ஞாயிறு, 20 மார்ச், 2016

[4:58 AM, 7/5/2015] +91 95516 56551: கம்ப்யூட்டர் பராமரிப்பு                                                                                                 நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!
1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.
2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.
3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.
4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.
5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.
6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். http://www.revouninstaller.com/revo_ uninstaller_free_download.html என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.
7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.
8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.
9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது.
[5:08 AM, 7/5/2015] +91 95516 56551: ஹெல்மெட் – ஏன்… எதற்கு… எப்படி ?                                                         இனிமேல் பைக்கில் கிளம்பும்போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் – இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிய பிறகே, பைக்கை ஸ்டார்ட் செய்யுங்கள். டேங்க்கில் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டோ, ரியர்வியூ மிரரில் சொருகியபடியோ ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு பயணிப்பது – சட்டத்தை மட்டுமல்ல; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்குச் சமம்!



‘ஹெல்மெட் இல்லையென்றால் லைசென்ஸ் பறிக்கப்படும்; வாகனம் சீஸ் செய்யப்படும்’ போன்ற கடுமையான சட்ட திட்டத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்; ‘ஹெல்மெட் போட்டா காது கேட்கவில்லை… வேர்த்துக் கொட்டுது பாஸ்… முடி போச்சுன்னா மொத்தமும் போச்சு’ என்று ஃபீலிங் டேக்கா விடுபவர்கள் அனைவருக்கும், ஹெல்மெட் விஷயத்தில் ஆப்ஷன் இருக்கிறது.



ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?

எல்லோருக்கும் பொதுவான பயம் இதுதான். தலைவலி, நீர் கோர்த்தல், காது கேட்கவில்லை போன்ற உடல் உபாதைகள் வருவதாகச் சொல்லித்தான் பலர் ஹெல்மெட்டைத் தவிர்க்கின்றனர். ஆனால், இவை எல்லாமே பொய் இல்லை. பல நாள் துவைக்காத அழுக்குச் சட்டை போட்டால், எப்படி நம் உடம்பில் அரிப்பு ஏற்படுமோ, அதுபோலத்தான் ஹெல்மெட்டும். தினசரி துவைத்த காட்டன் கேப் அல்லது கர்ச்சீஃப்பைத் தலையில் கட்டிக்கொண்டு ஹெல்மெட் அணிந்தால், எந்தப் பிரச்னையும் வராது. சேவியர், ஆக்ஸர், வேகா போன்ற பிராண்டுகளில் ஹெல்மெட்டின் உள்பக்கத்தை அகற்றி, துவைத்துப் பயன்படுத்தலாம். துவைத்த இன்டீரியரை வெயிலில் அரை நாள் காயவைத்து அணிந்தால், தலையில் அரிப்பு ஏற்படுவது நிற்பதுடன், முடி உதிர்தலும் தடைப்படும். அகற்ற முடியாத உள்பக்கம் கொண்ட ஹெல்மெட் வாங்குபவர்கள், தினசரி கர்ச்சீப் அல்லது கேப் மாற்ற வேண்டும். மேலும், வாரம் ஒருமுறை ஹெல்மெட்டின் உள்பக்கம் வெயிலில் படுவதுபோல அரை மணி நேரம் வைக்க வேண்டும்.

‘ரொம்ப வேர்க்குதுங்க’ என்று சாக்கு போக்கு சொல்பவர்கள், வென்ட்டிலேஷன் உள்ள ஹெல்மெட்டுகள் பயன்படுத்தலாம். 6 முதல் 8 ஏர் வென்ட்டுகள் உள்ள ஹெல்மெட்டுகள் இப்போது மார்க்கெட்டில் இருக்கின்றன. ஏர் வென்ட் என்றவுடன், குபுகுபுவென காற்று அடிக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். உள்ளே வரும் சூடான காற்றை வெளியே தள்ளும் வசதிதான் இது. பைக் ஓட்டும்போது, மறக்காமல் ஹெல்மெட் வென்ட் திறந்திருக்கிறதா என்று கவனியுங்கள். அதேபோல், மழை நேரங்களில் பைக் ஓட்டுபவர்களுக்கும் வசதியான ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. வேகா, ஸ்டட்ஸ் போன்ற பிராண்டுகளில், ஹெல்மெட்டின் முன் பக்கம் நீண்டுள்ள ஷேட் வழியாக மழை நீர் வடிந்துவிடும் என்பதால், மழை நீர் நேராக வைஸரில் அறைந்து பார்வையை மறைப்பதை இது தவிர்க்கும். இவற்றுக்கு ‘ரெயின் ரெசிஸ்ட் ஹெல்மெட்’ என்று பெயர்.

ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன?

இந்தியாவின் தரம் வாய்ந்த ஹெல்மெட்டுகளான ஸ்டீல்பேர்டு, வேகா, ஸ்டட்ஸ், சேவியர் போன்ற ஹெல்மெட்டுகளின் சென்னை டீலர்களான ஜவஹர் அரோரா-வித்யா தம்பதியர், ஹெல்மெட்டுகளில் உள்ள வகைகள் பற்றிச் சொன்னார்கள்.

“உலகம் முழுக்க ஃபுல்ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், ஃப்ளிப்-அப், டூயல் பர்பஸ், த்ரீ குவார்ட்டர், மாடுலர், ஹாஃப், மோட்டோகிராஸ் என்று 8 வகைகள் ஹெல்மெட்டில் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் புழக்கத்தில் இருப்பவை நான்கு வகைகள்தான்.

1. ஓப்பன் ஃபேஸ் – அதாவது திறந்த வகை ஹெல்மெட். இதுதான் பேஸிக் மாடல். பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இதை லேடீஸ் ஹெல்மெட் என்கிறார்கள். ஆனால், இதை ஆண்களும் பயன்படுத்தலாம். வேகமாகப் பயணிக்காத வர்களுக்கு, இது பெஸ்ட். தலைப் பகுதி முழுவதையும் இது பாதுகாத்தாலும், முகத்துக்கு வைஸர் மட்டுமே பாதுகாப்பு.

2. ஃபுல் ஃபேஸ் – பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல்மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல்லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல்களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை.



3. ஃப்ளிப் அப் – இதுவும் ஃபுல் பேஸ் மாடல்தான். ஆனால், வெயிலில் முகம் வியர்க்கக் கூடாது என்று விரும்புபவர்கள், கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்தி, தாடைப் பகுதியை மேலே ஏற்றிக்கொள்ளலாம். இது, பார்ப்பதற்கு ஓரளவு ஓப்பன் ஃபேஸ் மாடல் போல இருக்கும். இதிலேயே ஆட்டோ கூலிங் ஆப்ஷனும் உண்டு. அதாவது, வெயிலில் செல்பவர்களுக்கு வைஸர் இல்லாமல், கண்களை மட்டும் கவர் செய்யுமாறு கூலிங் கிளாஸை இறக்கிக்கொள்ளலாம். இரவில் வெளிச்சமாகவும், பகலில் கூலிங்காகவும் இது இருப்பதால், ஓட்டுவதற்கு சுகானுபவமாக இருக்கும். ஆனால், ஆபத்து நேரத்தில் இதில் முழுப் பாதுகாப்பு கிடைக்காது.

4. மோட்டோ கிராஸ் – இதுவும்  ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான். இதில் தாடைப் பகுதிக்கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை ‘ஸ்கெலிட்டன் ஹெல்மெட்’ என்றும் சொல்கிறார்கள். பைக் ஓட்டும்போது  கீழே விழ நேர்ந்தால், முகம் தரையில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். முன்பு டர்ட் பைக் ரேஸ்களில்தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். இதில், தலைக்கு மேலே சன் ஷேடு இருப்பதால், வெயில் மற்றும் மழை உங்களை நேரடியாகத் தாக்காது!” என்றனர்.

ஹெல்மெட்டுகள் எப்படித் தயாராகின்றன?

இந்தியாவில், முழுக்க முழுக்க பாலி கார்பனேட் கலவையால் ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் சேர்ந்த கலவைதான் பாலிமர். தரமான ஹெல்மெட்டுகளில் இந்தத் தடிமனான பகுதிக்குக் கீழே 7 அடுக்குகளால் ஆன ஃபைபர் லேயர்கள் இருக்கும். இவை தரையில் மோதும்போது கிடைக்கும் அழுத்தத்தை ஈஸியாக்கும். லைட் வெயிட்டுக்கும், ஃப்ளெக்ஸிபிளிட்டிக்கும் பாலிமர்தான் பெஸ்ட். இதற்கு அடுத்த தரம், ஃபைபர் கிளாஸ் மெட்டீரியல். MT, AGV போன்ற இத்தாலியன் ஹெல்மெட்டுகளில் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப்படுகின்றன. இது, மோதும்போது ஏற்படும் வேகத்தைக் குறைக்கும் தன்மைகொண்டவை. உச்சபட்சமாக, கார்பன் ஃபைபர் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகள்தான் உலகத் தரம் வாய்ந்தவை. மோட்டோ ஜீபி, ஃபார்முலா-1 போன்ற ரேஸ்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்டவை. சில கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகளின் எடை 1.3 கிலோ அளவுதான் இருக்கும். ஆனால், பாதுகாப்பில் இவைதான் பெஸ்ட். நம் நாட்டில் நெக்ஸ், AGV போன்ற கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகள் 28,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.

எப்படி வாங்க வேண்டும்?

ஹெல்மெட், நம் தலையோடு மிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது; மிகத் தளர்வாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் போட்டுக்கொண்ட பிறகு, தலையை இட வலமாக அசைத்துப் பாருங்கள். லேசாக நகர்ந்தால், அது உங்களுக்குச் சரியான ஹெல்மெட். அதிகமாக நகர்ந்தால், மிகவும் தளர்வாக இருக்கிறது என்று பொருள். காது கேட்க வேண்டும்; காற்று வர வேண்டும் என நீங்கள் தளர்வாக ஹெல்மெட் அணிந்தால், ஸ்பீடு பிரேக்கர்களில் ஹெல்மெட் திரும்ப வாய்ப்பு உண்டு. அதேபோல், இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் அணியும்போது, இரு பக்கமும் உள்ள ஸ்ட்ராப்புகளை நன்கு இழுத்து லாக் செய்ய வேண்டும். இதுதான் ஹெல்மெட் அணிய வேண்டிய சரியான முறை.

ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?

இந்தியாவில் 45 சதவிகித விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகளே! தலையில் மட்டும் அடிபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு வாழ்வை இழப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். ஹெல்மெட் அணிந்து பைக்கில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தலைக்கு மேலே சாய்ந்து விழுந்த மின் கம்பத்தில் இருந்து உயிர் தப்பிய கதையும் உண்டு. எனவே, சாலை விபத்துகளில் மட்டுமின்றி, பொதுவாகவும் நம் அழகான முகம் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அவசியம்! ஹெல்மெட்டை சுமையாக நினைக்காதீர்கள்; சுகமாக அனுபவியுங்கள்!

தரமான ஹெல்மெட்டை எப்படிக் கண்டுபிடிப்பது

ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். காஸ்ட்லியாக வாங்க விரும்புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹெல்மெட்டுகளில் DOT (Department of Transportation) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இருக்கிறதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.

நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட்டாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOT கோடு, மோல்டு செய்யப்பட்டிருப்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஜெர்மன் தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், கவனம் தேவை. ISI முத்திரை உண்மைதானா என்பதைக் கண்டறிய, 044-22541442, 22541216 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அல்லது www.bis.org.in  என்ற இணையதளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
[6:03 AM, 7/5/2015] +91 95516 56551: விளையாட்டாக ஆங்கிலம் கற்க உதவும் இணையதளம்!                உங்கள் ஆங்கில அறிவை கொஞ்சம் சோதித்துப்பார்த்துக்கொள்ள நினைத்தாலும் சரி, அல்லது ஆங்கில் அறிவை மேலும் பட்டைத்தீட்டிக்கொள்ள விரும்பினாலும் சரி, நோவேர்ட் (knoword ) இணையதளம் ஏற்றதாக இருக்கும். இந்த இரண்டையுமே விளையாட்டாக செய்ய வைக்கிறது இந்த தளம்.

உண்மையில் இந்த இணையதளமே ஒரு விளையாட்டுதான். பிரவுசரில் ஆடக்கூடிய ஆங்கிலச் சொல் விளையாட்டு! ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளுக்கான பொருளை, எந்த அளவுக்கு ஒருவர் அறிந்திருக் கிறார் என சோதிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டை கொஞ்சம் சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கிறது நோவேர்ட் இணையதளம். முகப்பு பக்கத்தில் எப்படி விளையாட வேண்டும் எனும் வழிமுறை எளிதாக விளக்கப்பட்டுள்ளது. ஆட்டத்திற்கு தயார் என்றதும், ஒரு காலி கட்டம் திரையில் தோன்றும்.

அந்த கட்டத்தில் இடம்பெறும் வார்த்தைக்கான அகராதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு அந்த வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கான சிறு குறிப்பாக வார்த்தையின் முதல் எழுத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அகராதி பொருளை கொண்டு வார்த்தையை கட்டத்தில் சரியாக டைப் செய்தால் அடுத்த வார்த்தைக்கு முன்னேறலாம். தவறாக டைப் செய்தாலும் தொடர்ந்து ஆடலாம். என்ன சரியாக சொன்னால் 10 புள்ளிகள். தவறு எனில் 10 புள்ளிகள் மைனஸ். அகராதி விளக்கத்தை கொண்டு வார்த்தையை கணிப்பதே சுவாரஸ்யமானதுதான் என்றால், ஒரு நிமிட அவகாசத்திற்குள் இதை செய்ய வேண்டும் என்பது இன்னும் சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் எளிய வார்த்தைகள் போல இருக்கும், ஆனால் போகப்போக வார்த்தைகள் கடினமாகி கொண்டே இருக்கும்.  முதலில் இதென்ன பெரிய விளையாட்டா என்று தோன்றினாலும், திரையில் தோன்றும் ஆங்கில வார்த்தைகளுக்கான விளக்கம், உங்களை அது என்ன சொல் என்று அல்லாட வைக்கும்.

ஆங்கில சொல் வங்கியை வளப்படுத்திக்கொள்வதற்காக அகராதியை வைத்துக்கொண்டு அர்த்தம் புரிந்து கொள்வதை விட, இப்படி சவாலான முறையில் வார்த்தைகளை கண்டுபிடிக்க முயல்வது ஆர்வத்தை அதிகமாக்கும். மாணவர்கள் முதல் அலுவலகம் செல்பவர்கள் வரை பலரும் முயன்று பார்க்கலாம். உங்கள் ஆங்கில திறமைக்கு ஏற்ப முதலிலேயே ஆட்டத்தின் கடினத்தன்மையை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆங்கில பரிட்சயத்தை அதிகமாக்கி கொள்ள சுவாரஸ்யமான வழி மட்டும் அல்ல; இது அருமையான பயிற்சியும் கூட. உடலுக்கு மட்டும்தான் பயிற்சி அவசியமா? மூளைக்கும் பயிற்சி அவசியம், அதற்காக தான் இந்த சொல் விளையாட்டு என்கிறது கோவேர்ட் இணையதளம்.

சொற்களை கணிப்பது, விரைவாக யூகிப்பது, மற்றும் துரிதமாக டைப் செய்வது என மூன்று வித பயிற்சிகளை இது சத்தியமாக்குவதாகவும் குறிப்பிடுகிறது. இணையத்தில் அலுப்பு ஏற்படும் போது முயன்று பாருங்கள், பலனுள்ளதாக இருக்கும். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயலியாகவும் டவுன்லோடு செய்து விளையாடலாம்.
தமிழ் மொழிக்குக்கும் கூட இப்படி ஒரு அருமையான இணையதளத்தை உருவாக்கலாம் :

இணையதள முகவரி: http://knoword.org/#
[12:31 PM, 7/5/2015] சங்கர்: உங்களின் முதல் வாதம் சரியே என்றால் அரசனின் மகனாக பிறப்பதும் ஆண்டியின் மகனாக பிறப்பதும் யார் தீர்மானம் செய்கின்றனர் உங்கள் கருத்து
[1:12 PM, 7/5/2015] கஜபதி (400 Slitt er): hi
[3:28 PM, 7/5/2015] ஆறுமுகம் (கிரேன்): Thanks ... Thiruvasagam
[4:40 PM, 7/5/2015] +91 95516 56551: சங்கர் அவர்களே நீங்கள் கூறியதில் இருந்து நாம் விரிவாக பகிர்ந்து கொள்ள வேண்டிய ஆரம்ப தகவல்கள் அ திகமாக உள்ளது                                                       முதலில்                                                                    பிரபஞ்சம் எப்படி தோன்றியது?                      உயிரினம் எவ்வாறு தோன்றியது?                          மனித இனம்    எவ்வாறு உருவாகியது?                ஆரம்ப காலங்களில்  மனிதன்  எவ்வாறு வாழ்ந்தான்?                                                                மனிதன் முதன் முதலில் கண்டுபிடித்த கருவி  மனிதன் பேசிய  முதல் மொழி முதல் எழுத்து மனிதனின் பகுத்தறிவு கொண்டு நாகரிகம் மேன்மை அடைந்த விதம் அறிவியல் கண்டுப்பிடிப்பு மதங்களின்  தோற்றம் அதன் வளர்ச்சி உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் எவ்வாறு எப்போழுது தோன்றியது  மேலும் இந்தியாவில் மதங்கள் இன குழுக்கள் சாதி பாகுபாடு ஆகியவற்றை பற்றி விரிவாக  ஆதாரபூர்வமாக அறிந்து பகிர்ந்து கொள்ளுவோம்
 அவ்வாறு அறிந்து கொள்ளும் போது நீங்கள் இன்று மதியம் ஏழையாக இருப்பதும் அரசனாக இருப்பதும் யார் கையில் உள்ளது என்று நீங்களே அறிந்து கொள்வீர்
[5:01 PM, 7/5/2015] ஆறுமுகம் (கிரேன்): Good
[6:57 PM, 7/5/2015] +91 95516 56551: இந்த பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது? எப்படி தோன்றியது? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனா். இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம்தான் இப்பிரபஞ்சம் உருவானது என்ற முடிவுக்கு வந்துள்ளனா்.மில்லி மீட்டா் அளவில் ஒன்று திரண்டிருந்த அணுக்கள் திடீரென பயங்கர வேகத்துடன் வெடித்துச் சிதறியது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இது விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாரு விரிவடைந்த போது வெப்பம் தனிந்த வாயுக்கள் தான் நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் உருவாயின என்பது தான் பெருவெடிப்புக் கொள்கை. இது 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆண்டுகளுக்கு முன்னா் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.அணு மோதலால் வெடித்துச் சிதறி இம்மாபெரும் பேரண்டம் உருவானது
[7:07 PM, 7/5/2015] +91 95516 56551: நமது தாய்வீடான பூமி தோன்றி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன என அறிவியல் கிட்டத்தட்ட துல்லியமாய் கண்டுபிடித்து விட்டது. சந்திரனிலிருந்து எடுத்துவந்த கல்லிருந்தும், பூமியில் இருக்கும் கற்களின் வயதை அறியும் கதிர்வீச்சு சோதனை (radiometric age dating of meteorite material) மூலமும் இது அறியப்பட்டது. இதில் 1% மாறுபாடு இருக்கலாம். அவ்வளவே..! மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜாக் மலையிலிருந்து கிடைத்த சிர்கான் படிகங்கள்தான் (Zircon crystals) இதுவரை கிடைத்த படிகங்களிலேயே வயதானது. அதன் வயதுகுறைந்த பட்சம் 404 கோடி ஆண்டுகள் இருக்கலாம். சூரியனின் நிறை மற்றும் பிரகாசம் போன்றவற்றை மற்ற விண்மீன்களுடன் ஒப்பிடும்போது நமது சூரியனுக்கும், சூரிய குடும்பத்திற்கும் சுமார் 456.7 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்பது தெரிய வருகிறது. அதுமட்டுமல்ல இதன் மூலம் பூமியின் வயதும் 454 கோடி ஆண்டுகள் என்பதும், பூமி, சூரிய, சந்திரர்கள் சம வயதுக்காரர்கள் என்றும் கூட தெரிய வருகிறது.
[7:14 PM, 7/5/2015] +91 95516 56551: இன்றிலிருந்து சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஸோலார் நெபுலா வெடித்து சிதறியதால் உருவானது தான் இந்த சூரிய மண்டலம். ஸோலார் நேபுளாவின் மையப்பகுதி சூரியன் ஆனது. அதன் சிதறல்கள் மற்ற கோள்காளாகவும், அதிலிருந்து துணை கொள்களும் உருவகின. இந்த கொள்களில் ஒன்று தான் நம் பூமிஂ. பூமியின் வயது  450 கோடி ஆண்டுகள். பூமி அதன் தாய் ஆன சூரியனை சுமார் மணிக்கு 100,000 கிமீ வேகத்தில் சுற்றி வருகிறது. இதற்கு காரணம் சூரியனின் ஈர்ப்புவிசை என்பது நமக்கு தெரியூம். இந்த ஓயாத சுழற்சியினால் தான் பூமி உட்பட அனைத்து கொள்களும் கோள வடிவம் பெற்றன. பூமியின் மேற்பரப்பு குளிர தொடங்கியது. ஆனால் உட்பகுதியில் இருந்த வேப்ப அழுததத்தின் காரணமாக எரிமலைகள் வெடித்து கார்பண் டை ஆக்ஸைட், நீராவி ஐ பெருமளவில் வெளியேட்றின. இதனுடன்  சிறிதளவு, மீதேன் மற்றும் அம்மோனியா உம் வெளியேட்றின. ஆரம்ப காலத்தில் பூமியில் ஆக்ஸீஜன் இல்லை. இவ்வாறு வெளியேறிய நீராவி காலப்போக்கில் குளிர்ந்து நிராக மாறி பூமியின் ஆரம்ப கடல் தோன்றியது. பூமியிலிருந்து நீராவி வெளியேறுவது இன்றும் சில இடங்களில் நிகழ்கிறது.

கடலுக்குள் நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு ஹைட்ரோ தெர்மல் வெண்ட். அதாவது பூமியிலிருந்து வெப்பம் மற்றும் கணிமங்கல் கடல் நீரில் வெளியேறும். இந்த பகுதியில் கடல் நீர் வெப்பமாகவும், கணிம சத்துகள் மிகுதியாக இருக்கும். இது ஆழத்தில் நிகழ்வதால் சூரியனின் புறவுதா கதிர்கள் இந்த பகுதியை அடைந்து இருக்க முடியாது. எனவே கடலில், இப்பகுதியில் தான் உலகின் முதல் உயிரினம்- சயனோ பக்டீரியா தோன்றியது. இந்த சயனோ பக்டீரியா ஒரு ஒளிசேர்க்கை செய்யும் உயிரி. இது உயிர்வாழ CO2, நீர், சூரிய ஒளி பொதும். இவை அனைத்தும் கடலில் கிடைத்ததால் இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோபாக்தீரியா முதல் உயிரியாக இந்த உmontage-20090603-browseலகில் உருவானது…

இது பல்கி பெருக தொடகியது.அப்பொது நம் பூமிக்கு சுமார் 700 மில்லியன் ஆண்டுகள். இந்த ஒளிசேர்க்கை செய்யும் ஸயநொ பக்டீரியா பல மில்லியன் ஆண்டுகளாக மாற்றம் அடைந்து நீர் வாழ் தாவரமாக, மாறின. அங்கிருந்து நிலத்திற்கு பரவின. தவரங்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லாததால் அவை, அப்போது பூமியில் இருந்த CO2, மாழை நீர், சூரிய ஒளி கொண்டு வளர தொடங்கின. இவ்வாறு பூமி முழுவதும் உண்டான தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைட் ஐ கிரகித்து . ஆக்ஸிஜனை வெளியிட்டன. இதனால் கார்பந்-டை-ஆக்ஸைட் அளவு குறைய தொடங்கி அவை பிராண வாயுவாக மாறின. மேலும் ஒரு பகுதி CO2  படிமங்களாகவும், கடலிலும் கரைந்தன. இவ்வாறாக CO2 அளவு குறைந்து போனது. O2 அளவு அதிகரித்தது. இந்த O2 UV கதிர்கள் எனும் புறவுதா கதிர்கள் ஆல் தாக்கப்பட்டு O3 எனும் ஓஜோன் மண்டலம் உருவானது. இந்த ஓஜோன் மண்டலம் தான் பூமியை புறவுதா கதீர்கலிடம் இருந்து காப்பாற்றி பூமியில் மேலும் பல வகையான உயிர்கள் தோன்ற காரணம் ஆயின. இந்த மாற்றங்கள் நிகழ நாம் பூமிக்கு நானூறு கோடி ஆண்டுகள் தேவை பட்டன. இந்த நானூறு கோடி ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களே வெறும் நெருப்பு கோளாமாக இருந்த பூமியை உயிர்கள் உருவாகி நாம் வாழும் இந்த உலகமாக மட்ரியது.இது தான் நாம் பூமியின் வரலாறு.
[8:23 PM, 7/5/2015] சங்கர்: உங்களின் பிரபஞ்ச கருத்து உண்மையெனில் மனிதன்தனுக்கு பிறகு ஏன்  அடுத்த உயிரினம் தோன்றவில்லை எனது அடுத்த கோள்வி  உங்களுடைய விஞ்ஞான கூற்றின் படி மனிதன் பிற்பிற்கு முன் இறப்பிற்கு பின் எங கு இருந்தான்
[5:42 AM, 7/6/2015] +91 95516 56551: உருவான உயிர்கள் உருவாக்கிய உயிர்                                                                     கடவுள் உலகத்தைப் படைச்சார்
இருக்கட்டும். கடவுளை யாருவோய் படைச்சார்
கண்காணா உன் கடவுள் தான் தோன்றி ஆகிறப்போ, கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?
என்ற அறிவார்ந்த கேள்வியை பெரியார் தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பார்த்திருக்கிறோமே நினைவிருக்கிறதா?
உலகை, உயிர்களைப் படைத்தவர் கடவுள்தான் என்று தான் ஆத்திகர்களும், மத நம்பிக்கையாளர்களும் அளந்து கொண்டிருந்தனர். ஒரு நாள் கடவுள் விஷ்க் என்று கையை ஆட்டியவுடன் உலகம் தோன்றியது; உயிர்களும் தோன்றின என்று காலங்காலமாக கதை விட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு மதமோ உயிர்களைப் படைப்பதற்கென்றே ஒரு தனிக் கடவுளை உண்டாக்கியது. அவருக்கு வேலையே சதா உயிர்களைப் படைத்துக் கொண்டிருப்பதுதான். அவரைத்தவிர வேறு யாரும் அப்பணியைச் செய்ய முடியாது என்றது. உயிரை அவனன்றி யாரும் ஆக்க முடியாது என்றது மதம். உலகின் தோற்றம், உயிரின் தோற்றம் மற்றும் உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்தவர்களை, ஆய்வு செய்யலாம் என்று கருத்துச் சொன்னவர்களைக் கூட விட்டுவைக்காமல் கூண்டிலேற்றினார்கள்; கழுவி லேற்றினார்கள். கொன்று குவித்தார்கள். ஆக மொத்தம் எந்த மதமும் உயிரின் உருவாக்கம் குறித்து யாரையும் எதுவும் பேசவிடவில்லை. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் அறிவியல் வளர்ச்சிக்கு முன்னர் உடைந்து போனது.
உலகை கடவுள் படைக்கவில்லை. சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய எண்ணற்ற நெருப்புப் பந்துகளில் ஒன்றுதான் குளிர்ந்து பூமியானது என்று அறிவியல் சொன்னது. அப்படியானால், அந்த சூரியன் எப்படித் தோன்றியது என்றார்கள் மதவாதிகள்.
பிக் பேங் எனப்படும் பெரு வெடிப்பு நிகழ்ந்தது; சின்னஞ்சிறிய அணுவிலிருந்து தான் பூமியும், சூரியனும், எண்ணற்ற நட்சத்திரங்களும், கோள்களும் கொண்ட இந்த மாபெரும் பிரபஞ்சம் எனப் படும் பேரண்டம் உருவானது என்றனர் அறிவியலாளர்கள்.

அப்படியானால் அந்த பெரு வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்றனர் மதவாதிகள். பெருவெடிப்பு எப்படி நடந்திருக்கக் கூடும்; அப்போது தோன்றியிருக்கக்கூடிய ஆற்றல் எப்படியிருந்திருக்கும் என்பதை ஒரு செயல் விளக்கம் போல செயற் கையாகவே பெருவெடிப்பை நிகழ்த்திக் காட்டினார்கள் அறிவியலாளர்கள்.
அது மட்டுமா?
டார்வின் தாத்தா பற்றி நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம் அல்லவா? ஒரே நாளில் உலகம் தோன்றிவிடவில்லை. உயிரினங்கள் படிப்படியாகத்தான் பரிணாம வளர்ச்சி பெற்றன என்றார்.
குரங்கும் மனிதனும், ஏப் என்ற வேறொரு இனத்திலிருந்து உருவானவை என்றார் அவர்.
ஆகா! இவ்வளவு நாள் கடவுள் தன் வடிவில் மனிதனைப் படைத் தார் என்றல்லவா நாம் சொல்லி வருகிறோம். குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்றால் கடவுள் என்ன குரங்கா? விடக் கூடாது இவனை என்று துள்ளித் துடித்தனர். அப்படியானால் குரங்குக்கு முன்னால் என்ன? அதற்கு முன்னால் என்ன? அதற்கும் முன்னால் என்ன? என்று கேள்விகளை அடுக்கி கட்டிப் போட்டுவிடலாம் என்று திட்ட மிட்டனர் அவர்கள். கேள்விகளுக்கா அறிவியல் சளைக்கும். கேட்கக் கேட்க பதில் கிடைத்தது. கடைசியில் விடை ஒரு செல் உயிரிலிருந்து உயிர் தோன்றியதாக வந்தது. இனி என்ன செய்யலாம்?

"அந்த ஒரு செல் உயிரி எங்கிருந்து தோன்றியது..? எங்களுக்கு நேரமில்லை விடை சொல் விரைவாய்" என்றது மதக் கூட்டம். "தாராள மாய் சொல்லலாமே... உயிரற்ற பொருள்களின் மீது ஏற்பட்ட விளைவு, அமினோ அமிலத்தின் செயல், வேதியியல் மாற்றம் இவைதான் முதல் செல்லின், உயிரின் தோற்றத்திற்குக் காரணம்" என்று அதற்கும் விடை சொன்னது அறிவியல்.
அப்போது தான் நீண்ட காலமாக தேங்கி யிருந்த அந்தக் கேள்வியை மீண்டும் எடுத்து வீசினர் மூடநம்பிக்கையின் மொத்தக் குத்தகை தாரர்களான மதவாதிகள்.
"எப்படியோ வந்ததென்று விடை சொன்னாய்? போகட்டும். அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. உன்னால் ஒரு புதிய உயிரை உருவாக்கிக் காட்ட முடியுமா?" என்றொரு கேள்வியை எடுத்து வீசி இறுமாப் புடன் நின்றது மடமைக் கூட்டம்.
"முடியாது என்பது முட்டாள்கள் பேச்சு! நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்! பொறுத்திருங்கள் நாங்கள் உருவாக்கிய உயிரோடு வருகிறோம்." என்று சொன்ன அறிவியல் ஓருயிரிலிந்து அதே மாதிரியில் இன் னொன்றை நகலெடுத்துக் காட்டியது.
ஆம். அப்படித்தான் முதல் குளோனிங் செய்யப்பட்டது. டாலி என்ற ஆடு, பிறகு எலி, குரங்கு, தேவி என்ற மான் இப்படி எல்லா உயிர்களையும் உருவாக்கிக் காட்டியது. மனிதனை உருவாக்க இன்னும் ஒரு அடி தான்... எட்டிப்பிடித்துவிடும் என்ற நிலையில், "போதும் போதும். ஆண்டவன் உருவாக்கிய ஒரு உயிரிலிருந்து இன்னொன்றை உருவாக்கி விட்டீர்கள். நாங்கள் கேட்டது புதிய உயிர். முற்றிலும் உயிரற்ற பொருள்களிலிருந்து ஒரு செயற்கை உயிர். எப்படி வசதி? தோல்வியை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?" என்று தனது தோல்வியை மறைத்துக் கொள்ள பதில் கேள்வி தொடுத்தது.
தொடர்ந்தன ஆய்வுகள்! புதிய உயிர்.. செயற்கை உயிர்... உயிரற்றவற்றிலிருந்து உயிர்! ஆய்வகங்கள்... நூல்கள்... மாதிரிகள்.. முயற்சிகள்.... முடிவில்... வெற்றி... வெற்றி....
அய்யாயிரம் ஆண்டின் கேள்விகளுக்குக் கிடைத்த வெற்றி..! அறிவை விரிவு செய்ததால் கிடைத்த வெற்றி! ஆம் செயற்கை உயிர் உருவானது. முற்றிலும் செயற்கை உயிர்.. உயிர்களின் கட்டமைப்பான டி.என்.ஏ.விற்குள் மனிதன் உருவாக்கிய புதிய உயிர். குழந்தை வடிவில் பொம்மையை உருவாக்கி அதனை மின்சாரம் மூலம் செயல்பட வைப்பதுபோல், வெள்ளாட்டின் மடியில் ஒருவித நோயினை உருவாக்கும் பாக்டீரியாவின் வடிவத்தில் வேதியியல் பொருள்களைக் கொண்டு உயிர் தரப்பட்டுள்ளது. பாக்டீரியா இப்போது செழித்து வலர்ந்து இனப்பெருக்கம் செய்து குட்டிக் குட்டி புதிய பாக்டீரியாக்கள் உருவாகிவிட்டன. அறிவியல் சாதித்துவிட்டது.
பாக்டீரியா என்னும் உயிரை உருவாக்க முடியும் போது, மாடு, ஆடு, பூனை, யானை, மனிதன் ஏன் விரும்பினால் டைனோசரைக் கூட இனி உயிரோடு கொண்டு வரமுடியும்.. வாழும் மனிதனுக்கு நோய்களிலிருந்து மாற்று அளிக்க முடியும்... ஆம் அறிவியல் சாதித்துவிட்டது. கடவுள் மட்டும்தான் படைக்க முடியும் என்று சொன்னவர்கள் இப்போது நடையைக் கட்டிக் கொண்டுவிட்டார்கள். அமெரிக்க அறிவியலார் ஜெ. கிரெய்க் வெண்டர் மற்றும் அவரது குழுவினர் தங்களின் தொடர் முயற்சிகளின் விளைவால் உருவாக்கிய செயற்கை உயிர் தான், இனி அடுத்த கட்ட அறிவியலின் அடிக்கல்.. அறிவைத் தடுத்த கடவுள் கொள்கைக்கு சமாதிக் கல். கிரிக், ஹாமில்டன் ஸ்மித், வாட்சன், சஞ்சய் வாஸி இப்படி எண்ணற்ற உயிர் வேதியியல் வல்லுநர்க ளோடு ராதா கிருஷ்ணகுமார் என்ற நம் தமிழ் நாட்டு அறிவியலாளரும் இணைந்து தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. வேதிப்பொருள்களின் வினைதான் உயிர் களின் உருவாக்கம் என்று இத்தனை நாள் கருத்தளவில் நாம் சொல்லி வந்தது இப்போது செய்து காட்டப்பட்டுள்ளது. பகுத்தறிவின் பெருவெற்றி இது என்று கூடிக் கொண்டாடு வோம். மடமையைப் பந்தாடுவோம்
[5:45 AM, 7/6/2015] +91 95516 56551: நன்பர் அவர்களே பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகிறது அதில் முதல் ஒரு செல் உயிரினம் தோன்றியது 70 கோடி ஆண்டுகள் அதில் மனிதன் தோன்றியது 20 மில்லியன் ஆண்டுகள் ஆகியது இன்னும் 5 மில்லியன் ஆண்டுகள் மனிதனை விட கூடுதல் அறிவுடன் வேறு உயிரினம் தோன்ற வாய்ப்புள்ளது அறிவியியல் ஆய்வு என்பது முடிவில்லாதது  கண்டு பிடித்த அனைத்து ஆய்வு முடிவுகள் யூகத்தின் அடிப்படையில் கூறுவது இல்லை மேலும் ஒரு விசயத்தையோ அல்லது ஒரு பொருளை கண்டுபிடித்த பிறகு அதுவே முடிவு அல்ல மேலும் மேலும் அதை ஆய்ந்து அறிவது தான் அறிவியல் அதனால் தான் அன்று மாட்டு வண்டியில் சென்ற மனிதன் இன்று சூப்பர்சானிக் விமானத்தில் செல்ல முடிகிறது வானில் வின்வெளி மையம் அமைக்க முடிகிறது இன்று மைக்ரான் அளவீட்டிலிருந்து நானோ அளவிட்டுக்கு கண்டுபிடிக்க முடிகிறது முப் பிறவி மறுபிறவி என்ற கருத்து எல்லாம் கருத்து முதல் வாதமே ஆகும்
[9:10 PM, 7/6/2015] +91 90925 52551: தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்
கிடைக்கும்?.

👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம்
பெறும்.

👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
நல்ல சக்தி உண்டாகும்.

👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.

👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

👉நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

👉ஆரஞ்சுப்பழத்துடன் தேன்
கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

👉ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

👉தேங்காய்பாலில் தேன்
கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.

👉இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.

👉கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

👉தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்
குறையும்.

👉இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக
இருந்தால் உங்கள் நண்பர்களுடன்👆
பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள்.
[11:47 PM, 7/6/2015] C N. ராமச்சந்திரன்: Idhula enna iruku?
[11:52 PM, 7/6/2015] +91 90925 52551: 🔴நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு
சுழன்று கொண்டிருக்கிறது.

🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

🔴இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

🔴மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.
[10:55 AM, 7/7/2015] +91 90925 52551: மனிதன்  எப்படி, எப்போது ஐந்தறிவுப்  பிராணியாக மாறுகிறான் என்பதற்கு  மகாகவி பாரதியார் விளக்கம்  தந்திருக்கிறார்.  *வஞ்சனையால் சமய சந்தர்பத்திற்குத்  தகுந்தபடி கபடங்கள் செய்து  வாழ்பவன் நரி.  * உற்சாகமில்லாமல் சோர்வாய், சுறுசுறுப்பைத் தொலைத்துவிட்டு  உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு .  *மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு  செய்பவன் பாம்பு.  *அற்ப சுகத்தில் ஆழ்ந்து கிடப்பவன் பன்றி .  *பிறருக்குப் பிரியமாய் நடந்து, அவர்கள்  கொடுப்பதை உண்டு  வாழ்பவன் நாய் .  *கண்ட கண்ட விஷயங்களுக்கு எல்லாம்  கோபப்படுபவன் வேட்டைநாய்.  *தேடலினால் அறிவைச் சேர்க்காமல், பிறர்  சொன்னதைச் சொல்லித்  திரிபவன் கிளிப்பிள்ளை .* மற்றவர்கள் மரியாதை இல்லாமல்  நடத்தினாலும். பொறுத்துப்  போகிறவன் கழுதை .  *வீண் ஆடம்பரத்தில் படோடோபமாக  வாழ்பவன் வான்கோழி .  *தான் சம்பாதிக்காமல் பிறர்  சொத்தை அபகரிப்பவன் கழுகு.  *மாற்றங்களை அங்கீகரிக்க  மறுப்பவன் ஆந்தை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக