாகம் அப்படியே இருக்கும்.  இடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மியூசியம் ஒன்று அமைக்கப்படும் என சிலர் தவறாகக் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு 'ஆப்பிள் மனித இனத்தின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தான் பாடுபடும்; கடந்த காலத்தைக் கொண்டாடாது' எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் ஒருங்கே அமர்ந்து காணக் கூடிய அரங்கம் ஒன்று, பூமிக்கடியில் எழுப்பப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் சோதனைக் கூடங்கள் பல லட்சம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் யாருக்கும் புகை பிடிக்க அனுமதி இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் இதன் திட்டம் குறித்துப் பேசுகையில், இதனை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.  தன் பெற்றோர்கள் இருவரும், புகை பிடிக்கும் பழக்கத்தால், நுரையீரல் புற்று நோயால் இறந்ததாகவும், அதனால், புகை பிடிப்பது மனிதனுக்கு ஆகாது எனவும், அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.







இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இங்கு ஏறத்தாழ 7 லட்சம் சதுர அடி அளவில் சூரிய வெப்பத்திலிருந்து மின் சக்தியை உருவாக்கும் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகம் முழுவதும் இயங்குவதற்குத் தேவையான மின் சக்தியினை இந்த பேனல்கள் தரும். பல புகைப்படக் கலைஞர்கள் மற்றும் விடியோ தயாரிப்பாளர்கள், ஆளில்லா சிறிய விமானத்தினை அனுப்பி, இந்த வளாகம் கட்டப்படுகையில், அதன் பல நிலைகளை போட்டோவாக எடுத்து, விடியோ படங்களாக யு ட்யூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். மாதிரிக்கு ஒன்று u tube தளத்தில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு மிகப் பிரம்மிப்பாகவும் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புகழை அதன் சாதனங்கள், மனித இனச் சரித்திரத்தில் பதித்தாலும், இந்த வளாகம் கூடுதலாகப் புகழை இணைக்கும் என்பதில் ஐயமில்லை.
[10:04 AM, 9/14/2015] +91 95516 56551: கைதிகளின் குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது தீர்வாகாது                                  கைதிகளின் குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது தீர்வாகாது என்று சமீபத்தில் தேசிய சட்ட ஆணையம் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய பரிந்துரைக்கு ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி தேசிய சட்ட ஆணையம் ஒரு பரிந்துரையை உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ளது. அதில் குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது ஒருபோதும் தீர்வாகாது என்று குறிப்பிட்டு உள்ளது. அதே சமயம் தீவிரவாதம், போர் குற்றங்களுக்கு, அதன் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை என்பதுதான் தீர்வு என்பதும், இவர்களை மன்னித்தாலோ, அல்லது இவர்களுக்கு வெறும் ஆயுள் தண்டனை அளித்தாலோ அது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்றும் தேசிய சட்ட ஆணையத்தின் பரிந்துரை சொல்கிறது.

இதற்கு பாராட்டுதல்கள் தெரிவித்துள்ள ஐநா, தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் புதிய சட்டத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளையும் தொடர வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
[10:05 AM, 9/14/2015] +91 95516 56551: முறைகேடுகளில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்தப் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்                                                               முறைகேடுகளில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்தப் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ளது தமிழக அரசு.

பொதுமக்கள் பயனுக்காக ஓட்டப்படும் ஆட்டோக்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் டிஜிட்டல் மீட்டர் பொருத்தவில்லை என்று மட்டும் இல்லாமல், வேறு சில முறைகடுகளில் ஈடுபடுவதும் உண்டு.இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுனர்கள் டிஜிட்டல் மீட்டர் பொருத்தவில்லை என்றாலும், வேறு தொந்திரவுகள் செய்தாலும் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன் படி மக்கள் ஏறும் ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் இல்லை என்றாலும், மீட்டருக்கு மேல் பணம் வசூலித்தாலும், வேறு முறைகேடுகளில் ஈடுபட்டாலும் மக்கள் அரசு அமைத்துள்ள பாதுகாப்புக் குழுவினரிடம் புகார் அளிக்கலாம். அந்த புகார் அளிக்க தொலைப்பேசி எண் 18004285430 என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.
[10:06 AM, 9/14/2015] +91 95516 56551: மதுரை மேலவளைவில் நரபலியா?:சகாயம் ஐ.ஏ.எஸ் ஆய்வு                  மதுரை மேலவளைவில் மனம் நலம் குன்றியவர்களை நரபலி கொடுத்துள்ள புகார் வந்தது.

மதுரையில் கிரானைட் கல்குவாரி மோசடி நடைபபெற்று வருகிறது என்கிற புகாரின் அடிப்படையில் அங்கு ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க சாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்து உள்ளது. அதன் படி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அங்கு விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து வருகிறார் சகாயம் ஐ.ஏ.எஸ்.இவரிடம் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் புகார்களும் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தயாரித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் மதுரையில் கிரானைட் கல்குவாரி தொழிற்சாலை நடத்தி தற்போது முறைகேடில் சிக்கி இருக்கும் டி.ஆர்.பி கம்பெனி மதுரை மேலவளைவில் மனநலம் குன்றிய ஒரு பெண் உட்பட 16 மன நோயாளிகளை நரபலி கொடுத்துள்ளனர் என்று ஒரு புகார் வந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை மேலவளைவில் புதைக்கப்பட்டதாகப் புகார் வந்த இடத்தில் ஆதாரங்களைத் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இயந்திரங்களைக் கொண்டு தோண்டினால், மனித எலும்புகள் நொறுங்க நேரிடும் என்று சகாயம் ஐ.ஏ.எஸ் கருதியதால், மனிதர்களைக் கொண்டு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு மக்கள் ஏராளமானோர் குவிந்து வேடிக்கைப் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[10:08 AM, 9/14/2015] +91 95516 56551: காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் விடிய விடிய காத்திருந்த சகாயம் ஐஏஎஸ்.                                                                                                  காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் விடிய விடிய காத்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார் சகாயம் ஐஏஎஸ்.

மதுரையில் கிரானைட் கற்குவாரி மோசடிக் குறித்து கடந்த பத்து மாதங்களாக சென்னை உய நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விசாரித்து வருகிறார் சகாயம் ஐஏ.எஸ். இவரிடம் மதுரையில் கற்குவாரி மோசடிகாளால் பாதிக்கப்பட்டவர்களும் புகார் அளித்து வந்த நிலையில், ஒருவர் திடுக்கிடும் புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.அந்த புகாரில் மன நோயாளிகளில் ஒரு பெண், மற்றும் குழந்தை உள்பட 14 பேரை டி.ஆர்.பி.கம்பெனி நரபலி கொடுத்துள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல்தான் அது.

அவர் குறிப்பிட்ட இடத்தில் நேற்று ஆட்களை வைத்து தமது கண்காணிப்பில் தோண்டும் பணிகளைத் துவங்கினார் சகாயம் ஐஏ.எஸ்.போலீசார் இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்காத நிலையில், அவர்களை நம்பாமல் விடிய விடிய காத்திருந்து தோண்டும் பணிகளைக் கண்காணித்து வந்தார். இன்று மாலைக்குள் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு, மற்றும் பெரியவர்கள் மூவரின் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.18 அடி அகலத்தில் 14 அடி ஆழத்தில் தோண்டும் பணிகள் துவங்கின.மீண்டும் சடலங்கள் கிடைக்கலாம் என்கிற நம்பிக்கை நிலவி வருவதால் தோண்டும் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

சகாயம் ஐஏ.எஸ்.பணிக்கு காவல்துறை ஒத்துழைக்கலாமல் இருப்பதற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதிமுக அரசு செயல்படாத அரசாக அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவர் தெரிவத்துள்ளார்.பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் முதலியோரும் காவல்துறை சகாயம் ஐஏ.எஸ்.க்கு ஆதரவு அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
[6:39 PM, 9/14/2015] +91 95516 56551: விண்டோஸூக்கு மாற்றாக இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டம்                                                                                  அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஊடுருவி முடக்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக நவீன கணினி மேம்பாட்டு மையத்தால் "பாஸ்"(பாரத் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ்) Bharat Operating System Solutions என்ற அதிநவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம், கடந்த வாரம் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய சிஸ்டம், 3 மாதங்களாக பல்வேறு ஊடுருவலுக்கு உட்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணையதளங்களையும் ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகளை பாஸ் முறியடித்து, வெற்றி கண்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு புதிய கோடிங்களும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்னோடன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க உளவுத்துறையால் அதிகம் கண்காணிப்படும் நாடு இந்தியா என குறிப்பிட்டுள்ளார். இதனால் வெளிநாட்டினர் இந்திய அரசின் ரகசியங்களை உளவு பார்ப்பதை தடுப்பதற்காக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்திய தொழில்நுட்பத்தை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும்..

விண்டோசைப் போன்று இல்லாமல் எளிமையாக பயன்படுத்தும் வகையில் பாஸ் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அரசு இணையதளங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், தனிநபர்களின் ரகசியங்களையும் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
[6:40 PM, 9/14/2015] +91 95516 56551:  "பாஸ்"(பாரத் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ்) Bharat Operating System Solutions
[8:27 PM, 9/14/2015] சேது ( டியுப்): வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.
[1:39 PM, 9/15/2015] ரமேஷ்- 450: புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...
[1:45 PM, 9/16/2015] சேது ( டியுப்): கொத்து புரோட்டா எவ்வளவுப்பா?
70ரூபாங்க...
இந்தா காசு ஒண்ணு பார்சல் கட்டு...
நல்லா கொத்து...
டொட்டட்டடடண்ட் டடடடண்ட்டட்ண்
டடடடண்ட்டண்ட் டடடடடடட...
நல்லா... இன்னும் வேகமா...
டொடொட்டடண்ட டடடடடடட்டடாண்ட
டண்டன் டடடடண்ட்
இன்னும் வேகமா தம்பி. ..
ட்டடடடடடடடடடடடடட
டடாண்டுடடடாண்டு டட்டாடுடடடடட....
தம்பி இன்னும் நல்லா...
சார் இதுக்கு மேல கொத்துனா
புரோட்டா பவுடர் தான் கிடைக்கும்...
ஓ அப்படியா சரிப்பா அதை அப்படியே கீழ
கொட்டிடு நான் வர்றேன்...
என்னா சார் காசு கொடுத்துட்டு கீழே
கொட்ட சொல்ற.. என்னாச்சு..?!!!!
விடுப்பா வீட்டுல மனைவியோட சண்டை
அதான் இங்க வந்து என் ஆத்திரத்தை
தீத்துகிட்டேன்.. வரட்டுமா...
ஹீஹீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக