ஞாயிறு, 20 மார்ச், 2016

[6:19 PM, 6/26/2015] +91 95516 56551: அறிவு என்றால் என்ன?
பகுத்தறிவு என்றால் என்ன?
அது எப்படி வருகிறது?
அறிவு என்பது அறிந்து கொள்வது (எது சரி, எது தவறு என்று தெரிந்து கொள்வது).
சரி அந்த அறிவு எப்படி நமக்கு கிடைகிறது?
அறிவு என்பது தானாக வருவதில்லை ஒரு ``கட்டாய தேவை`` என்பதின் மூலம் ``அனுபவம்`` என்ற செயலின் வழியாக நமக்கு கிடைக்கிறது.
தேவை என்பது பசி, தற்காப்பு, வசதியை மேம்படுத்தல் போன்றவற்றை சொல்லலாம்,,,
பகுத்தறிவு

அறிவு

அனுபவம்

தேவை
(பசி என்ற ஒரு தேவை எல்லை என்றால், எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்ற அறிவு நமக்கு கிடைத்திருக்காது)
அதாவது ``தேவை`` என்ற ஒன்று இல்லை என்றால், ``அறிவு`` என்ற ஒன்றுக்கு அவசியமில்லாமல் ஆகி இருக்கும்.
விலங்குகளின் தேவைகள் பெரும்பாலும் பூர்த்தி அடைந்து விடுவதால், அவைகளின் அறிவு அதிகமாக வளரவேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது....
இதை விளக்க ஒரு உதாரணம்:
......................................................
அரளி காயை தின்றால் நாம் இறந்து விடுவோம், என்ற `அறிவு` நமக்கு கிடைத்தது, எப்படி?
நமக்கு முன்னர் யாரோ ஒருவர், அதை தின்று இறந்ததால் தானே?
சரி அதை ஏன் அவர் உட்கொள்ள நேர்ந்தது?
பசி என்ற `தேவை`.
அதாவது `பசி` என்ற `தேவை` மூலம் `அனுபவம்` என்ற செயல் மூலம் நாம் தெரிந்து கொண்டோம்.
அரளி காய் தின்றால் இறப்பு வரும் என்று தெரிந்து கொண்டது அறிவு என்றால்,
நாம் புதிதாக ஒரு காயை பார்த்தல், உடனே நமது சிந்தனை `இந்த காய் அரளி காயை போன்று விஷம் ஆனதா, உன்ன தகுதியான` என்று சிந்திக்கிறோம்... இது ``பகுத்தறிவு``.
மதவாதிகள் அறிவை இறைவன் கொடுத்தார் என்பார்கள், அப்படி அவர்கள் சொல்லுவதற்கு காரணம் அவர்களுக்கு `அறிவு என்றால் என்ன` என்பதே தெரியவில்லை என்று அர்த்தம்...
[6:20 PM, 6/26/2015] +91 95516 56551: குருவிடம் சென்ற சீடன் ஒருவன்,
''விதி என்றால் என்ன?
பகுத்தறிவு என்றால் என்ன?''
என்று வினவினான்.

குரு சீடனைப் பார்த்து, ''உன்
வலது காலைத் தூக்கு!'' என்றார்.
சீடன் வலது காலைத்
தூக்கியபடி நின்றான்.

''சரி. இப்போது நீ தூக்கிய
வலது காலை கீழே இறக்காமல்
இடது காலையும் தூக்கு!'' என்றார் குரு.

''அது எப்படி முடியும்?''
என்று கேட்டான் சீடன்.

அதற்கு குரு, ''இரண்டு காலையும்
தூக்கினால் விழுந்துவிடுவேன் என்று
தூக்காமல் இருந்தாயே...
இதுதான் பகுத்தறிவு.
இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில்
தூக்கி நிற்க முடியாத நிலை இருக்கிறதே...
இது தான் விதி!'' என்று விளக்கம்
சொன்னார்.
[6:28 PM, 6/26/2015] +91 95516 56551: எனது சந்தேகம் பெரியார் ஆசைப்பட்ட பகுத்தறிவு உண்மையில் வளர்கிறதா என்பது தான்!
பகுத்தறிவு என்றால் என்ன? கேள்வி கேள் என்பது தானே! சொன்னது பெரியாராக இருந்தாலும் ஏன் இதை நான் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா!
ஆனால் பெரியாரை கடவுளாகவே மாற்றும் திட்டம் அல்லவா இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியார் ஆசை பட்டது மக்களிடம் விழிப்புணர்வு.
ஜாதி மத பேதமில்லாத சமநிலை. பெரியாரை பற்றி படிக்கும் முன்னறே மத அடிப்படையில் நம்பிக்கை இல்லாத நான். சிறு வயதிலிருந்தே சாமி கும்பிட மாட்டேன் என்று வீட்டில் சண்டை போட்டிருக்கிறேன், அப்பொழுது இவன் என்ன பெரியார் மாதிரி பேசுறான் என்ற வார்த்தையால் ஈர்க்க பட்டு தான் பெரியாரை படித்தேன், ஜாதி மத கொள்கைகளில் என்னை போலவே அவரும் நம்பிக்கையற்று இருந்தார் என்பதற்காக அவரை முழுமையாக ஏற்கவோ அவரின் கொள்கைகளை பரப்புவதற்கோ என்ன இருக்கிறது.யாருக்காவது வாழ்க கோஷம் போடுவதோ, ஒழிக கோஷம் போடுவதோ ஆட்டு மந்தை கூட்டம் அல்லவா! இதையா பெரியார் விரும்பினார்.

மூட நம்பிக்கை என்பது ஏதாவது ஒன்றை பிடித்து தொங்கி கொண்டிருப்பது! பெரியாரின் கொள்கைகளை மட்டுமே பிடித்து தொங்கி கொண்டிருப்பதற்கு வேறு என்ன பெயர் இருக்க முடியும். கடவுள் நம்பிக்கை என்பது நம்முடைய தனிப்பட்ட சுதந்திரம்!
என்னிடம் யாராவது வந்து கடவுள் இருக்கிறார் என்று வாதம் செய்தால் இல்லை என்று வாதிட எனக்கு உரிமை உண்டு. வாதிட மட்டுமே சண்டை போட அல்ல. கடவுளை பற்றிய வாதம் முடிவில்லாதது என்றும் அனைவருக்கும் தெரியும், இருந்தும் ஏன் அதில் நேரத்தை செலவிட்டு செய்ய வேண்டிய வேலைகளை புறக்கணிக்க வேண்டும்.

ஆன்மிக வாதியான விவேகானந்தர் கூட மதவாதிகள் கிணற்று தவளைகள் என்று குறிப்பிட்டு உள்ளார். கடலில் இருப்பவர் நாம். நாம் அனுபவிக்க கடலில் நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு கிணற்றில் குதித்து சண்டை போடுவது தேவையா?
[9:37 PM, 6/26/2015] ஜெயபால் (prod): A man asked a sculptorist:“How do U make such BEAUTIFUL idols from stone?”

He replied: I idols & images are already hidden there I  remove unwanted stone only..

Your happiness Is hidden within u, Just REMOVE ur worries.

Keep smiling and be happy2:20
[8:41 AM, 6/27/2015] +91 95516 56551: நமது வாட்ஸ் அப்பில் தனி மனித விமர்ச்சனம் மற்றும் ஆபாசமான செய்திகள, படங்கள் காணொளி அனுப்புவதை தவிர்க்கவும்  பொது வன நடப்பு செய்திகள் இலக்கியம், சினிமா விமர்ச்சனம் நகைசுவை, அரசியல், அறிவியல் செய்திகள்.கணினி செய்திகள். மருத்துவ செய்திகள் மற்றும் விழிப்புனர்வு கட்டுரை கள்  ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளவும்
[9:12 AM, 6/27/2015] +91 95516 56551: நமது வாட்ஸ் அப்பில் தனி மனித விமர்ச்சனம் மற்றும் ஆபாசமான செய்திகள, படங்கள் காணொளி அனுப்புவதை தவிர்க்கவும்  பொது வன நடப்பு செய்திகள் இலக்கியம், சினிமா விமர்ச்சனம் நகைசுவை, அரசியல், அறிவியல் செய்திகள்.கணினி செய்திகள். மருத்துவ செய்திகள் மற்றும் விழிப்புனர்வு கட்டுரை கள்  ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளவும்
[9:33 AM, 6/27/2015] +91 95516 56551: தத்துவமும் அறிவியலும் -                                                                                                                      ஓர் ஒப்பீடுஆரம்ப உலகில் அறிவியலும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. நாடோடியாக அலைந்த மனிதன் இயற்கையை நேசிக்க, அவதானிக்க தொடங்கியதிலிருந்தே தத்துவம் பிறந்து விட்டது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, இயற்கைக்கு அப்பால் உள்ள உறவு, உலகின் தோற்றம், மனிதனின் பரஸ்பர உறவுகள் குறித்த தேடல் இவை அனைத்தும் தத்துவத்தின் பிறப்பிற்கு ஆதாரமாக அமைந்தன. அறிவியல் உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. கடந்து போன அனுபவத்தை தற்கால மனிதன் பரிசோதனை செய்யும் போது அறிவியல் பிறக்கிறது என்றார் விஞ்ஞானி பெய்மென் ஆரம்பகாலத்தில் தத்துவாதியும், அறிவியலாளரும் ஒருவரே. அவர்களுக்குள் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்நிலையில் சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளாட்டோ, தைலமி, ஹெரோடடஸ் போன்றவர்கள் விஞ்ஞானிகளாகவும் , தத்துவவாதிகளாகவும் இருந்தனர்.


முதல் தத்துவ கோட்பாடு எது என்பதில் தெளிவான தரவுகள் இல்லை. இருந்தும் உலகம் என்பது தண்ணீரை தவிர வேறில்லை என்பதே முதல் கோட்பாடாக அறியப்படுகிறது. இதனிலிருந்து தான் அறிவியலே பிறந்தது என்கின்றனர் சிலர். அறிவியலானது உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. எதையும் நடைமுறை உண்மைகளோடு பொருத்தி பார்ப்பதே அதன் வேலை. இதனடிப்படையில் ஒரு விஞ்ஞானி தான் உத்தேசிக்கிற கோட்பாட்டை , அதற்கே உரிய நிரூபண செயல்முறைகளோடு, அவதானத்தின் அடிப்படையில் விளக்குவார். தத்துவம் போன்று வெறும் தர்க்கத்தை வெளிப்படுத்தி விட்டு அது நகர்ந்து விடுவதில்லை. இயற்கையின் இயக்கத்தை,  சில தர்க்கங்களாக விவரித்து விட்டு சென்றது. இந்நிலையில் ஆரம்பகால அறிவியலில் வானவியலே முக்கிய இடம் பிடித்தது. இடி, மின்னல்,மழை, வெயில் போன்ற இயற்கையின் அனிச்சை செயல்பாடுகளை மனிதன் ஆராயத்தொடங்கிய போது வானவியல் பிறந்தது. இந்த வானவியல்  உலகில் தோன்றிய எல்லா நாகரீகங்களிலும்  அதிக தாக்கம் செலுத்தியது. மேலும் மருத்துவம், கணிதம், வேதியியல் ஆகியவையும் ஆரம்பகால அறிவியல் சிந்தனைகளில் அதிக தாக்கம் செலுத்தின. அறிவியலின் ஒரு பகுதியான கணிதத்தை மனித கருத்தாக்கத்தின் வரைவியல் என்றனர் கிரேக்கர்கள். மேலும் அரேபியர்களும் வரலாற்றில் அறிவியலுக்கு கணிசமான பங்களிப்பை செலுத்தி இருக்கின்றனர். குறிப்பாக வானவியல், மருத்துவம் மற்றும் கணிதம் ஆகிய துறைகளுக்கு அவர்களின் பங்களிப்பு அபாரமானது. கி.பி 9 ம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரை  ஈராக் தலைநகர் பாக்தாதில் அறிவியல் ஆராய்ச்சி மையம் அமைத்து மேற்கண்ட துறைகளை வளர்ச்சி பெற செய்தனர். அவ்வகையில் கணிதத்தில் இயற்கணிதமும், ஒழுங்கணிதமும் அவர்களின் கண்டுபிடிப்பே. அங்கிருந்து அவர்கள் மேற்குலத்தோடு தங்கள் கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்திக்கொண்டனர். இந்நிலையில் அறிவியலுக்கும், தத்துவத்திற்கும் வேறுபாடு இல்லாத காலத்தில் அறிவியலாளர்கள் எல்லாம் இயற்கை தத்துவவியலாளர்கள் (Natural philosophers)என்றழைக்கப்பட்டனர். மேலும்  ஒவ்வொரு செயல்பாடும் மகிழ்ச்சியையும் அதற்கான விலையையும்  உட்கொண்டிருக்கிறது என்ற சாக்ரடீஸின் கோட்பாடு அன்றைய காலகட்டத்தின் சமூக எதார்த்தம். மாறிவரும் காலநிலைகளுடன் கூட அதனை தொடர்பு படுத்த முடியும். இது  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழி வகுத்தது.

நவீன அறிவியல் மற்றும் தத்துவம் என்பது மத்தியகிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் தொடர்பு கொண்டது. 16 ஆம் நூற்றாண்டு ஐரோப்பா நவீன அறிவியலுக்கான சிறந்த தொடக்கத்தை அளித்தது. நியூட்டன், கோபர்நிகஸ் மற்றும் கலிலியோ போன்றவர்கள் அதற்கான தொடக்கத்தை அளித்தனர். மரங்களிலிருந்து பழங்கள் கீழே விழுவதையும், கீழிருந்து மேலே எறியப்படும் பொருள் கீழே விழுவதையும அடிப்படை கேள்வியாகக்கொண்டு அதற்கான விடையை தேடிய அறிவு தோற்ற செயல்பாடு நியூட்டனால் புவிஈர்ப்பு விசையாக அறியப்பட்டது. அதுவரை மனிதர்கள் அவையெல்லாம் கீழே விழுந்து ஓய்வெடுத்துக்கொள்கின்றன என்று நினைத்தார்கள். ஆனால் அவை ஓய்வெடுத்துக்கொள்வதில்லை. மாறாக இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையை நியூட்டன் போன்றவர்கள் வெளிக்கொணர்ந்தார்கள்.எல்லா பொருட்களுமே இயக்கநிலையை உடையவை தான். அவை குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகின்றன. மேலும் அளவு மாறுபாடே தர மாறுபாடாகிறது. (Quantity will become as quality)  இந்நிலையில் கோபர் நிகஸின்  அறிவியல் கோட்பாடுகள் அதுவரை பிரபஞ்சம் குறித்த ஐரோப்பாவின் நம்பிக்கையை பெருமளவில் தகர்த்தன. சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்றும், உலகம் தட்டை என்றும் நம்பியிருந்த மனிதர்களின் சிந்தனையை கோபர்நிகஸின் கோட்பாடுகள் பெருமளவில் மாற்றின. உலகம் உருண்டை என்றும், பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்றும் உறுதியாக கோபர்நிகஸ் முன்வைத்தார். இதன் காரணமாக ஐரோப்பிய மத ஆதிக்கவாதிகளால் கொல்லப்பட்டார். பிந்தைய கட்டத்தில் இதனை அடிப்படையாக வைத்து மெகல்லன் கடல்வழி பயணம் மேற்கொண்ட போது உலகம் தட்டையாக இருப்பதால் எப்படி இவர் திரும்பி வர முடியும் என்று ஒருசாரார் கேள்வி எழுப்பப்பட்டதையும் இங்கு குறிப்பிடவேண்டியதிருக்கிறது.  கலிலியோ இதன் தொடர்ச்சியே. நவீன இயற்பியலின் தந்தையாக கலிலியோ அறியப்படுகிறார். வானவியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதில் கலிலியோவிற்கு பங்குண்டு. தொலைநோக்கி மற்றும் கோள்களின் இயக்கம் குறித்த முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். எல்லா உண்மைகளும் ஒரு தடவை கண்டுபிடிக்கப்பட்டால் அவை புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிதான ஒன்று என்றார். கலிலியோ தொடங்கி வைத்த இயற்பியல் மற்றும் வானவியல் சிந்தனை முறைகள் உலகம் முழுவதும் நவீன அறிவியலில் பெரும் புரட்சியை நிகழ்த்தின. மேலும் டார்வினின் உயிரியல் கோட்பாடும் உலக அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. மனித உயிர்கள் எவ்வாறு உருவாயின? எவ்வாறு அவை பெருக்கமடைகின்றன? தனி உயிர் எவ்வாறு பல்கி பெருகுகிறது என்பன போன்ற சிந்தனைகளை டார்வின் முன்னெடுத்தார். அறிவியல் சிந்தனைமுறை உருவான சமகாலத்தில் ஐரோப்பாவில் தத்துவவியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அறிவொளிகாலம் என்றழைக்கப்பட்ட தருணத்தில் அறிவுவாதமும், அனுபவவாதமும் உருவானது. கணிதவியலாளரான தெகார்தே  மற்றும் தத்துவவாதியான பேகன் ஆகியோர் மேற்கண்ட சிந்தனை முறைகளை உருவாக்கினர். நான் சிந்திக்கிறேன். அதனால் இருக்கிறேன் என்று அறிவுவாதிகளும், புலன் அனுபவங்கள் தான் மனித அறிவை, செயல்பாட்டை தீர்மானிக்கின்றன என்று அனுபவவாதிகளும் முன்வைத்தனர். இன்றைய ஐரோப்பாவின் பகுத்தறிவு சார்ந்த நவீன சிந்தனைமுறைகளுக்கு தொடக்கம் இது தான்.




 அறிவியல் கோட்பாடுகளின் நடைமுறை ரீதியான பயன்பாடு தான் பொறியியலாகவும், தொழில்நுட்பமாகவும் அறியப்படுகிறது. வரலாற்றில் கற்காலம் என்றழைக்கப்பட்ட தருணத்தில் கற்கள், மரங்களை கொண்ட கைக்கருவிகள் மற்றும் நகர்வை அடிப்படையாகக்கொண்ட சிறிய இயந்திரங்கள் போன்றவை மனிதனால் உருவாக்கப்பட்டன . இது மேலும் பரிணாமடைந்து கற்கள் மற்றும் மரத்தால் ஆன பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது நவகற்காலமாக அறியப்பட்டது. நவீன அறிவியலின் தொடக்கம் 18 ஆம் நூற்றாண்டில் நவீன தொழில்நுட்பத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. தொழிற்புரட்சியானது அதுவரை நிலவிய சமூக கட்டமைப்பை மாற்றியது. அச்சு இயந்திரத்தின் வருகை மனித சமூகத்தின் அறிவு தளத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது.   பொறியியல் என்பது ஆரம்பகாலத்தில் கட்டுமான துறையில் தான் பயன்படுத்தப்பட்டது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை பொறியியல் என்பது கட்டுமானத்தை குறித்தது. அதே நேரத்தில் தகவல் தொடர்பு என்பது போக்குவரத்தை குறித்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இது பல்வேறு துறைகளுக்கும் பரவியது. இதில் கம்ப்யூட்டரின் வரவு மிக முக்கியமானது. உலகின் போக்கை தீர்மானித்ததிலும், சராசரி மனித வாழ்க்கையின் பாங்கை மாற்றியதிலும் கம்ப்யூட்டர்  பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது. இன்றைய காலத்தில் உலகம் இதனடிப்படையில் தான் இயங்கி வருகிறது.

தத்துவம் மற்றும் அறிவியலுக்கு இந்தியா புராதன காலத்திலிருந்தே மிகப்பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறது. ஆரியபட்டர் தொடங்கி, ஹோமிபாபா மற்றும் அப்துல் கலாம் வரை அதற்கு ஒரு நெடிய மரபு இருக்கிறது. ஆனால் பிரிட்டனின் காலனியாதிக்க காலகட்டத்தில் இது பெரும் தேக்கநிலையை அடைந்தது. சர்.சி.வி ராமன் மற்றும் ராமாநுஜம் போன்றவர்கள் இருந்தும் உலக அளவில் காத்திரமான அறிவியல் பங்களிப்புகளை செய்யமுடியவில்லை. தற்போதைய இந்தியா வெறும் தொழில்நுட்ப மூளைகளை மட்டுமே உற்பத்தி செய்கிறது. தொழில்நுட்ப மூளைகள் எப்போதுமே தர்க்க ரீதியான மனத்திற்கு அப்பாற்பட்டவை. ஓர் இயந்திரத்தை விட அதிகம் உயர்ந்ததல்ல. அதே வேலையை மனித வடிவில் செய்யும் தன்மை கொண்டவை. மனிதனின் படைப்புத்திறனை அழித்து விட்டு இயந்திரமயமான வாழ்க்கைக்கு அவனை மாற்றும் திறன் கொண்டது.  ஆக இன்றைய இந்தியாவில் இயற்கை மற்றும் உயிரியல் அறிவியல் அனைத்துமே பயன்பாட்டு அறிவியலாக  (Applied Science)மாறி விட்டன.  கல்வித்துறையும் இதையே ஊக்குவிக்கிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பெருகி விட்ட நிலையில் அறிவியல் சார்ந்த படைப்புத்திறன் குறைந்து வருகிறது.  சுதந்திரத்திற்கு பிந்தைய 50 வருடங்களில் சொல்லும்படியான கண்டுபிடிப்புகள் எதுவுமே நிகழ்த்தப்படவில்லை. மிகப்பெரும் தொழில்நுட்பதிறன்களுக்கு, கண்டுபிடிப்புகளுக்கு  சுதந்திரமான இயற்கை அறிவியலே மிகப்பெரும் ஆதாரம். ஒரு நாட்டில் கணிசமான அளவிற்கு நிகழ்த்தப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்நாட்டின் மனிதவள குறியீடு அதிகரிப்பிற்கு காரணமாக அமைகின்றன. மனிதவளர்ச்சி நிலையின் அடிப்படையாகவும் அறிவியல் இருக்கிறது.

 தத்துவத்தில் கடந்த நூற்றாண்டு வரை இந்தியா குறிப்பிடதக்க நிலையை அடைந்தது. இன்றைய காலகட்டத்தில் ஐரோப்பாவை ஒப்பிடும் போது இன்னும் நிறைய தூரம் கடக்க வேண்டியதிருக்கிறது. ஐரோப்பிய வாழ்க்கைமுறையை நகலெடுத்து நாம் அவர்களின் இயந்திரவாழ்க்கையை உள்வாங்கிகொண்டிருக்கிறோம். மேம்போக்கான மனிதர்களாக படித்த மத்திய தரவர்க்கத்தினரை மாற்ற இவை துணைபுரிகின்றன. இங்கு மனிதவள அடிப்படையே தகர்ந்து விடுகிறது.  இந்நிலையில் இந்தியாவில் தத்துவம் வெறும் ஆன்மீக தளத்தோடு சுருங்கி விட்டது நம்மை பொறுத்தவரை பின்னடைவு தான். தத்துவம் என்பது ஒரு நாட்டில் அறிவு வளர்ச்சிக்கு, அதன் மனிதவள மேம்பாட்டிற்கு மிகவும் துணைபுரிகின்றது. இந்திய அரசானது அறிவியல் மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டியது அவசியம். அதன் மூலம் மட்டுமே அறிவு வளர்ச்சி பெற்ற, இந்திய சமூகத்தை உருவாக்க முடியும்.
[9:44 AM, 6/27/2015] +91 95516 56551: முதலாளித்துவம் என்றால் என்ன?
கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வங்கிகளைக் கொள்ளையடிக்க முயல்பவர்களிடம் இருந்து வங்கிகளைப் பாதுகாப்பதும் வங்கிகளை தமக்குச் சொந்தமாக வைத்துக் கொண்டு உலகையே கொள்ளையடிப்பவர்களைப் பாதுகாப்பதும்.
[11:16 AM, 6/27/2015] +91 95516 56551: முதலில் இந்த விவாதத்தை படிக்கவும்
சோசலிசம் என்றால் என்ன?
சோசலிசம் என்பது அனைத்து உற்பத்தி கருவிகள் , ஆலைகள்
அரசு ஆகியவை பாட்டாளி வர்க்கத்துக்கு சொந்தமாவதும் பாட்டாளிவர்க்கத்தால் உணர்வுபூர்வமாக விஞ்ஞான வழியில் நிர்வகிக்கப்படுவதும் ஆகும்
சோசலிசத்தில் எப்போது அடையப்பெறும் ?
அடிமையாக சுரண்டப்படுபவர்களாக பல்வேறு சாதியாலும் மத்தாலும் பிரிந்து கிடப்பவர்களான வெகுளியாக வாழும் இந்த
இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிவர்க்கம் ஆயுதம் தாங்கி போராடி
தனிசொத்துரிமையை ரத்து செய்து முதலாளி வர்க்கத்திடம் இருந்து அரசு, தனிசொத்து, ஆட்சி அதிகாரத்தை கைபற்றும் போது சோசலிசம் சாத்தியமாகும்
சோசலிசத்திற்கும் ,முதலாளித்துவத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ?
உழைப்பும் சமூக வயமாக மாறியது முதலாளித்துவத்தின் வெற்றி
அதாவது பெரிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான மக்களை இணைத்து நடத்தப்படும் ஆலைகள் ஆகியவற்றின் மூலம் உழைப்பு என்பது சமூகமொத்தத்தின் உழைப்பு என்பதை கொண்டு வந்தது முதலாளித்துவம்தான் ஆனால் இந்த மொத்த சமூக உழைப்பின் பயன் தனிநபரின் கையில் கொடுத்தது அதனுடைய முரண்பாடு அதை சோசலிசம் மொத்த சமூகத்துக்கும் மாற்றிவிடுகிறது
உற்பத்தி நடைமுறையில் சோசலிசத்துக்கும் ,முதலாளித்துவத்திற்கும் என்ன வேறுபாடு ? ஒரு உற்பத்தி நடைமுறை என்பது உற்பத்தி கருவிகள் உற்பத்தி சக்திகள் வினியோகம் ஆகியவற்றை கொண்டது .
முதலாளிட்துவ பாணியில் உற்பத்தி கருவி முதலாளிக்கு ந்தமாகும் (ஆலைகள் , கருவிகள்) உற்பத்தி சக்தியானது தொழிலாளிக்கு சொந்தமானதாகும் அதை விலைகொடுத்து முதலாளி வாங்குகிறான்
1.நாள் கூலி 2.மாத கூலி
வினியோகம் என்பது சந்தையை சார்ந்தது – சந்தை என்பது போட்டியில் நடப்பது .
உதாரணமாக ஆயிரம் பேர் வேலை செய்து எடுத்த ஒரு லட்சம் பனியன் களானது சந்தையின் போட்டியின் காரணமாக குறைந்த விலைக்கு போனால் அந்த நிறுவனம் மூடப்படுவதுடன்
தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது .
சோசலிசத்தின் உற்பத்தி கருவிகள் (ஆலைகள் உட்பட) அனைத்தும் தொழிலாளர்களுக்கு பாட்டாளி வர்க்கத்துக்கு சொந்தமானது .
ஒரு தொழிற்சாலையின் மொத்த உற்பத்தி திறன் கணக்கிடுவது அந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எட்டுமணி நேரத்துக்கு மிகாமல் வேலை செய்தால் உருவாகும் பொருட்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு அந்த தொழிற்சாலையின் யூனியனால் திட்டமிட்டு செய்யப்படும் பொருள் உற்பத்தியாகும் .
இங்கே தொழிலாளர்களே அந்த நிறுவனத்தை நடத்துவதால்
வேலை என்பது வெளியில் இருந்து திணிக்கப்படுவதாக இருக்காது அவர்களின் உணர்வு பூர்வமான விஞ்ஞான பூர்வமான் உழைப்பு என்பது வழங்கப்பட்டு பொருள் உற்பத்தியானது நடக்கும் .
மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதன் மொத்த உற்பத்தியை ஆகியவற்றை கூட்டினால் கிடைக்கும் கூட்டு தொகையே அந்த நாட்டின் அந்த நாளைய உற்பத்தி பொருள் ஆகும் இது கணக்கிடுவதும் திட்டமிடுவதும் மிக எளிதானதாகும் .
 இதற்கான மிக சாதாரணமான அடிப்படைகளை ஏற்கனவே முதலாளித்துவம் வழங்கிவிட்டது. ஏனெனில் எந்த ஒரு முதலாளித்துவ நிறுவனமும் அதன் ஒரு நாளைய உற்பத்தியையும் ஒரு மாதத்தைய உற்பத்தியையும் செலவிடப்படும் மனிதன் உழைப்பை கூலி வடிவிலும் கணக்கிடாமல் ஒரு நாள் கூட தொழிற்சாலையை நடத்தமுடியாது என்கிற போட்டியில் விளைவாக அதன் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டன ( இதை மட்டுமே மைய்யமாக கொண்டு இங்கே விவாதிப்பவர்களுக்கு இந்த பதில் போதுமானது என கருதுகிறேன் சுட்டி: ) இதற்கான கூலி என்பது தொழிலாளியின் வேலை நேரம் மற்றும் அவனது ஆற்றலுக்கானதாகவும் அதற்கேற்பவும் இருக்கும்.
சோசலிச சமூக அமைப்பில் இப்போதுதான் முதலாளித்துவத்தின் வயிற்றில் இருந்து பிறந்துள்ள குழந்தை என்பதால் அதன் மிச்ச சொச்சங்களும் வர்க்க போராட்டமும் இன்னும் இருந்து வரும்
கம்யூனிசம் என்றால் என்ன சோசலிசத்தில் இருந்து அது எப்படி எப்போது அடையப்பெறும்?
1.தனியார் சொத்துரிமை , சுரண்டல் ஆகியவற்றை சோசலிசம் ஒழித்து விடுகிறது பதிலாக சமூகத்தின் சொத்துரிமை
அதன் அடிப்படையில் மக்களின் சோதர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியை நிலைநாட்டுகிறது. தனியார் சொத்துரிமையில் இருந்து சமூகத்தின் சொத்து என்பது வளர முடியாது
( அரசுடைமை ஆக்கபட்ட தொழிற்சாலைகள் , சேவை நிறுவனங்கள் அரசின் கையில் இருக்கும் கனிம வளம் ஆகியவற்றை தனியாருக்கு கையளிப்பதன் மூலம் அரசு சொத்து தனி சொத்தாக மாற்றப்படும் தலைகீழ் நிலமையை இன்றைய இந்தியாவில் பார்க்கும் யாருக்கும் தனிசொத்து என்பது சமூக சொத்தின் நேர் எதிர் பாத்திரம் வகிப்பதை அறியமுடியும்)
2.மார்க்சிய கட்சியாளும் , சோசலிச அரசாலும் உணர்வு பூர்வமான நிர்வாகத்தின் மூலம் சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு செல்ல ஒரு சமூகம் தயாராகிறது
குறிப்பு: சோசலிச சமூகத்தில் தனிசொத்து ஒழிக்கப்பட்டாலும்
வர்க்க போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறவே செய்யும்
அந்த போராட்டத்துக்கு கட்சி பாட்டாளி மக்களை விஞ்ஞான பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் பண்பாட்டு ரீதியாகவும்
தயார் படுத்தியே தீரவேண்டும் ஏனெனில் இத்தனை நாள் ஆட்சியை , தனி சொத்தை அனுபவித்து வந்த சிறுபான்மை முதலாளித்துவ ஆளும் வர்க்கம் எந்த வகையிலாவது அதை மீட்டுவிட போராடும் .
2. கம்யூனிசத்துக்கான பொருளியல் தொழில்நுட்ப அடிப்படைகளை அமைப்பது மிக இன்றியமையாத தேவையாகும்
முதலாளித்துவத்தில் என்னதான் தொழில்நுட்ப அடிப்படைகள் வீச்சாக இருந்தாலும் அந்த தொழில்நுட்பங்களை உழைக்கும் வர்க்கம் அனுபவிக்க இயலாது . மேலும் கட்டற்ற போட்டி நிலவும் முதலாளித்துவத்தால் தொழில் நுட்பமானது மேலும் மேலும் ரகசியமாக குறுக்கப்படுகிறது (எப்போது ஒரு விசயம் ரகசியமாக குறுக்கப்படுகிறதோ அப்போது அதன் வளர்ச்சி தடைபடும்) – இத்தகைய ரகசியம் பேணுவதற்கு காரணமும் விளைவுமாக தனியார் லாபம் இருப்பதே காரணம்.
ஒரு உயர்தர கணினியையோ அல்லது உயர் தர செல்போனையோ கூட வாங்கும் வர்க்கம் பாட்டாளிவர்க்கமாக இருக்க முடியாது என்பது முதலாளித்துவத்தின் முரண்
சோசலிசத்தின் இந்த தொழில் நுட்ப அடிப்படைகளை இன்னும் அதிகமாக்குவதுடன்
மொத்த உழைப்பின் பயன் ஆனது சமூகத்திற்கே திருப்பி விடப்படுவதால் முன்பை காட்டிலும் பன்மடங்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதாட அடிப்படைகளை வெகு விரைவாகவும்
விஸ்தாரமாகவும் பெறமுடிவதால் – சமூக வேகமாக கம்யூனிசத்தை நோக்கி செல்லும்.
மேலும் விஞ்ஞானத்தை மனித இனத்திற்கு எதிராகநிறுத்தும் போக்கை விட செய்து விஞ்ஞானத்தை மனித இனத்தின் விடிவுக்காக அதன் நன்மைக்கு பணிசெய்ய வைக்க ஒரு சோசலிச சிந்தனை பெற்ற சமூகத்தால் மட்டுமே இயலும்.
3.சோசலிசத்தால் புடம்போடப்பட்ட ஒரு சமூகத்தில் வெறும் புறப்பொருட்களின்றி மனிதனின் அகவயமான சிந்தனையும் வளர்ந்து அவனது பாண்பாட்டு ரீதியான நோக்கங்கள் வளர்ச்சி பெறும் போது " சோசலிச மனிதன் " உருவாகும் போது
அதாவது சமூகத்தின் நலனே தன் நலன் என்பதை உணர்வு பூர்வமாக மனிதன் உணர்ந்து கொள்ளும் போது .
ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களது ஆற்றலுக்கேற்ப உழைப்பு பெறப்பட்டு -
ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கு ஏற்ப பொருட்களை பெற்று கொள்ளும் சமூகம் எனப்படும் கம்யூனிச சமூகம் வயப்படும் .
தற்போதைய முதலாளித்துவ தனிமனித நோக்கு நிலையில் இருந்து இது ஒரு கற்பனையாக அடைய விரும்பு ஒரு கனவாக தோன்றினாலும் .
இந்த லட்சியம் உணர்வுபூர்வமான செயல்பாட்டின் அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்து பார்க்கும் விஞ்ஞான பூர்வ அடிப்படையில் – தன்னை போல் பிறரை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஏற்றுகொள்ள கூடிய தத்துவமே.
இந்த கட்டுரை உழைப்பு, உபரி மதிப்பு, கூலி விலை லாபம்
பொருள்முதல் வாத்ம ,இயக்கவியல் பொருள்முதல் வாதம் என வரிசையாக மார்க்ஸ் எங்கெல்சால் கொடுக்கப்பட்ட கருவிகளின் அடிப்படையில் எழுதப்பட்டதே. மேலும் இவை ஒவ்வொன்றையும் கவனமாக கற்றால் மட்டுமே மேற்கண்ட கட்டுரையை பயனுடையதாக நீங்கள் கருத முடியும்
கற்றலும் –உழைப்பும் –கம்யூனிசத்தை பற்றிய பாடமும்
உழைப்பில்லாமல் கற்றல் இல்லை உழைப்பினால் தான் சமூகம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது . ஆகவே கம்யூனிச சித்தாந்தங்களை கற்றுகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அதற்கான உழைப்பை செலுத்திதான் கற்று கொள்ள முடியும் என்பதை உறுதியாக சொல்வேன் . அதை தவிர்த்து கம்யூனிசத்தை மேலோட்டமாக பார்த்து நானும் விமர்சிப்பேன் என கிளம்புபவர்கள் வீணர்களே இவர்களோட விவாதித்தலும் வீணே மேலும் இத்தகைய அக்கறை கொண்டோர் கம்யூனிசத்தை பேசும் எழுதும் நபர்களுக்கு தனிமடல் இட்டும் , புத்தகங்களை படித்தும் , விசயங்களை சேகரித்து மாதிரி கட்டுரைகளை எழுதி பார்த்தும் மிக சீரியசாக கற்று கொள்ள முன்வர வேண்டும்
விவாதத்தின் மூலம் கற்கலாம் என நினைப்போர் தவறு செய்பவர்களே தனக்கு யாராவது வாழைப்பழத்தை எடுத்து தோலை உரித்து ஊட்டவேண்டும் என நினைப்பவர்களே. இத்தகையவர்களால் அரைகுறையாக வீசப்படும் கேள்விகள் அவர்களின் அறிவைவிட அறியாமையை காட்டுகிறது என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் .
அறியாமை என்பது தவறல்ல ஆனால் அதை ஒரு தகுதியாக நினைப்பதே பெருந்தவறு .
உலகில் எங்கேனும் துன்பப்படுபவர்களை கண்டு உனது உள்ளம் கொதித்தால் நீயும் நானும் தோழனே என்கிற சேகுவேராவின் வார்த்தைகளுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன்.

--
தியாகு
[11:47 AM, 6/27/2015] +91 95516 56551: முனைவர் மு, தெய்வநாயகம் அவர்களுடைய கருத்துகளில் சில:
1,கடவுள் வேறு; மதம் வேறு
கடவுளை அறிவோம்;
மதங்களின் பிடியிலிருந்து விடுதலை அடைவோம்
மனம் மாறுதல் தேவையானது: மதம் மாறுதல் தேவையற்றது;
மதம் மாற்றுதல் தவறானது,
கடவுளை அனுபவிப்பவர் இம்மையிலும். மறுமையிலும் மகிழ்ந்திருப்பர்,
கடவுளை அறிவியல் வழியில் விளக்குவது தமிழர் ஆன்மவியல்
2,
”ஒருவருடைய செயலுக்குக் காரணம் அவருடைய சிந்தûனை:
ஒருவருடைய சிந்தûனைக்குக் காரணம் அவருடைய நம்பிக்கை:
ஒருவருடைய நம்பிக்கைக்குக் காரணம் அவருடைய கொள்கை:
ஒருவருடைய கொள்கைக்குக் காரணம் அவர் பின்பற்றும் மதம்,:
3,
“நன்மைக்கு நன்மை – மனித நிலை:
தீமைக்குத் தீமை – விலங்கு நிலை
நன்மைக்குத் தீமை – பேய் நிலை
தீமைக்கு நன்மை – தெய்வ நிலை
4,
இந்துத்துவம் வேறு; இந்து மதம் வேறு,
இந்துத்துவம் என்பது சாதி. இன ஏற்றத்தாழ்வைக் குறிக்கிறது:
இந்துமதம் என்பது சைவ. வைணவ சமயங்களாகிய தமிழர் சமயத்தைக் குறிக்கிறது,
5.
சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை
இந்தியாவின் பழமையான கொள்கை அல்ல,
ஆரிய பிராமணர்களால்
கி,பி, 7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்
உருவாக்கப்பட்ட கொள்கை .
[12:35 PM, 6/27/2015] +91 95516 56551: சாராயக்கடைக்குள் புகுந்த பெண்கள்                                                             புதுச்சேரி: புதுவை  கவுண்டம்பாளையத்தில் சாராயக்கடைக்குள் புகுந்த பெண்கள், அங்கிருந்த சாராய  பேரல்கள், பாட்டில்களை தூக்கி வீசி உடைத்தனர். சாராயத்தை ரோட்டில் கொட்டி  மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை  கவுண்டம்பாளையம் வழுதாவூர் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாராயக்கடை,  கள்ளுக்கடை செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல்  நிறைந்த இப்பகுதியில் உள்ள சாராயக் கடையால் அடிக்கடி விபத்துகள்  ஏற்படுகிறது. இந்த கடையை  அகற்றக்கோரியும், கடையை மீண்டும் ஏலம் விட கூடாது என்பதை வலியுறுத்தியும்  இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் பலகட்ட போராட்டங்கள்  நடத்தினர். ஆனால், சாராயக்கடை அகற்றப்படாத நிலையில், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நேற்று காலை சாராய கடையை அகற்றும் போராட்டம் நடந்தது. இதில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சாராயக்கடைக்குள் புகுந்த  பெண்கள், சோடா, குளிர்பான பாட்டில்கள் கொண்ட பெட்டிகளை கீழே தூக்கி போட்டு  மளமளவென உடைத்தனர். கேஸ் அடைக்கப்பட்டு இருந்ததால் பாட்டில்கள் வெடித்து  சிதறின. சாராய பேரல்களை அலேக்காக தூக்கி வீசி எறிந்தனர். இதனால் சாராயம்  கீழே கொட்டி ஆறு போல் ஓடியது. கல்லா பெட்டிகளையும் தூக்கி வீசினர். கேன்களை  ரோட்டுக்கு கொண்டு வந்தும் சாராயத்தை கொட்டியும் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கோரிமேடு போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.   பின்னர், ேபாராட்டக்காரர்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர்1:07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக