திங்கள், 21 மார்ச், 2016

[10:07 AM, 9/25/2015] +91 95516 56551: குடிநீருக்கும், வேளாண்மைக்கும் மட்டுமே முதலிடம்:                          .......                                                                                 .                                                                                                                                                                             ..                                                                                                                                                                 .                                                                                                                                  .                                                        மகாராஷ்டிர நீதிமன்றம்அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் குடிநீருக்கும், வேளாண்மைக்கும் மட்டுமே முதலிடம் என்று மகாராஷ்டிர நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

நாசிக்கில் நடைப்பெற இருக்கும் கும்பமேளாவில் கோதாவரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இந்த அணைக்கு மகாராஷ்டிர அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே பக்தர்கள் புனித நீராட முடியும்.ஆனால், இந்த அணையில் மக்களின் குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது என்றும், இந்த தண்ணீரைத் திறந்துவிட்டால் குடிநீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என்றும் மகாராஷ்டிர உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் ஒருவர் பொது நல மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மகாராஷ்டிர உயர் நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது என்று கூறி, ஏற்கனவே மகாராஷ்டிர அரசு திறந்துவிட்ட 4 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்டமைக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் நீரில் மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் வேளாண் தேவைக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கப்படும் என்றும், மீதம் இருந்தால் மட்டுமே பக்தர்கள் புனித நீராடலாம் என்றும் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. எனவே, இவ்வருடம் கும்ப மேளாவுக்கு வரும் பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராட நீர் இருக்காது என்று தெரிய வருகிறது.
[11:07 AM, 9/25/2015] +91 95516 56551: தமிழகம் மின் மிகை மாநிலமான கதை.
அல்லது
தொடரும் மி[ன்]கா ஊழல்.                                                                                    மிழகத்தில் தற்போதைய நிலவரப்படி மின் தேவை 12,500 மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது.  அனல், புனல் மற்றும் காற்றாலை  என மின்சார உற்பத்திக்கு பல வழிகள் இருந்தாலும், தனியாரிடம் கொள்முதல் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது மின் வாரியம்.
 கடந்த 2012ம் ஆண்டு, 5 ஆண்டுகளுக்கு 1000 மெகாவாட் வீதம்  மின் கொள்முதல் செய்யப்படும் என்றது;  அதுவே 2013ம் ஆண்டு கூறும் போது, 15 ஆண்டுகளுக்கு 1000 ஆயிரம் மெகாவாட் வீதம் ெகாள்முதல் ெசய்யப்படும்  என தெரிவித்து விட்டு, அதே ஆண்டில்,  3,300 மெகாவாட் அளவுக்கு மின் கொள்முதல் செய்ய 11 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க கொள்முதல் விதிகளை மீறி கையெழுத்தாகியுள்ளது. அதுமட்டுமின்றி சந்தை விலையை விட மிக அதிக விலை கொடுத்து இந்த 11 நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது.

இந்த  நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவை. இதில் எத்தனை நிறுவனங்களிடம் மின் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற முழு தகவலை மின்வாரியம் வெளியிட மறுக்கிறது.
பெறப்படாத மின்சாரத்துக்கும் யூனிட் ஒன்றுக்கு 2 செலுத்தி வருகிறது.
மின்சாரத்தின் சந்தை விலை  ஒரு யூனிட் மின்சாரம் 2.60 தான்; இந்த விலையில் தான் பல மாநிலங்கள் கொள்முதல் செய்கின்றன; தமிழக மின்வாரியம் இந்த 11 நிறுவனங்களுக்கு கொள்முதல் விலையாக யூனிட் 4.91 என்று  மிக அதிக விலை தருகிறது.

மேலும், இந்த 11 தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதற்காக  ஒழுங்குமுறை ஆணையத்திடம் தவறான பல தகவல்களை மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையமும் கண்டும் காணாதது போல் இருக்கிறது.
இதனால் மின்வாரியத்துக்கு 40 ஆயிரத்து 327 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஜிஎம்ஆர் நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்த மின்சாரத்தின் விலை யூனிட் 12.50 என்பதால் அதை வாங்க வேண்டாம் என்று ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டும், வாரியம் நீண்ட காலமாக வாங்கி வந்துள்ளது.
ஒப்பந்தம் முடிந்த பிறகு, மேலும் ஓராண்டுக்கு யூனிட் 12.50 விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதனால் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளது. இதை மின்வாரியம் தான் விளக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு தலைவர் காந்தி கூறினார்.

மின் கட்டணம் உயர வாய்ப்பு
மின்தேவை இல்லாத நேரங்களிலும் தனியார் நிறுவனங்களுடன் விதிகளை மீறி ஒப்பந்தம், சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு மின் கொள்முதல், கட்டண நிர்ணயம் மற்றும் மின் கொள்முதல் விஷயங்களில் மாநில அரசின் தலையீடு என்று பல சிக்கல்களில் தமிழக மின்வாரியம் தள்ளாடி வருகிறது.
இதே நிலை நீடித்தால் இதன் சுமை நுகர்வோர் தலைமேல் விடியும் எனவும், மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மின் பொறியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மின்கட்டணம் 15 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெண்டர் விதிமீறல் பின்னணி
தமிழக மின்வாரியம் 11 தனியார் நிறுவனங்களுடன் 3,300 மெகாவாட் மின்கொள்முதல் செய்ய கடந்த 2013ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த 11 நிறுவனங்களில் 3 நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தவை. 3,300 மெகாவாட்டில் 35 சதவீத மின்சாரத்தை இந்த 3 நிறுவனங்கள் விற்கின்றன.
மேலும், தமிழகத்தில் ரூ.57 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதாக முதலீட்டாளர் மாநாட்டில் இந்த மூன்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
[11:14 AM, 9/25/2015] +91 95516 56551: குமாரசாமி-தத்து போன்ற நீதிபதிகள் கவனத்துக்கு?                                  கடந்த 1947-லிருந்து 2015-வரை சுமார் 67 வருடங்களாக எந்த ஒரு ஊழல் நீதிபதியாவது விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் உத்தமர்களா?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அவர்கள் ”வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து பெங்களூரில் 50 கோடிக்கு வீடு கட்டியுள்ளார்” என உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் புகார் தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். யார் நடவடிக்கை எடுப்பது?
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், A.M.அகமதி, M.M.புன்சி, A.S.ஆனந்த், Y.K.சபர்வால் உள்ளிட்ட எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூசன், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர். இன்றுவரை அம்மனு விசாரிக்கப்படாத மர்மம் என்ன?
கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ”சகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டு வழக்கு நடந்து வரும்போது நீதிபதிகள் சி.டி.செல்வம், ராஜா, கர்ணன், தனபாலன்-வேலுமணி (Junior Judge) ஆகியோர் கிரானைட், தாதுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது ஏன்?
madurai-lawyers-rally-1தமிழக மக்களின் வேர்வை சிந்திய வரிப்பணம் ரூ 22,000 கோடியைக் கொள்ளையடித்தது பன்னாட்டு நோக்கியா கம்பெனி. எட்டப்பன்போல் ஸ்டே கொடுத்து, ஓடிப்போக உதவி செய்கிறார் நீதிபதி பி.ராஜேந்திரன். இது தேசத் துரோக குற்றமல்லவா?
உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் என்னாயிற்று?
நீதிபதி கர்ணன் மீது கொடுத்த லஞ்சப் புகார்களை உண்மையென ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம்- கர்ணன் பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்துவார் என்பதால்தானே?
சல்மான்கான் போல சாமானிய மக்களுக்கு உடனடி நீதி கிடைக்குமா?
அமித்சா வழக்கில் தீர்ப்புச் சொல்லி – முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஆளுநர் பதவி பெறுவது சரியா?
சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் தேர்வில் நீதிபதிகளின் உறவினர்கள், சாதிக்காரர்கள் நியமிக்கப்பட்டிருப்பது நீதியானதா?
வழக்கறிஞர்களுக்கு அடிக்கடி நேர்மையை உபதேசிக்கும் நீதிபதி பி.என்.பிரகாசு அவர்கள் கொள்ளையர்கள் வைகுண்டராஜன், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியத்திற்கு முன் ஜாமின் வழங்கியது மனுநீதிப்படியா?
நீதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் ஊழியர்களிடம் அத்துமீறல் செய்த நீதிபதி டாக்டர் தமிழ்வாணன் மீதான நடவடிக்கை என்ன?
கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அடிமைகளை விடக் கேவலமாக நடத்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதி வழங்கத் தகுதியானவர்களா?
சட்டத்தை விட, நியாயத்தை அதிகம் பேசும் நீதிபதி இராமசுப்பிரமணியன் அவர்கள் நீதித்துறையை சீரழித்த புரோக்கர் வக்கீல் சங்கத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதன் காரணம் என்ன?
ஹெல்மெட்டை மக்கள் மீது திணிக்கும் நீதிமன்றம் டாஸ்மாக்கை மூட மறுப்பது சரியா?
நீதித்துறை மாண்பைக் கெடுப்பது – நீதிபதிகளின் ஊழல்- பாலியல் குற்றங்கள்-அரசு ஆதரவு தீர்ப்புகளா? இல்லை வழக்கறிஞர் போராட்டங்களா?
நீதித்துறை ஊழல் தொடர்பாக என்றாவது FULL COURT-ல் விவாதித்தது உண்டா?
நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தால் நீதிபதிகள் பயப்படுவதேன்?
நன்றி:வினவு.
[11:16 AM, 9/25/2015] +91 95516 56551:   பால் விலையை குறைக்கச் சொன்னால் இப்படி பன்னுறீங்க்களேமா
[11:17 AM, 9/25/2015] +91 95516 56551: குழந்தைகள் ஜட்டிய கூட விட்டு வைக்க கூடாதா ? குழந்தைகள் உச்சா ,கக்கா போனா அந்த அம்மா மூஞ்சில போகட்டும்னு எவனோ இந்த வேலைய பார்த்திருக்கான் பாருங்க
[11:18 AM, 9/25/2015] +91 95516 56551: ஆபத்தின் அறிகுறி_                            ஆர்.எஸ்.எஸ்,-பூர்வாசிரமம்                                                 .சமீபத்தில் தில்லியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பிரதமரும் அவரதுஅமைச்சரவை சகாக்களும் கலந்து கொண்டதும், அவர்களின் பணிகள் குறித்து ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆய்வு செய்ததும், பாஜக-வானது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம்தானே தவிர, வேறெதுவும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக்குடியரசை தங்களுடைய குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ ஆக மாற்ற வேண் டும் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளஅமைச்சர்கள் எப்படி முன்வந்தார்கள்என்றுநியாயமாகவே கேள்விகள் எழுந்துள்ளன.

ஆர்எஸ்எஸ் மாநாடு நடைபெற்றஅதே சமயத்தில் வேறு பல இடங்களில்நடைபெற்ற தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டங்களில் பங்கேற்றஅமைச்சர்கள் இவ்வாறான விமர்சனங் களைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
முந்தைய ஐமுகூ அரசாங்கத்தை ஒரு‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி பிரதமர் நரேந்திரமோடி குறை கூறிக் கொண்டிருப்பார்.
அதுபோல் அல்லாமல் இப்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் இயக்கம் நேரடி யாகவே தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்,வரலாற்றைப் பார்ப்போம்.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்ச ராக இருந்த சர்தார் பட்டேல்,  காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார்.
1948 பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் அறிக் கையில் அவர் கூறியிருந்ததாவது: “சங் பரிவாரத்தின் ஆட்சேபணைக்குரிய மற்றும் தீங்கு பயத்திடும் நடவடிக்கைகள் எவ்விதத் தடைகளும் இன்றி தொடர்ந்திருக் கின்றன.
சங் பரிவாரத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி இருக் கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்கள் மீது விதித்துள்ள தடையை விலக்கிக் கொள் வதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தைக் கோரி வந்தது.
1948 நவம்பர் 14 அன்றுபட்டேலின் உள்துறை அமைச்சகம் ஆர்எஸ்எஸ் தலைவர் எம்எஸ் கோல்வால்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து, ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது கோல்வால்கர் அளித்த பல வஞ்சகமான வாக்குறுதிகள் குறித்தும் அதில் குறிப்பிடப் பட்டிருக் கிறது.
“ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறு வதற்கும், அவர்களைப் பின்பற்றுவோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது,’’ என்று குறிப்பிட்டு, பட்டேல் தடையை விலக்கிட மறுத்துவிட்டார்.
ஆர்எஸ்எஸ் இயக்கம்ஒரு ‘கலாச்சார ஸ்தாபனமாக’ மட்டுமேஇருந்திடும் என்றும், ‘ரகசிய நடவடிக்கைகளைக் கைவிடும்’ என்றும், ‘வன்முறை யைத் துறந்திடும்’ என்றும் அரசாங்கம் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் மிகவும் வளைந்து கொடுத்து, ஏற்றுக் கொண்ட பிறகுதான், 1949 ஜூலை 11 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
அன் றையதினம் அது அளித்திட்ட அத்தனை ‘நிபந்தனைகளையும்’ இன்றைய தினம் அது அப்பட்டமாக மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆர்எஸ்எஸ் இயக்கம் அரசியல் அரங் கில் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையைப் புறந்தள்ளுவதற்காக, தனக்கென்று ஓர் அரசியல் கட்சியை மேற் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி யது.
 நேருவின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்திட்ட ஷியாமா பிரசாத்முகர்ஜியின் உதவியுடன் பாரதிய ஜனசங் கத்தை ஆரம்பித்திட தன் ஊழியர்களை அனுப்பி வைத்தது.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் தீன தயாள் உபாத்யாயா, அடல் பிகாரி வாஜ்பாயி, எல்கே அத்வானி மற்றும் எஸ்எஸ் பண்டாரி ஆகி யோர் அடங்குவர்.
 (ஆதாரம்: பாசு, தத்தா, சர்க்கார் மற்றும் சென், காக்கி அரைக் காலா டைகள்: காவிக்கொடிகள் 1993, ப, 48)
1977இல் ஜன சங்கம் ஜனதா கட்சி யுடன் இணைந்தது.
இந்திராகாந்தி கொண்டு வந்த அவசரநிலை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமைந்த மத்திய அரசாங்கத்தில் அதன் தலைவர்களும் அமைச்சர்களானார்கள்.
இந்தஅமைச்சர்கள் மற்றும் இவ்வியக்கத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து வெளியேற மறுத்ததாலும், தங்கள் ‘இரட்டைஉறுப்பினர்பதிவு’ பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மறுத்ததாலும், ஜனதா அரசாங்கம் கவிழ்ந்தது.
அதன்பின்னர் ஜனதாகட்சியுடன் இணைந்திருந்த முந்தைய ஜன சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தனியே வந்து பாரதிய ஜனதா கட்சியை அமைத்தார்கள்.
இவ்வாறுதான் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகவழுவாது செயல்பட்டுக் கொண்டிருக் கிறது.
இது இப்போது மிகவும் தெளிவாகி விட்டது.

2014 தேர்தலின்போது பாஜக மக்களுக்கு அளித்திட்ட பல வாக் குறுதிகளையும் அமல்படுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் ஆர்எஸ் எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சிநிரல் ஒன்றை மட்டுமே முன்னெடுத்துச் செல்ல தீவிர மாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்வதற்கான கட்டளையை அது மக்களிடமிருந்து பெறவில்லை.
புதியசாலை அல்லது புதிதாகப் பெயர் வைக்க வேண்டிய இடங்களில், ஒளரங்கசீப் சாலையை, முன்னாள் குடியரசுத் தலை வர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவைப் போற்றுவதற்காக மாற்றி இருக்கிறது. இதன்பின்னால் உள்ள மதவெறி நோக்கம் மிகவும் தெளிவானது.
மற்றவர்கள் பெயரை மாற்றினால் எதிர்ப்புகள் எழலாம் என்று காத்திருந்து தங்களுடன் ஒத்துப்போன அப்துல் கலாம் பெயரை  முஸ்லீம் பெயரை வைத்துள்ளனர்.
 இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று யார் குரல் கொடுத்தாலும், உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனைகள் கிடையாது, அந்த நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் அவ்வாறு கோரிய போதிலும்கூட, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட பின்னணியில், அவ்வாறு கூறுவோர் அனைவரும் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று முத் திரை குத்தப்பட்டார்கள்.
நாட்டிலுள்ள நீதிபரிபாலன அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றும், பாபர் மசூதி தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பம்பாயில் நடைபெற்ற வகுப்புவாதக் கலவரங்களில் ஈடுபட்ட கயவர்கள் மீது, ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அடையாளம் காட்டியபடி, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருபவர் கள் எல்லாம் ‘தேச விரோதிகள்’ என முத்திரைகுத்தப்பட்டார்கள்.
முஸ்லிம் பிரச் சனை ஓர் இந்தியப் பிரச்சனை என்று நினைவுகூர்ந்து அற்புதமானமுறையில் உரையாற்றியுள்ள நம் குடியரசுத் துணைத்தலைவர் அவ்வாறு பேசியமைக்காகக்குறிவைத்துத் தாக்கப்பட்டுக்கொண் டிருக்கிறார்.
நம் நாட்டின் மக்கள் தொகை யில் முஸ்லிம்கள் 14 சதவீதமாகும். அதாவது 180 மில்லியன். (18 கோடி பேர்)
உலகில் இரண்டாவது பெரிய அளவிலானவர்களாக, நாட்டின் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டின் சுதந்திர இயக்கத்தின் போதும், இப்போது நவீன இந்தியாவிலும், முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர் கள் நாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சீத்தாராம் யெச்சூரி
இந்தஉரை, நம் அனைவரையுமே உள்ளாய்வு செய்து, செயல்படத் தூண்டியிருக்கிறது. குடியரசுத் துணைத் தலைவரைக் கடிந்து கொண்டிருப்பதன் மூலம், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, மீண்டும் ஒருமுறை, இந்தியாவின் மிக உயர்ந்த அளவிலான நாகரிகத்தின் வீரியத்தையே, குலைத்திடக்கூடிய விதத்தில் துளையிட்டுக் கொண்டிருக்கிறது.
பல மதங்கள் சங்கமித்த இந்திய நாகரிக வளர்ச்சி ஆர்எஸ்எஸ்பரிவாரத்தால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. வளமான நம் நாகரிகத்தின் உள்ளடக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அதனைத்தகர்க்கக்கூடிய விதத்தில் அனைத்து விதமான முயற்சிகளிலும் இன்றைய தினம்இவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.
ஒளரங் கசீப் அன்றைய தினம் அனைவராலும் ‘பாது ஷா’ என்று அன்புடன் அழைக்கப் பட்டு சிம்மாசனம் ஏறியவர். வகுப்புவாதம் இன்று மனிதகுல நாகரிகத்தில் உயர்ந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நாட் டை அவ்வாறு மேலே செல்லாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது.
பாஜக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற மாபெரும் கயமைத்தனமாகும் இது.
ஆட்சியைப் பிடிப்பதற் காக அது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளுக்குத் துரோகம் செய்திருப் பதைவிட மிகவும் மோசமான விஷயம் இதுவாகும்.

                                                                                                                        -சீத்தாராம் யெச்சூரி
[11:26 AM, 9/25/2015] +91 95516 56551: அம்மாவின் ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்’
[11:26 AM, 9/25/2015] +91 95516 56551: அம்மா உணவகம் போல இது அம்மா சட்டமன்றம்
[11:33 AM, 9/25/2015] +91 95516 56551: மருந்துகளை, உரிமம் பெற்ற, சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.
பெட்டிக்கடைகளில் வாங்குவதை தவிர்க்கவும்.அவைகளை அதிகம் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.அல்லது காலாவதியானதாக இருக்கலாம்.

அவர்கள் மருந்து பொருட்கள் வினியொகிப்பவர்களிடம் வாங்குவதில்லை தெரிந்தோ,தெரியாமலோ  ஹார்லிக்ஸ் முதல் பான்பராக் வரை போலிகளை விற்கும் வியாபாரிகளிடம் இருந்துதான்  வாங்குகிறார்கள்.
மருந்துகளை வாங்குபவர்கள் மருத்துவரின் சீட்டின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே, வாங்க வேண்டும். மருந்து வாங்குவதில், ஒருபோதும் அவசரம் காட்டக்கூடாது.  பொறுமையுடன் வாங்க  வேண்டும்.
வாங்கிய மருந்துகளுக்கு, கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும்.
இது, போலி மருந்துகளை கண்டறிய உதவும்.
மருந்துகளை வாங்கியவுடன், அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை, நன்கு கவனிக்க வேண்டும்.
மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும், ஒப்பிட்டு பார்த்து, இவற்றில் ஏதாவது தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம், புகார் செய்ய வேண்டும்.
மருந்து வாங்கி வந்த பின்னர் கவனிக்க வேண்டியவை;
மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத, உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
குறிப்பிட்ட சில மருந்து வகைகளை மட்டும், குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அவற்றை, பிரிட்ஜில் வைத்திருக்க வேண்டும்.

மருந்துகளை குழந்தைகளுக்கு, எட்டாத உயரத்தில் வைக்க வேண்டியது அவசியம்.
மருந்துகளை சமையல் அறை, குளியலறையில் உள்ள, அலமாரிகளில் வைக்காதீர்கள்.
மற்றவரது நோயின் தன்மை, உங்கள் நோயை போன்று இருந்தாலும், நீங்கள் பயன்படுத்தும் மருந்துகளை, மருத்துவர் கவனிப்பின்றி அடுத்தவர்களுக்கு கொடுக்கக்கூடாது.
மருத்துவரின் சீட்டின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகள் இல்லை இதுவும் அதே போன்றுதான் என்று  கடைக்காரர்  வேறு மருந்துகளை தந்தால் மருத்துவரிடம் பேசிய பின்னர் அந்த மருந்துகளை வாங்குங்கள்..
அப்புறம் சின்ன,சின்ன தானாகவே சரியாகிவிடும் வியாதிகளுக்கும் அதிக அளவு சக்தி கொண்ட மாத்திரைகளை கடைகளில் நீங்களாகவே வாங்கி உபயோகிக்காதீர்கள்.தானாகவே சரியாகிவிடு தலைவலியை இது போன்ற மாத்திரைகள் வேறு வியாதியாக்கி விடும் அபாயம் உள்ளது.
[11:43 AM, 9/25/2015] +91 95516 56551: பிள்ளையார் உடைப்பு ! நீதிபதி தீர்ப்பு!!                                                                                          வரலாற்றைப் பார்ப்போம்.விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம்.
ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4-நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார்.
அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி, "இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே!
பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3-மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
periyar 381
உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்!
கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம்.
 பிள்ளையாரை உடைத்ததால் கடவுளை உடைத்ததாக ஆகாது. புத்தர் சொல்லி இருக்கிறார், உருவ வழிபாடு வேண்டாம் என்று.
நாங்கள் கடவுள் விலக வேண்டும் என்று சொல்லவில்லை. வேண்டும் என்பவர்கள் 98-சதவிதம் இருக்கலாம். சண்டையில்லை நமக்கு அத்தனைப் பேரோடும் கடவுள் இருப்பதாக நம்பினாலும் இத்தனை கடவுள் உருவங்கள் ஏன்?
அவைகளுக்கு பூசைகள் எதற்கு? கோவில்கள் எதற்கு?
அவைகளுக்கு வைப்பாட்டிகள் எதற்கு? குடும்பங்கள் எதற்கு? என்றுதான் கேட்கிறோம்.
ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வையுங்கள். நாங்கள் உருவ வழிபாடு வேண்டாம் என்று புத்தர் சொன்னதற்காகச் சொல்பவர்களல்ல. நாங்கள் சொல்கிற கருத்துக்களுக்கு இயல்பாகவே 2500-ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற புத்தர் கூறினார் என்று எங்கள் கருத்துக்கு ஆதாரம் காட்டுகிறோம்.
வக்கீல் தனது, Law report–ல் முன்னாளில் நடந்த தீர்ப்பை எடுத்துக்காட்டுவது போல காட்டுகிறோம்.
புத்தரும் உருவ வழிபாடு வேண்டாம் என்று கூறினார். புத்தர் சாமான்யரல்ல. உலக மக்களால் நன்கு மதிக்கப்படுகிறவர். புத்தர் உயர்ந்தவர், ஞானி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளனர். நம் இந்திய அரசாங்கமே ஒத்துக் கொண்டுள்ளது.
புத்தரது சக்கரம் தான் அரசாங்கக் கொடிகளில் உள்ள சக்கரம் - புத்தர் ஸ்தூபிதான் அரசாங்கத்தின் சின்னமாக இருக்கின்றது. புத்தர் நாளை கொண்டாடுவதற்கு என்று, 'புத்தர் ஜெயந்தி' என்று அரசாங்கத்தார் லீவு விடுகிறார்கள். 4- நாட்களுக்கு முன்புகூட நேரு அவர்கள் புத்தர் ஒரு சிறந்த ஞானி என்று பேசினார். இப்படி அரசாங்கத்தார் மதித்து – மதிப்பளிக்கிறார்கள்.
புத்தர் கோட்பாடுகளை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
எங்கள் மீது ஏன் குறை கூறுகிறீர்கள்?
புத்தருக்கும் மற்ற மதத்தலைவர்களுக்கும் பெரிய வேற்றுமை ஒன்று உண்டு. மகம்மதியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் "நபிகள் தினம்", என்று கொண்டாடுகிறார்கள். நபிகள் கொள்கையைத் தட்டக் கூடாது, அவர் கூற்றுக்கள் தான் வேதவாக்கு என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். நடைமுறையில் பின்பற்றுகிறார்கள்.
கிறிஸ்துவர்களின் நம்பிக்கையும் அவ்வாறே; ஏசுவின் மொழிகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்பது தான் மதக்கோட்பாடு. ரஷ்யாவில் கூட லெனின் இப்படிச் சொன்னார், அதுதான் சிறந்தது என்று தம் அறிவை ஒரு வகையரையில் நிறுத்துகின்றார்கள்.
நமது கம்யூனிஸ்டு தோழர்களும் கூட மார்க்ஸ் இப்படிச் சொன்னார்கள்; மக்கள் இன்பமாக வாழ அவர் காட்டும் வழிதான் சிறந்தது என்று கூறுகிறார்கள்.

ஆனால், புத்தர் அப்படிச் சொல்லவில்லை. "நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள் எதையும் யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று தான் புத்தர் சொன்னார். அதையேதான் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்களும் 30-வருட காலமாகச் செய்கிறோம். சாதாரணமாக நம் இயக்கத்தில் 30-ஆண்டுகளுக்கு முன்பே சிங்காரவேலு போன்ற அறிஞர்கள் புத்தரது கோட்பாடுகளை விளக்கி மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
Professor லட்சுமி நரசு போன்றவர்கள், அப்பாதுரை, மணியர் போன்றவர்களும் அக்காலத்திலேயே நம் இயக்கத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்கள்.
புத்தர் கொள்கை பிரசார மகாநாடு என்று நாம் கூட்டினாலும், இதை பார்ப்பனர்களுக்கு விரோதமாகக் கூட்டப்பட்ட மாநாடு என்று கருதினாலும் தவறில்லை.
நம் கருத்தும் அதுதானே. பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும். கழகத் தோழர்களுக்கு இது ஒரு முக்கியமான திருப்பம். 20-வருடங்களாக நாம் 'வழ வழ' வென்று ஓயாமல் பேசிக் கொண்டே இருந்து விட்டோம். அதே இடத்திலிராமல் நாம் வேகமாக முன்னேறுகிறோம்.
கடவுள் உருவங்களை உடைக்கிறோம். நாம் கோவிலை இடிக்க மாட்டோம் - உயிருள்ள விக்ரகங்களையும் உடைக்கவில்லை. அதாவது, பார்ப்பனன் தொட்டு பூசை செய்கிற வேலையைத் தொடங்கவில்லை. அப்படிப் பார்ப்பனர்களுடைய கோவில் விக்ரகங்களை உடைப்பதாகக் கூறினால் ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு போலீஸ்காரர்களை காவலுக்குப் போட்டு விடுவார்கள்.
மக்கள் மடமையிலிருந்து கற்பனைப் புளுகுகளிலிருந்து விடுபட வேண்டும்.
--------------------------
23.01.1954- அன்று ஈரோடு புத்தர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
[11:45 AM, 9/25/2015] +91 95516 56551:  இதையும் பிள்ளையாரை கண்டு பிடித்த மனிதன்தான் கண்டு பிடித்துள்ளான்
[11:50 AM, 9/25/2015] +91 95516 56551: பங்கு நெருக்கடி                                                                                                                                                                       தென்னை மரத்தில் தேள் கொட்டி னால் பனை மரத்திற்கு நெறிகட்டுமா என்று கேட்பது போல் சீன பங்குச் சந்தை யில் உருவாகும் நெருக்கடி, இந்திய நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்குமா என்றுவிவரம் அறிந்தோர் கேட்கமாட்டார்கள்.
ஏன் எனில் இன்றைய உலக நாடு களின் பங்குச் சந்தைகள் உலக பணஅமைப்பால் இணைக்கப்பட்டு இருக் கிறது.

இந்த பண அமைப்பு இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் வெற்றி பெற்ற மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் தங்களது ஆதிக்கம் நீடிக்க உருவாக்கிய உலகம் தழுவிய அமைப்புக்களில் ஒன்று.

அன்று நாடுகளிடையே நிலவும் உறவில் பகைமையை நீக்கி வர்த்தக உறவால் நேசமயமாக்க உலக பண அமைப்பு அவசியம், அந்த அமைப்பு நாடுகளிடையே பாகுபாடு இல்லாமல் சம உரிமைகொண்டதாக இருக்க வேண்டும் என்று சோவியத் யூனியன் வலியுறுத்தியது.
ஆனால் ஒரு நாட்டின் மொத்த வருவாய் அடிப்படையில் வாக்குகளை கொண்ட அமைப்பாக ஆக்கி அமெரிக்க டாலரை பொது நாணயமாக்கி சோவியத் யூனியனை ஒதுக்கி பண அமைப்பையும் உலக வங்கியையும் அன்றைய வெற்றிபெற்ற ஏகாதிபத்திய வாதிகள் அமைத்துக் கொண்டனர்.
வளர்ச்சியுறாத நாடுகளை வேட்டை யாடலாம், சோவியத்தை முடக்கலாம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்றும் மகிழ்ந்தனர்.
1971க்குப் பிறகு அந்த அமைப்பை அந்நிய செலாவணியை வாங்கி விற்கிற சந்தையாக மாற்றினர். அதோடு அந்நிய செலவாணி சந்தையும் உலக நாடுகளின் பங்கு சந்தைகளும் காந்தத்தின் இரு துருவம் போல் பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டது,
இந்த அமைப்பு பின் நாளில் அவர்களுக்கே உலைவைக்கும் என்று ஏகாதிபத்திய வாதிகள் எதிர்பார்க்க வில்லை.

ஒரு கட்டத்தில் மேற்கத்திய முத லாளித்துவ நாடுகள் புகுத்திய தாராளமய அணுகு முறை பணக்கொழுப்பு உள்ள வர்களை பங்குகள், நிலம், தங்கம் சரக்கு வர்த்தக சீட்டு போன்ற சொத்துக்களின் விலைகளை செயற்கையாக ஏற்றி இறக்கி பணத்தை குவிக்க பங்குச் சந்தையிலும் அந்நிய செலாவணி சந்தையிலும் சூதாடும் சுதந்திரத்தை கொடுத்துவிட்டது,
அமெரிக்கா விற்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த சூதாட்டம் வள்ளு வர் குறிப்பிட்ட தூ ண்டிற்பொன் மீன்விழுங்கிய கதையாகிவிட்டது.
2008ல் முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்குமாஎன்ற கேள்வி எழுகிற அளவிற்கு இந்த சூதாட்டம் வெடித்து நெருக்கடியை அந்த நாடுகள் சந்தித்தன.
அது தந்த அதிர்ச்சி யிலிருந்து உலகில் பல நாடுகள் இன்றும் மீளவில்லை. அன்று 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருந்தது ஒரு டாலருக்கு 60 ரூபாய் என்று ரூபாயின் மதிப்பை ரிசர்வ்வங்கியால் குறைக்க நேர்ந்தது.
போர்ச்சுக் கல், ஸ்பெயின், கீரிஸ் போன்ற நாடுகள் கடன் சுமையை ஏற்க நிபந்தனைகளை விழுங்க நேர்ந்தது. அது இப்பொழுதும் தொடர்கதையாக இருப்பதை காண் கிறோம்.இந்த சூதாட்டம் நமக்கும் புதிதல்ல பல ஆண்டுகளுக்கு முன்னால் ஹர்சத் மேத்தா கேத்தன் பரேக் போன்ற பங்குச் சந்தை தரகர்களால் குறுக்கு வழியில் பணத்தை குவிக்க ஆசைப்பட்ட பலரைசூதாட வைத்து ஏமாற்றினர்.
கடன் கொடுத்த பொதுத் துறை வங்கிகளுக்கு பங்கு விலைகளின் தி டீர் சரிவால் நட்டம் ஏற்படுத்தியதை அறிவோம்.

2008 அதிர்ச்சிக்குப் பிறகே முதலாளித்துவ பொருளாதார தத்துவ முகாமிலேஜால்ரா சத்தம் குறைந்தது, முதலாளித் துவ முறையை கண்டித்த காரல் மார்க்சை விரோதியாக பார்க்காமல் அவரும் நம்மஆளுதான் என்று பார்க்கும் தாமஸ் பிக்கெட்டி போன்ற நிபுணர்கள் தோன்றிஉலக பண அமைப்பின் முதலாளித் துவ சுரண்டல் தன்மையை விமர்சிக்க தொடங்கினர்.
இன்று முதலாளித்துவ பொருளாதார தத்துவ முகாமிலே விரிசல் ஏற்பட்டு இன்றைய முதலாளித்துவ பண அமைப்பை பாதுகாக்கும் முகாமிற்கு எதிராக மாற்றங்கள் தேவை என்று சொல் லுகிற முகாம் மோதுவதை காணலாம், உலக வங்கி நிபுணர் நோபல் பரிசு பெற்ற ஜோசஃப் ஸ்டிக்கிளிட்ஸ் உலக வங்கியை கடுமையாக விமர்சிப்பதை அறிவோம்.அதோடு இன்னொன்றும் கண்ணில் படுகிறது.
 மார்க்சிய பொருளாதார நிபுணர்களும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் 2008க்கு பிறகு டாலர் ஆதிக்க உலக பண அமைப்பை மாற்றிட குரல் கொடுத்து வருகிறார்கள்.
அது மட்டுமல்ல எந்த நாட்டு நாணயமும் ஆதிக்கம் செலுத்தாத ஒரு அமைப்பை உருவாக்கிட குரல்கொடுக்கிறார்கள். பிரிக்ஸ் என்ற அமைப்பையும் துவங்கியுள்ளனர்.
இந்த பங்குச் சந்தைநெருக்கடியை பொருளாதார பலம் உள்ள நாடுகளில் சமாளிப்பது அவ்வளவு கடினமல்ல. சுய சார்பு இல்லாத அந்நிய மூலதனத்தை சார்ந்த தொழில் அமைப்பு உள்ள நாடுகள் கடன் வலையில் விழநேரிடுகிறது. இந்த பின்னணியோடு இப்பொழுது சீன வர்த்தக சூதாடிகளின் லீலைகளால் சீன பங்குச் சந்தை நெருக்கடியில் மாட்டிக்கொண்டதை பரிசீலிப்பது அவசியம். நெருக்கடியை சமாளிக்க சீனா தனது நாணயத்தின் மதிப்பை 2சதவீதம் குறைத்தது. உலக மயமும் கடன் சுமையும் இந்த குறைப்பு உலக பண அமைப்பு வழியாக இந்தியா உட்பட பல நாடுகளின் நாணயச் சந்தைகளில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
நமது தொழில் உற்பத்தி நூறு சத அந்நிய மூலதனத்தையும் அந்நிய செலா வணியையும் அதிகம் சார்ந்து இருக்கிறது. நமது ஏற்றுமதி வருமானம் கடந்த 50 ஆண்டுகளாக இறக்குமதியை விட குறைவாக இருந்து வருகிறது. 2015 ஜூலை நிலவரப்படி நமது ஏற்றுமதி குறைந்து அந்நியச் செலாவணி பற்றாக்குறை 10.8 பில்லியன் டாலரிலிருந்து 12.8 பில்லி யனாக உயர்ந்துவிட்டது.
 நிலக்கரி முதல் பெட்ரோலிய பொருட் கள் மற்றும் இரும்பு வரை இறக்குமதிசெய்யாமல் நமது தொழில் சக்கரம் சுழலாது என்ற நிலை உள்ளது.

அரசு இந்நிலையில் மோடி அரசும் நமது பெருமுதலாளிகளும்,நெருக்கடியில் மாட்டி இருக்கும் சீனாவை தாக்குகின்றனர்.
சீனா நாணயத்தின் மதிப்பைகுறைத்து கரன்சி யுத்தத்தை துவக்கி வைப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். சீனா ஆதிக்க நோக்குடன் செயல்படுவதாக அமெரிக்க பத்திரிகைகளும் தாக்கு கின்றன.
கடன் சுமை இல்லாமல் பிரிக்ஸ் அமைப்புமூலம் சமாளிக்க வாய்ப்பு இருந்தும் அதை நாடாமல், அதற்கு வேட்டு வைக்கிற வேலையில் இந்திய அரசு இறங்கியுள்ளது.
மோடியின் சாணக் கியத்தால் ஒரு வேளை ஐ.எம்.எஃப் சிபாரிசில் இறக்குமதிக்கு தேவையான கடன் கிடைக்கலாம்.
சுயசார்பை பலப்படுத்தாமல் ஏற்படுகிற வளர்ச்சி மக்களுக்கு உதவாது அது தூண்டில்பொன் மீனை விழுங்கியதற்கு ஒப்பாகும்.
நன்றி:வே,மீனாட்சி சுந்தரம்.
[11:55 AM, 9/25/2015] +91 95516 56551: சுண்டைக்காய் கால் பணம்.சுமை கூலி முக்காப் பணம்.
மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 20 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.ஓராண்டில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சென்ற வகையில் அதிகபட்சமாக ரூ.8.91 கோடியும், ஜெர்மனி, பிஜி, சீன நாடுகளுக்கு அவர் சென்ற வகையில் செலவு முறையே ரூ.2.92 கோடி, ரூ.2.59 கோடி, ரூ.2.34 கோடி ஆகும்.

பூடானுக்கு சென்ற போதுதான் மிக குறைந்த அளவில் ரூ.41.33 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில், பிரதமர் மோடி ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.5.60 கோடியாகும். அவருடன் சென்றவர்களின் கார் பயணத்துக்கு ரூ.2.40 கோடி வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது.
நியூ யார்க்கில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த நியூயார்க் பேலஸ் ஓட்டல் வாடகை ரூ.9.16 லட்சம். பிரதமரின் ஓட்டல் அறை வாடகை ரூ.11.51 லட்சம்.
அங்கு பாதுகாப்பு படையினருக்கான கார் வாடகையாக ரூ.39 லட்சமும், தூர்தர்ஷன் குழுவினர் பிரதமரின் சுற்றுப்பயணம் குறித்து செய்தி சேகரிக்க ரூ.3 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.1.06 கோடி, வாகனங்களுக்கான வாடகை ரூ.60.88 லட்சம், விமான செலவு ரூ.5.90 லட்சம், அதிகாரிகளுக்கான தின பயண செலவு ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
இதேபோல், வங்காளசேத்துக்கான பயண செலவு ரூ.1.35 கோடி.
அதில் ஓட்டலில் தங்கியதற்கான வாடகை ரூ.19.35 லட்சம்.
மொழி பெயர்ப்பாளர்களுக்கான செலவு ரூ.28.55 லட்சம், பிரதமரின் இன்டர்நெட் செலவு ரூ.13.83 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இக்கணக்கு ஜூன் 30,2015 வரைக்குமானது மட்டும்.அதன் பின் சில நாடுகள் மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார்..முதலீடுகள் குவிவதாக சொல்லுகிறார்.இதுவரை இந்தியாவில் குவிந்த அந்நிய முதலீடு எவ்வாளவு கோடி.?
[12:05 PM, 9/25/2015] +91 95516 56551: 100 கோடி ரூபாயில்                                                                                                                               உலகத் திருடர்கள் மாநாடு?                                                                                                                                         காலம் மாறிப்போச்சிங்க, அந்தக் காலத்தில் எல்லாம் திருடர்களை திருடர்கள் என்றுதான் சொல்வார்கள். இப்ப பாருங்க அவர்களை முதலீட்டாளர்கள் என்று சொல்கின்றார்கள்.
போதாத குறைக்குத் திருடர்களை வான்ட்டடாக வரவழைத்தது மட்டும் இல்லாமல் எங்க வீட்டில் திருடிக்கோ, எங்க வீட்டில் திருடிக்கோ என்று காலில் விழுந்து கெஞ்சுகின்றார்கள். இப்படிப்பட்ட மானங்கெட்ட அரசியல்வாதிகளை நீங்கள் எங்கேயாவது பார்த்திருக்கின்றீர்களா?
பார்க்க வேண்டும் என்றால் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் போய் பார்க்கலாம்.

 உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015 என்ற ஒரு சோக நாடகம் அ.தி.மு.க கும்பலால் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது. அம்மா என்று கூழைக்கும்பிடு போடும் பேர்வழிகளால் அன்போடு அழைக்கப்படும் செல்வி ஜெ.ஜெயலலிதா தன்னுடைய கடைசி காலத்தில் அதாவது ஆட்சியின் கடைசி காலத்தில் இப்படி ஒரு நாடகத்தை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நாடகத்தை நடத்துவதற்காக மக்கள் வரிப்பணம் 100 கோடி ரூபாய் அள்ளி இறைக்கப்பட்டுள்ளது.
 வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தத் திருடர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் சொகுசாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்படியே ஓசியிலேயே சென்னை நகரை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மக்களின் வரிப்பணத்தை இப்படி கண்ட கண்ட நாய்களுக்குச் செலவழிக்கலாமா என்று ஆட்சியில் இருக்கும் உள்நாட்டுத் திருடர்களுக்கும் தெரியவில்லை, மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் தங்கிக்கொண்டு ஓசியில் நக்கி நக்கி தின்கலாமா என்று அந்த வெளிநாட்டுத் திருடர்களுக்கும் தெரியவில்லை.
 இந்த மாநாட்டுக்காக சென்னை முழுக்க வைக்கப்பட்ட கட்அவுட்டர்களில் ஜெயலலிதாவின் சிரித்த உருவமே பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டுக்குள் யார் புதிதாக வந்தாலும் அவர்களுக்குப் பூச்சாண்டி காட்டாமல் விடமாட்டோம் என்று அ.தி.மு.க வின் கூழைக்கும்பிடு அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றார்கள்.
 முதலீட்டாளர்களின் சொர்க்கம் என்று வேறு பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து இருக்கின்றார்கள்.
இலவசமாக மின்சாரம், தண்ணீர், சாலைவசதி, வரிச்சலுகைகள் என்று அனைத்தையும் கொடுத்து, போதாத குறைக்கு மலிவான கூலிக்குத் தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் கொடுத்தால் அது உண்மையிலேயே முதலீட்டாளர்களுக்குச் சொர்க்கம் தானே!.
நோக்கியா கம்பெனியாலும், பாக்ஸ்கான் கம்பெனியாலும் நடுத்தெருவுக்குத் துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் போய் கேட்டால் சொல்வார்கள் முதலீட்டாளர்களின் சொர்க்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் நரகத்தின் வேதனையை.
 இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழ்நாட்டுக்கு ஏறக்குறைய 1.5 லட்சம் கோடிகளுக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று சொல்கின்றார்கள்.
இது அப்பட்டமான பொய்யாகும். ஜெயலலிதா அரசு பதவியேற்ற பின்பு தமிழ்நாட்டுக்கு இந்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த மொத்த முதலீடு என்பதே வெறும் 31,706 கோடி ரூபாய் மட்டுமே. இதை நாம் சொல்லவில்லை. 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது.

”கடந்த நான்கு ஆண்டுகளில் 31,706 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு மேற்கொண்டுள்ளது” என்று சட்ட சபையில் ஒத்துக்கொண்டு இருக்கின்றார். நிலைமை இப்படி இருக்கும் போது இன்னும் ஆறுமாதமே இருக்கப்போகும் அ.தி.மு.க அரசை நம்பி எந்த இளிச்சவாயன்கள் 1.5 லட்சம் கோடிகளை கொட்டப் போகின்றார்கள்?
 ஓசியிலேயே விமானப்பயணம், ஒசியிலேயே சொகுசாக தங்குமிடம், ஒசியிலேயே நாக்குக்கு ருசியாக விதவிதமான சாப்பாடுகள், ஒசியிலேயே ஊர்சுற்றி பார்ப்பதற்கு ஏற்பாடு, இது எல்லாம் கொடுப்பதாலேயே அவர்கள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு இங்கு வந்திருக்கின்றார்கள். ஏற்கெனவே 4 லட்சம் கோடிகள் கடனில் ஓடிக்கொண்டிருக்கும் தமிழக திவால் அரசு இந்த மாநாட்டில் இன்னும் நூறுகோடி ரூபாய் சேர்த்துக் கடனாளி ஆகப்போகின்றது. பின்பு இந்தக் கடனையும் சேர்த்துக் கட்டுவதற்குத் தமிழ்நாட்டுக் குடிமகன்களுக்கு இன்னும் அதிகமாக டார்கெட் வைக்கப் போகின்றார்கள்.
 நமக்கு என்ன சந்தேகம் என்றால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்கின்றார்கள். பிறகு அங்கு வங்கிகளுக்கு என்ன வேலை என்பதுதான். 25 பொதுத்துறை மற்று தனியார் வங்கிகள் அரங்கங்களை அமைத்திருப்பதாக சொல்கின்றார்கள்.
இவர்களுக்கு அங்கு என்ன வேலை என்று விசாரித்தால் பெரு, சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன்கள் வழங்குவதற்கு வந்திருக்கின்றார்களாம். வங்கிகள் கடன்கொடுத்தால் பின் வருபவர்கள் என்ன கொண்டுவருவார்கள் என்று தெரியவில்லை.
 ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகள் வாராக்கடன்களால் நஷ்டத்தில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இப்போது தன்பங்கிற்கு ஜெயலலிதாவும் அதை திவாலாக்கப் பார்க்கின்றார். ஜெயலலிதாவுக்குப் பொதுத்துறையைச் சார்ந்த நிறுவனங்களை திவாலாக்குவதென்றால் அப்படி ஒரு சந்தோசம்.
ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார வாரியம் 1.6 லட்சம் கோடி கடனும், தமிழ்நாடு போக்குவரத்துகழகம் 2084 கோடி கடனும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டுமாம்.

உலக முதலீட்டாளர்களிடம் காரியம் சாதிக்க குத்தாட்ட பெண்கள்?
அரசே இப்படி பெண்களைக்காட்டி காரியம் சாதிக்க
முனைவதற்கு என்ன பெயர்?
இப்போது அ.தி.மு.க திருடர்களின் பார்வை நேராக வங்கிக்கே திரும்பி இருக்கின்றது. மாநாட்டிற்கு வருபவர்களிடம் “கையெழுத்த மட்டும் போடுங்க சார் மத்ததை எல்லாம் எங்க அம்மா பார்த்துக்குவாங்க” என்று சொல்லி ஒரு தீட்டு தீட்டப் போகின்றார்கள்.
ஏற்கெவே ஜெயலலிதா மோடியின் நண்பர் என்பதால் 1.5 இலட்சம் கோடி என்ன 30 லட்சம் கோடிகள் முதலீடு வந்துள்ளதாகக் கூட நம்மை நம்பவைக்க முயற்சி செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
 ஆட்சி செய்த இந்த நான்கரையாண்டுகளில் ஒரு ஆணியைக் கூட புடுங்காத அ.தி.மு.க அரசு இப்போது மொத்தமாக புடுங்கப் போகின்றோம் என்று சொல்லி அனைவரையும் ஏமாற்றப் பார்க்கின்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆண்கள் குடிநோயாளிகளாக மாறிவிட்டார்கள். இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அப்போதும் மனசு அடங்காமால் இன்னும் ஏதாவது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாவும் அவரது அடிமைகளும் இரவும் பகலுமாக யோசித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
சரியாக பேரம் படிந்தால் இரவோடு இரவாக தமிழ்நாட்டையே விற்றுவிட்டு ஓடிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்!
இருந்த நோக்கியா,பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களை தக்க வைக்க முடியாத இந்த அரசு புதிதாக நிறுவனங்களை கொண்டு வருமா?பார்க்கலாம்.
                                                                                                                                                                                                     -செ.கார்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக