ஞாயிறு, 20 மார்ச், 2016

[6:49 AM, 7/9/2015] +91 95516 56551: பாஸ்வேர்ட் வேண்டாம்... செல்ஃபி போதும்!                                    டெக்னாலஜியின் வளர்ச்சியை இரண்டு காலங்களாக இப்படி பிரிக்கலாம் - இருக்கின்ற டெக்னாலஜியை வைத்து ஃபன் பேக்டரை தேடிக் கொள்வது டிமு( டிஜிட்டலுக்கு முன்). அதுவே மக்கள் எதை ஃபன் ஃபேக்டராக கருதுகிறார்களோ அதை வைத்தே டெக்னாலஜியை உருவாக்குவது டிபி டிஜிட்டலுக்கு பின் ( அட டிபி- டிஸ்ப்ளே பிக்ச்சர் ). அப்படி ஒரு முயற்சியைதான் எடுத்திருக்கிறது மாஸ்டர் கார்ட் நிறுவனம்.


கிரெடிட், டெபிட் சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளருக்கு புதியதொரு அனுபவத்தையும், பண பரிவர்த்தனைகளில் பாதுகாப்பையும் அதிகரிக்க புது திட்டம் ஒன்றை கூறியுள்ளது.

பொதுவாக மாஸ்டர் கார்டின் மூலம் பொருட்கள் வாங்கும்போது, பரிவர்த்தனை நிறைவடைய வாடிக்கையாளரின் பிரத்யேக பாஸ்வேர்டை பதிய வேண்டும். ஆனால் புதிய முறைப்படி, பாஸ்வேர்டுக்கு பதிலாக செல்ஃபியே பாஸ்வேர்டாக இருக்கும். இதற்கு 'மாஸ்ட்டர் கார்ட் ஆப்' பை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பணம் கட்ட வேண்டிய நேரத்தில் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். ஒன்று விரல் ரேகை பதிவு மற்றொன்று செல்ஃபி பதிவு முறை. இதில் நீங்கள் செல்ஃபி பதிவு முறையை தேர்ந்தெடுத்தால் கேமரா தானாக இயங்கும். கண்களை சிமிட்ட , தானாக உங்கள் செல்ஃபி கேப்ச்சர் செய்யப்படும்.

அதன்பின் image recognition முறையில் உங்கள் படம் ஸ்கேன் செய்யப்படுகிறது. பின் 0 1 என்ற டிஜிட்டல் எண்களாக மாற்றி, நிறுவனத்தின் சர்வர்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பிரத்யேக கோட்(code) களுடன், செல்ஃபி கோட் பொருந்துகிறதா என்று பார்க்கப்படும்.. பொருந்தினால் உங்கள் பரிவர்தனை சக்சஸ்.

தற்போதைக்கு இந்த முறை சோதனை அளவில் உள்ளது. மேலும் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 500 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யவுள்ளனர்.
" அன்றாடும் வாழ்வில் மக்கள் பல பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதை மாற்ற யோசித்ததன் விளைவுதான் செல்ஃபி முறை. புதிய தலைமுறையினர் இதனை நிச்சயம் விரும்புவார்கள் என்று நம்புகின்றேன் " என்கிறார் அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி அஜய் பால்லா.

கண்களை சிமிட்டினால்தான் படம் எடுக்கப்படும் என்பதால், ஏற்கனவே எடுத்த படங்களை வைத்து ஏமாற்ற முடியாது என்கிறது அந்நிறுவனம். மேலும் படங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, கோட்கள் 0 1 முறைப்படி சர்வர்களுக்கு அனுப்பபடுகின்றன. ஆகையால் இதில் பாதுகாப்பான பண பரிமாற்றம் செய்யலாம் என்கிறது அந்நிறுவனம்.



இருந்த போதிலும் இந்த தொழில் நுட்பத்தில் சில குறைபாடுகளை முன்வைக்கின்றனர் சைபர் செக்யூரிட்டி வல்லுனர்கள்.

1. இதில் இணைய வழி ரகசிய கோட் பரிமாற்றம் நடைபெறுவதாலும், சர்வர்களில் அனைத்து கோட்களும் சேமித்து வைக்கப்படுவதாலும் ஹேக்கர்கள் தாக்குதலுக்கு குறியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

2. படத்தின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பது வகுக்கப்படவில்லை. குறைந்த ரெசல்யூஷன் கேமராக்களில் படம் எடுத்தால் சரியாக ஸ்கேனாகுமா என்பது தெரியவில்லை. இரண்டு கோட்களும் மேட்ச் ஆனால்தான் பண பரிமாற்றம் முடியும். படங்கள் சரியாக ஸ்கேன் ஆகாமல் கோட் பொருந்தவில்லை என்றால், அதற்கு மாற்று என்ன என்பதும் தெளிவாக விளக்கப்படவில்லை.

3. நாக்கு தள்ளத் தள்ள ஷாப்பிங் செய்துவிட்டு வருபவர்கள் டங் அவுட் செல்ஃபி எடுக்க நேரிடும். பட்ஜெட்டுக்கு அதிகமாக செலவானால் ஆங்ரி செல்ஃபி எடுக்க நேரிடும். இப்படி அஷ்ட கோணலாக மாறும் முகத்தை இந்த தொழில்நுட்பம் புரிந்து கொள்ளுமா என்பதும் புரியாத புதிர்.

நொடிக்கு நொடி மாறிவரும் டிஜிட்டல் உலகில் நம் பணத்தை பாதுகாக்க பல தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. எத்தனை பூட்டுகள் போட்டாலும் கள்ள சாவி போட்டு திறக்க ஹாக்கர்கள் அப்கிரேட் ஆகிக் கொண்டே இருக்கின்றனர். இது போன்ற நிலையில் பல நிறுவனங்கள் இணைய பாதுகாப்புக்காக பயன்பாட்டாளர்களின் கைரேகை, கண் அசைவு போன்ற பையோ மெட்ரிக் சிஸ்டங்களை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.
கடந்த மாதம் இங்கிலாந்தை சேர்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்று, ஈமோஜிக்களை ரகசிய எண்ணாக பயன்படுத்தும் முறையை கொண்டு வந்தது. இதயத் துடிப்பு, டிஎன்ஏ, மூளையின் அலைகள் போன்றவற்றை பாஸ்வேர்டாக பயன்படுத்த, படிப்படியாக ஆராய்ச்சிகள் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,  மாஸ்டர்கார்டு போன்ற நிறுவனங்களின் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையே...
[6:52 AM, 7/9/2015] +91 95516 56551: கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?                                                  நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டு விடலாம். அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.


எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுகொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.


கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?


வட்டியில்லா கடன் காலம்


கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.


மினிமம் தொகை


மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம் கணக்கிடப்படும்.


பணமாக எடுத்தல்


கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 பணம் எடுத்தால் அதற்கு ரூ. 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்ட ணமாக இருக்கும். மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் 35 % முதல் 40% என்கிற அளவில் இருக்கும்.


இஎம்ஐ வசதி


கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.


கடன் அளவு


நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம்.


ஆஃபர்கள்


பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் 5 % முதல் 10% வரை கேஷ் பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தெளிவு வேண்டும். பண்டிகை கால போனஸ் கிடைத்து அதை பில்லிங் தேதியில் கட்டிவிட முடியும் என்றால் துணிந்து வாங்கலாம். ஆனால் போனசை செலவு செய்துவிட்டு பண்டிகை ஆஃபர்களில் அள்ளினால் சிக்கல்தான்


கேஷ் பாயிண்ட்ஸ்


கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. ரூ. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும்.

சரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்.


அனுமதிகளில் கவனம்


தேவை என்ன என்பதைப் பொறுத்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஓகே சொல்லவும். கிரெடிட் கார்டு வாங்கும்போது கூடவே சில சலுகை கொடுக்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லலாம். ஆனால் அவசியமிருந்தால் மட்டுமே உடன்படவும். ஒரு வருட மருத்துவக் காப்பீடுக்கு அனுமதி கொடுத்திருப்போம். ஆனால் அடுத்த ஆண்டும் உங்களுக்கு அறிவிக்காமலேயே பணத்தை பிடித்திருப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் பொருளாதார நிலைமை குறித்து கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். எனவே ஆஃப்ஷன்களில் தெளிவு வேண்டும்.


திரும்ப ஒப்படைப்பது


கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து நோ டியூ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.


சிபில் எச்சரிக்கை


நவீன வசதிகள் நமது வாழ்க்கைத் தரத்தை மாற்றலாம், ஆனால் அதை கையாளுவதில் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் வேண்டும். கடனைக் கட்டாமல் சிக்கல் ஏற்படுத்தினால் நமது பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். அது பிற வகையில் நமது கடன் வாங்கும் மதிப்பைக் குறைத்து விடும். தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிடும்போது சிக்கலாகிவிடும்.


வருமானத்தையே செலவு செய்கிறோம்


கிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்கள் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதா அல்லது கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வதா என்பதை முடிவு செய்து கொண்டால் கிரெடிட் கார்டு நல்லதா கெட்டதா என்பது விளங்கிவிடும்.



கிரெடிட் கார்டு - 10 டிப்ஸ்கள்


1.பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.

2.ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வேர்டு கொடுப்பது பாதுகாப்பு.

3.கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும்.

4.கேஷ் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

5.ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என பரிமாற்றத்தை தவிர்க்கவும்.

6.கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நிதி நிர்வாகத்தில் நீங்கள் வீக்.

7.பில்லிங் தேதியை தவற விட்டால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சறுக்கலில் முடியலாம்.

8.குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் பணத்தைக் கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி என கூடுதலாக கட்ட வேண்டும்.

9.கிரெடிட் கார்டு கடனை கட்டவில்லை எனில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிக்கலாகும்.

10.கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் கிரெடிட்கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து அதன் செயல்பாடுகளை முடக்கிவிடவும்.
[5:49 AM, 7/10/2015] +91 95516 56551: நீங்க சரியா சாப்பிடுறீங்களா?                                                                               நாடி சமன்படுத்துதல் மருத்துவர், உமா வெங்கடேஷ்: நம் உடல், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூதங்களால் ஆனது. நம் நாக்கிலேயே, பஞ்சபூதங்களும் உள்ளன. திடீரென காரமாக சாப்பிடத் தோன்றினால், நம் உடம்பில், காற்றின் அங்கம் குறைவாக உள்ளதென அர்த்தம். இதே போல், காரம், துவர்ப்பு காற்றின் அங்கம்; இனிப்பு நிலத்தின் அங்கம்; ஆகாயம் - புளிப்புத் தன்மை, நீருக்கு - உப்பு, நெருப்புக்கு - கசப்பு. பஞ்சபூதங்களின் என்ன தன்மைகள், நம் உடம்பில் குறைகிறதோ, அது தேவை என்பதை, நம் நாக்கு சொல்லும்.சாப்பிடும் போது, மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும். வாயின் இருபுறமும், உணவை நன்றாக பரப்பி மெல்ல வேண்டும். அப்போது தான், உமிழ்நீர் நன்றாக ஊறி, உணவுடன் இரண்டறக் கலந்து, செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் குடித்து, 15 நிமிடம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்துத் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, நன்றாக வாயில் பரப்பி, அமைதியாக ருசித்து குடிக்க வேண்டும்.எந்த ஒரு காய் சாப்பிட்டாலும், அடுத்து குறைந்தபட்சம், 11 நாட்களுக்கு அதை ஒதுக்க வேண்டும். ஒரே காய்கறியை தொடர்ந்து சாப்பிட்டால், ஒரே விதமான சத்து தான் உடலுக்கு கிடைக்கும். இன்று, உணவில் துவரம் பருப்பு சேர்த்தால், நாளை பாசிப் பருப்பு சேர்க்க வேண்டும்.சாப்பிடும் போது, இரண்டு உதடும் சேர்ந்தே இருக்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே உணவு நொறுங்க வேண்டும். சாப்பிடும் போது பேசினால், காற்று உள்ளே போய், உணவுடன் கலந்து, வாயு சேர்ந்துவிடும்.காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு, அரை எலுமிச்சம்பழம், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில், உடலுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, லேசான கசப்பு கிடைக்கும். இது, உடம்பின் பஞ்சபூத சக்தியை ஈடு செய்யும்.காலையில் சத்தான உணவு, மதியம் மிதமான உணவு, இரவு மிக லேசான உணவு. இது தான், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்!                 நன்றிதினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக