புதன், 23 மார்ச், 2016

[6:22 PM, 10/7/2015] C N. ராமச்சந்திரன்: இன்று நம் ஜி.டி. நாயுடு ஐயா அவர்களின் பிறந்தநாள்..

இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்...மறக்காமல் SHARE செய்யவும்

முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள்.பல்கலைக் கழகம் கூட முடிக்காதவர்.

மரக்கரியில் இயங்கிய பஸ்

கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.

மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்

வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்
G.D. NAIDU CHARITIES ,
President Hall, 734,
Avinashi Road,
Coimbatore - 641018. INDIA

நம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை ....

ஆனால் இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்...மறக்காமல் SHARE செய்யவும்
By Prem Kumar🙏🏻🙏🏻🙏🏻
[10:50 PM, 10/7/2015] அருள் (பர்னஸ்): என் அன்பு நண்பர்களுக்கு........

என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....

நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...

வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்..

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்..

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...

என் இதயத்தின் அத்தனை
அறைகளிலும் நிறைந்து இருக்கும்
என் நண்பர்கள் அனைவருக்கும் இது சமர்பனம் 😜😜2:43
[11:09 AM, 10/10/2015] +91 95516 56551: பேஸ்புக்கில் 6 விதமான உணர்வினை தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்..!
[11:10 AM, 10/10/2015] +91 95516 56551: பேஸ்புக்கில் 6 விதமான உணர்வினை தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்..!..                                       .                                                                                                                                          சமூகவலைதளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக்கில், டிஸ்லைக் பட்டன் இடம் பெறப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு இருந்த அளவிற்கு வரவேற்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனிடையே, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் டிஸ்லைக் பட்டனிற்கு பதிலாக, ஆறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுவரை ஒருவர் பதிவிட்ட கருத்திற்கு லைக் மட்டுமே போட்டு வந்த நமக்கு, இனி ஒரு கருத்திற்கு 6 விதமான உணர்வினை தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
[11:17 AM, 10/10/2015] +91 95516 56551: ஆதார் அட்டை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்!
[11:18 AM, 10/10/2015] +91 95516 56551: ஆதார் அட்டை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்!                                                                                                                                              அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியம் என்கிற வழக்கை அரசிய சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.

அரசு வழங்கும் மானியங்களைப் பெற ஆதார் அட்டைக் கட்டாயம் என்று முந்தையஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமையிளன காங்கிரஸ் அரசு உத்தரவுப்பிறப்பித்து இருந்தது.அதையே இப்போது பாஜக அரசும் பின்பற்றி வருகிறது.ஆனால் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைக்காத நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றுத் தாக்கலானது. இதையடுத்து இத்திட்டத்துக்கு ஆகஸ்ட் 13ம் திகதி வரை தடை போட்டு இருந்த நீதிபதிகள், இப்போது இத்தத் தடையை நீக்க மறுத்துவிட்டது.

அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுதான் சரியான அணுகுமுறை என்றும், எனவே, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அமைப்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\ தெரிவித்துள்ளனர்.இந்த அமர்வுக் குறித்து நாளை மாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
[7:47 AM, 10/11/2015] +91 95516 56551: பழம்பெரும் நடிகை மனோரம்மா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்
[12:37 PM, 10/11/2015] +91 90925 52551: உலகின் முதல் மொழி தமிழ்!

ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

========================

தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake

S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..

உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .

கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )

" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .

ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்

- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .

கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !

" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .

1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.

1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.

700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.                  

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .

இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன.
[12:48 AM, 10/14/2015] +91 95516 56551: https://play.google.com/store/apps/details?id=com.estrongs.android.pop&hl=en
[6:29 AM, 10/14/2015] செந்தாமர: ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.

அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன்  எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து  நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .

எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....

இப்படி இருக்கையில் ஒருநாள்  தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று......
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.

தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்

நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்.....

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..
[11:57 AM, 10/14/2015] +91 95516 56551: ஸ்மார்ட் போன் குறித்த தவறான கருத்துக்கள்!                                                                          ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் நிறைந்த இந்த விற்பனைச் சந்தையில், நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால், பலர் ஸ்மார்ட் போன்கள் குறித்துத் தவறான கருத்துகளை வளர்த்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
[11:58 AM, 10/14/2015] +91 95516 56551: mAH குறியீடு எண்
[11:59 AM, 10/14/2015] +91 95516 56551: mAH குறியீடு எண்                                                                                                                               ஸ்மார்ட் போனில் நிச்சயமாய், இறுதியாகக் காணப்படும் குறிப்பு, அதில் உள்ள பேட்டரியின் திறன் குறித்ததாக இருக்கும். பேட்டரியின் திறனை mAH எனக் குறிக்கின்றனர். இது A milliampere hour (mAh) எனப்படும். (Milliamp Hours.) ஓர் ஆம்பியர் ஹவர் (Ah) என்பதில் 1000ல் ஒரு பங்கு. பேட்டரி ஒன்று, தான் கொள்ளும் சக்தியின் நிலையை இது குறிக்கிறது. அந்த பேட்டரி, மீண்டும் ரீசார்ஜ் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படும் முன், எவ்வளவு மணி நேரம் சக்தியினைக் கொண்டிருக்கும் என்பதனை இது குறிக்கிறது. இந்த எண் உயர்ந்த எண்ணாக இருந்தால், அந்த பேட்டரியின் திறன் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். இது தவறு. இதனை வேறு ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம்.

1000 கிலோ எடையும், 100 bhp திறன் கொண்ட கார் ஒன்று, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கி.மீ. தூரம் செல்வதாக வைத்துக் கொள்வோம். காரின் எடையில், மேலும் 500 கிலோ அதிகப்படுத்தினால், கார் கொடுக்கும் மைலேஜ் நிச்சயம் குறையும். அதே போல, சீட்களை எல்லாம் எடுத்துவிட்டால், நிச்சயம் எடை குறைவாக இருப்பதனால், அதிக மைலேஜ் கொடுக்கும். அதே போல, ஒருவர் காரை எப்படி இயக்குகிறார் என்பதைப் பொறுத்தும் மைலேஜ் வேறுபடும். இதே நிலை தான் ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியின் திறனிலும் ஏற்படுகிறது. வெறும் அழைப்புகளுக்கு மட்டுமே போனைப் பயன்படுத்துவோரின் பேட்டரி அதிக திறனைத் தரும். பல்வேறு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் ஒருவரின் ஸ்மார்ட் போன் பேட்டரியின் திறன் நிச்சயம் குறையும்.

இரு போன்களில், 3000 mAH பேட்டரிகளை வைத்து இயக்கினாலும், ஒரு போனில் திரை சற்றுப் பெரியதாக இருந்தால், அதன் பேட்டரி திறன் குறைவாகவே இருக்கும். எனவே, பேட்டரியின் ஹார்ட் வேர் குறித்த தகவல்களைக் காட்டிலும், அந்த போனில் இயங்கும் சாப்ட்வேர் செயலிகளை எப்படி இயக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அந்த பேட்டரியின் திறன் அமையும். எனவே, அதிக mAH என்பது சில பேட்டரிகளைப் பொறுத்தவரை நீண்ட நாள் உழைக்கும் என்பதைக் குறித்தாலும், எப்போதும் அது பேட்டரியின் நீண்ட நாளுக்கு உத்தரவாதம் தரும் என்று சொல்ல முடியாது.
[11:59 AM, 10/14/2015] +91 95516 56551: அதிக பிக்ஸெல் கொண்ட திரை
[12:00 PM, 10/14/2015] +91 95516 56551: அதிக பிக்ஸெல் கொண்ட திரை                                                                                                         இந்த தகவலும், ஏறத்தாழ மேலே சொல்லப்பட்ட பேட்டரியின் வாழ்நாள் போன்ற பிரச்னையைக் கொண்டுள்ளது. அதிக பிக்ஸெல்கள் கொண்ட திரை எனில், கூடுதல் சிறப்பான காட்சியைத் தரும் என்பது, எப்போதும் உண்மையாக இருக்காது. அதிக பிக்ஸெல்களால் நமக்குக் கிடைப்பது, திரைக் காட்சி குறித்த அதிக தகவல்கள் தாம். அதிக தகவல்களை சென்சார்களால் உணர முடியும். இதனால், படக் காட்சி குறித்து அதிக தகவல்கள் கிடைக்கின்றன. படத்தின் தன்மைப் பண்பு சிறப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது.

இந்த மெகா பிக்ஸெல் குறித்த விளம்பர விளையாட்டு, டிஜிட்டல் சாதன உற்பத்தியாளர்களால், டிஜிட்டல் கேமராக்கள் தயாரிக்கத் தொடங்கிய போது மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அப்போது, கேமராக்களில் ரெசல்யூசன் மிகவும் குறைவாக இருந்தது. அதனால், ரெசல்யூசன் அதிகப்படுத்தப்படுகையில், படத்தின் தெளிவு கூடுதலாக அமைந்தது. ஆனால், இப்போதோ, மெகா பிக்ஸெல்கள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டால் படத்தின் தெளிவு கூடுதலாக இருக்கும் என்ற நிலைக்கு அப்பால் நம் தொழில் நுட்பம் சென்றுவிட்டது. சில மெகா பிக்ஸெல்களை அதிகமாக அமைப்பதாலேயே, படத்தின் தெளிவு அதிகமாகும் என்பது மாயையாக மாறிவிட்டது. ஒரு பெரிய அளவில் இந்த படத்தினை அச்செடுத்தால் தான், இதன் தன்மை புரியும்.

ஒரு படத்தின் தெளிவுப் பண்பினை வேறு சில அம்சங்களும் முடிவு செய்கின்றன. அதனால் தான், நைகான் டி4எஸ் கேமராவில் (விலை 7,000 டாலர்) சென்சார் 16 மெகா பிக்ஸெல் மட்டுமே. இந்த ரெசல்யூசனை, உங்கள் ஸ்மார்ட் போன் எளிதில் மடக்கிவிடுமே. சென்சாரின் அளவு, லென்ஸின் தன்மை திறன், ISO திறன் ஆகியவை தான் படம் ஒன்றின் பண்புத் தன்மையை முடிவு செய்கின்றன. மெகா பிக்ஸெல் மட்டுமல்ல. சொல்லப்போனால், பல ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சார்கள், பார்த்து படம் எடுக்கும் (Point and shoot) கேமராக்களில் உள்ள சென்சார்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன.
[12:00 PM, 10/14/2015] +91 95516 56551: ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும்:
[12:01 PM, 10/14/2015] +91 95516 56551: ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும்:                                                    இந்தக் கூற்றில் ஒரு பக்கம் உண்மை உள்ளது என்றே கூற வேண்டும். ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும் தான்; எப்போது? நீங்களாக அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திடும்போதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே, மால்வேர்களை வரவழைக்கும் பிழையான வழிகள் உள்ளன என்பது தவறு. எந்த போன் சார்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இதற்கான பிழை குறியீடுகள் இருக்கலாம். அதனால் தான், ஆண்ட்ராய்ட் போன்கள், தர்ட் பார்ட்டிகள் தரும் APK பைல்கள் கொண்ட அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திட அனுமதிப்பதில்லை. நம்பிக்கையான நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களை மட்டுமே நாம் இன்ஸ்டால் செய்தால், எந்த போனிலும் மால்வேர் வரும் சாத்தியங்கள் ஏற்படாது. மேலும், தொடக்கத்தில் இந்த அப்ளிகேஷன்களில் மால்வேர்கள் இருப்பது எந்த வகையிலும் வெளியே தெரியாது. போகப்போகத்தான் இவற்றின் செயல்பாடுகளை நாம் அறிவோம்.

மிக அதிகமாக இணைய டேட்டா பயன்பாடு, அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் போன்றவை ஏற்படுகையில் தான், மால்வேர் குறித்து நாம் சந்தேகப்படுவோம். எனவே, நம்பக் கூடாத அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே, ஆண்ட்ராய்ட் போன்களில்  மால்வேர்கள் வரலாம். அது ஆண்ட்ராய்ட் என்பதால் மட்டுமே வராது. தற்போது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். கொண்ட போன்களில் மால்வேர்கள் வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போனில் மட்டுமே மால்வேர் வரும் வாய்ப்புகள் உள்ளன என்பது தவறான கருத்தாகும்.
[12:01 PM, 10/14/2015] +91 95516 56551: அதிக 'கோர்' எனில் கூடுதல் திறன் ப்ராசசர்:
[12:02 PM, 10/14/2015] +91 95516 56551: அதிக 'கோர்' எனில் கூடுதல் திறன் ப்ராசசர்:                                                                                சில ஆண்டுகளாகவே, மொபைல் போன் ப்ராசசர் குறித்து தகவல் தருகையில், டூயல் கோர், குவாட் கோர், ஆக்டா கோர் என விளம்பரப்படுத்துகின்றனர். இது ஏற்கனவே, கேமரா மற்றும் பேட்டரியின் பயன் நாள் குறித்த தகவலைப் போன்றதுதான். ஒரு ப்ராசசரில் அதிக 'கோர்' இருப்பதனாலேயே, குறைவான 'கோர்' இருக்கும் ப்ராசசரைக் காட்டிலும், வேகமாக இயங்கும் என்பது தவறு. ப்ராசசர் ஒன்றின் செயல் திறனை பல அம்சங்கள் முடிவு செய்கின்றன. கோர் மட்டுமல்ல. முதலில் 'கோர்' என்னவென்பதைக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட multi core processor என்பது, ஒரே ஒரு கம்ப்யூட்டிங் சிப் ஆகும்.இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில், ப்ராசசிங் அலகுகள் இருக்கும். இந்த அலகுகளைத் தான் 'கோர்' (Core) என்கின்றனர்.



ஒவ்வொரு ப்ராசசிங் அலகும் தனித்தனியே தகவல்களைச் செயல்படுத்தி முடிவுகளை அனுப்பும். ஆனால், அவையே ஒரு ப்ராசசரின் தனித் திறனை தீர்மானிக்கும் என முடிவு செய்திடக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஆப்பிள் போன்களையும் சாம்சங் போன்களையும் ஒப்பிடலாம். ஆப்பிள் ஐபோன் 6 எஸ் அல்லது 6 எஸ் ப்ளஸ் ஆகியவற்றையும் சாம்சங் காலக்ஸி எஸ்6 எட்ஜ் அல்லது நோட்5 ஐயும் ஒப்பிடலாம். இரண்டு ஆப்பிள் போன்களிலும், ஆப்பிள் ஏ9 சிப்செட்கள் உள்ளன. இவை இரண்டு கோர்களை உடையவை. சாம்சங் நிறுவன சாதனங்களில், ஆக்டா கோர் எக்ஸைனோஸ் சிப்செட்கள் பொருத்தப்பட்டு இயங்குகின்றன. சாம்சங் சாதனங்களில் உள்ள எக்ஸைனோஸ் ப்ராசசரை டூயல் கோர் என்று அழைப்பது பொருந்தும். இவற்றில் இரண்டு செட் குவாட் கோர் ப்ராசசர்கள் உள்ளன. ஆனால், ஒரு நேரத்தில், போன் ஆற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, ஒரு செட் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் சாதனத்தில் உள்ளதைப் போல நான்கு மடங்கு அளவில் சாம்சங் போனில் உள்ள ப்ராசசர்களில் கோர் செட் இருந்த போதிலும், ஆப்பிள் 6 எஸ் ப்ளஸ் போனின் செயல்திறன், சாம்சங் போனில் உள்ள ப்ராசசரின் செயல் திறனுக்கு இணையாகத்தான் உள்ளது. இதிலிருந்து, ஸ்மார்ட் போன் ஒன்றின் செயல்திறன், அதன் ப்ராசசரில் உள்ள கோர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் அல்ல என்பது உறுதியாகிறது.
[12:02 PM, 10/14/2015] +91 95516 56551: போனுடன் வரும் சார்ஜர்:
[12:06 PM, 10/14/2015] +91 95516 56551: போனுடன் வரும் சார்ஜர்:                                                                                                            மொபைல் போனுடன் இணைத்து தரப்படும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. போன் தயாரித்த நிறுவனம், போனுக்கேற்ற வகையில் தயாரித்து தந்துள்ள சார்ஜர் மற்றும் கேபிளைப் பயன்படுத்துவது நல்லதுதான்.  ஆனால், அதே திறன் குறிப்புகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு வழங்கப்படும், பிற நிறுவனங்களின் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம். தர்ட் பார்ட்டி தயாரித்து வழங்கும் சார்ஜரும், மொபைல் போன் தயாரித்த நிறுவனம் வழங்கிய சார்ஜரின் பவர் ரேட்டிங் கொண்டிருந்தால், அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. போனுடன் வந்த சார்ஜரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. பவர் ரேட்டிங் வித்தியாசமாக உள்ள சார்ஜரைப் பயன்படுத்தினால் என்னவாகும்? என்ற வினா எழலாம். உங்களுடைய ஸ்மார்ட் போன் 1.5A சார்ஜருடன் தரப்பட்டதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வேறு நிறுவனம் தயாரித்து வழங்கிய 1.2A சார்ஜரைப் பயன்படுத்தி, போனை சார்ஜ் செய்திடலாம். இதில் வேறுபாடு என்னவென்றால், உங்கள் போன் அதன் நிறுவன சார்ஜர் மூலம் சார்ஜ் செய்திட எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டிலும், சற்று கூடுதலான நேரத்தை சார்ஜ் செய்திட எடுத்துக் கொள்ளும். மற்றபடி வேறு எந்த ஊறு விளைவிக்கும் விளைவுகள் எதுவும் ஏற்படாது.


ஆனால், அதற்கு 2A சார்ஜர் பயன்படுத்தினால், தொடர்ந்து பயன்படுத்துகையில், ஸ்மார்ட்போன் மற்றும் பேட்டரிகளில் பிரச்னை ஏற்படலாம். ஏனென்றால், அவை 1.5A சார்ஜருடன் சார்ஜ் செய்திடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டவையாக இருப்பதால், நிச்சயம் அவற்றின் செயல் திறன், நீண்ட காலத்திற்குப் பின் முடக்கப்படலாம்.  எனவே, திறன் கூடிய சார்ஜரை, அவசரத்திற்கு, வேறு சார்ஜர் இல்லாத நிலையில் ஓரிரு முறை பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துவது தவறு.                                                 .....                                                                                                          ................................................................   நன்றி  tamilRockers
[4:30 PM, 10/14/2015] ஆறுமுகம் (கிரேன்): புனித ஜான் ஆஃப் ஆர்க் என்ற பெண் கி.பி.1412-ல் பிறந்தார்.தன் இளவயதில் சிறந்த ஆற்றலால் பிரான்ஸ் படைக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்று - பிரான்சில் ஏழாம் சார்ல ஸ் மன்னனாக முடிசூட காரணமாக இருந்தவர்.

அப்போதைய பிரான்சின் எதிரியான இங்கிலாந்து நாடு - அங்குள்ள தலைமை பாதிரியாரின் துணையோடு - ஆர்க் சூனியக்காரி என்று அறிவித்து அவளை
தீயிட்டு எரித்து கொலை செய்தனர்.
அப்போது அவளின் வயது 19.

பின்னாளில் அதாவது கி.பி. 1900-க்கு பிறகு
அவள் குற்றமற்றவர்
என்று தீர்ப்பு கூறிய
பாதிரியார் - அதாவது
400 ஆண்டுகளுக்கு பிறகு - ஜான் ஆஃப் ஆர்க் -ற்கு அருளாளர் என்ற பட்டமும் பின்பு
1920-ல் புனிதர் என்ற
பட்டமும் வழங்கப்பட்டது.


இது போல் சூன்யக்காரி என்ற பட்டம் சூட்டி
இவள் சாத்தானுடன்
உறவு கொண்டவள்
என்று பொய்குற்றம்
சாட்டி பலப் பெண்கள்
பலப் பெண் தீர்க்கதரிசிகள்
ஞானிகள் - பாதிரியார்களால்
தீயிலிட்டு எரிக்கப்பட்டனர்
அந்தப் பலப் பெண்களின் தெரிந்த ஆரோக்கியமான பார்வையில் - இந்தச் சமூகமே முன்னேற்றப் பாதையில் பயணித்திருக்கும்.

பெண்களே -
இந்தச் சமூகத்தை
வடிவமைக்கும் சிற்பி.
பெண்மையை போற்றி
வணங்குவோம்.

ஓ   ஜான் ஆஃப் ஆர்க் - என்ற துணிவின் சிகரமே = 'நின் தாள் சரண்.
[8:51 PM, 10/15/2015] திருமுகம் (SI): சீனா தனது பண மதிப்பை குறைக்கவில்லை எனில் கடும்  பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்ற கருத்தை உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இதனால் சீனா தனது பண மதிப்பை 30% குறைத்து இந்திய சந்தையில் சீன உற்பத்தி பொருட்களின் விலையை மிக மலிவாக்கியுள்ளது.
இந்தியர்கள் அனைவரும் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் சீன பொருட்களை வாங்காமல் இருந்தால் போதும்...

1.சீனா பொருளாதாரத்தில் பின் தங்கும் ....

2.இதன் விளைவாக இந்தியாவோடு எல்லை பிரச்சினை செய்யாது....

3.பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக தூண்டும் வேலையை செய்யாது ...

4.இலங்கை அரசுக்கு ஆதரவான போக்கை நிறுத்தும் ....

5.தரமற்ற சீன  பொருட்கள் இந்தியாவிற்குள் வருவது குறையும்

ஆதலால் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் இந்தியர்கள் யாரும் சீன பொருட்கள் எவ்வளவு மலிவாக கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.

தீபாவளி வரப்போகிறது. சாதாரணமாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்டாசு வெடிக்க போகிறோம்..

வருடத்தில் ஒரு தடவை தான், பரவாயில்லை காசை பொருட்படுத்தாமல் வெடிப்போம்..ஆனால் வெடிப்பது சிவகாசி பட்டாசாக இருக்கட்டும்., சீனப்பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம்..

நாம் கரியாக்கும் காசினால் தமிழர்கள் வாழ வேண்டும்...

சீனர்கள் பிழைக்க நாம் பண்டிகை கொண்டாடத் தேவையில்லை.. தயவு செய்து பகிர்வு கொள்ள வேண்டும்.....
[8:56 PM, 10/15/2015] அருள் (பர்னஸ்): Maplayi super
[8:49 AM, 10/16/2015] +91 95516 56551: சாம்சங் Z3 ஸ்மார்ட்போன் அறிமுகம் !!
[8:49 AM, 10/16/2015] +91 95516 56551: சாம்சங் Z3 ஸ்மார்ட்போன் அறிமுகம் !!                                                                                    சாம்சங் நிறுவனம் Z3 என்ற ஸ்மார்ட்போனை புதன்கிழமை அன்று அதன் மூன்றாவது டைசன் அடிப்படை சார்ந்த ஸ்மார்ட்போனான சாம்சங் Z3 ஸ்மார்ட்போனை ரூ.8,490 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் சேனல்கள் மற்றும் ஸ்நாப்டீல் வழியாக அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு செல்லும். இது கோல்டு, பிளாக் மற்றும் சில்வர் வண்ண வகைகளில் வருகிறது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட சாம்சங் Z3 ஸ்மார்ட்போனில் டைசன் 2.4 மூலம் இயங்குகிறது. சாம்சங் Z3 ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி சூப்பர் Amoled டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ஸ்பெரட்ரம் SC7730S ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.
சாம்சங் Z3 ஸ்மார்ட்போனில் f/2.2 அபெர்ச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 2600mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இது 141.6x70x7.9mm நடவடிக்கைகள் மற்றும் 137 கிராம் எடையுடையது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4, ஜிஎஸ்எம், 3ஜி, FM ரேடியோ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.
சாம்சங் Z3 ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:
டூயல் சிம்
பொது
வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
எடை (கி): 137
பேட்டரி திறன் (mAh): 2600
நீக்கக்கூடிய பேட்டரி: ஆம்
வண்ணங்கள்: கோல்டு, பிளாக், சில்வர்
டிஸ்ப்ளே
திரை அளவு: 5.0
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 720x1280 பிக்சல்கள்

ஹார்டுவேர்
ப்ராசசர்: 1.3GHz குவாட் கோர் ஸ்பெரட்ரம் SC7730S
ரேம்: 1ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 8ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 128

கேமரா
பின்புற கேமரா: 8 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 5 மெகாபிக்சல்
சாஃப்ட்வேர்
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: டைசன் 2.4
இணைப்பு
Wi-Fi 802.11 b/g/n
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத் 4
ஜிஎஸ்எம்
மைக்ரோ-யூஎஸ்பி
FM ரேடியோ
3ஜி
சென்சார்கள்:
ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்
[11:32 AM, 10/16/2015] +91 95516 56551: ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!                                                                   இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.
[11:32 AM, 10/16/2015] +91 95516 56551: ஸ்கிரீன் லாக்!

எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம்.

இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.
[11:33 AM, 10/16/2015] +91 95516 56551: என்க்ரிப்ட் வசதி!

மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!

செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது android.com/devicemanager என்ற முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.
[11:34 AM, 10/16/2015] +91 95516 56551: அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!

பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில் வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40% வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை நெட்வொர்க் அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

இதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
[11:35 AM, 10/16/2015] +91 95516 56551: முக்கியமான தகவல்கள் பத்திரம்!

உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில் பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவது தவிர, போன் பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
[11:35 AM, 10/16/2015] +91 95516 56551: நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!

குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை, பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.

குறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.
[11:36 AM, 10/16/2015] +91 95516 56551: அப்ளிகேஷன் லாக்!

முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை எப்போதும் லாக் செய்து வைக்கலாம்.

இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொருமுறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.
[11:36 AM, 10/16/2015] +91 95516 56551: ரூட் (Root) செய்ய வேண்டாம்!

போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல்வேறு வசதிகள் கிடைக்கும்.

ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அறியும் வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.
[11:36 AM, 10/16/2015] +91 95516 56551: பிரவுஸர்கள் எச்சரிக்கை!

போனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.

அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.
[11:37 AM, 10/16/2015] +91 95516 56551: அப்டேட் அவசியம்!

போனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட் வசதி வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.

ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.
[11:37 AM, 10/16/2015] +91 95516 56551: போன் தொலைந்துவிட்டால்..?

இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன் தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்றுவது.

அடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’ மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.

ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை நீங்களும் பின்பற்றலாமே!

(23 நவம்பர், 2014 நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை)

நன்றி – செ.கார்த்திகேயன்.
[12:26 PM, 10/16/2015] +91 95516 56551: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கற்றுகொண்டபாடம்
[4:59 PM, 10/16/2015] கஜபதி (400 Slitt er): சீனா தனது பண மதிப்பை குறைக்கவில்லை எனில் கடும்  பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்ற கருத்தை உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இதனால் சீனா தனது பண மதிப்பை 30% குறைத்து இந்திய சந்தையில் சீன உற்பத்தி பொருட்களின் விலையை மிக மலிவாக்கியுள்ளது.
இந்தியர்கள் அனைவரும் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் சீன பொருட்களை வாங்காமல் இருந்தால் போதும்...

1.சீனா பொருளாதாரத்தில் பின் தங்கும் ....

2.இதன் விளைவாக இந்தியாவோடு எல்லை பிரச்சினை செய்யாது....

3.பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக தூண்டும் வேலையை செய்யாது ...

4.இலங்கை அரசுக்கு ஆதரவான போக்கை நிறுத்தும் ....

5.தரமற்ற சீன  பொருட்கள் இந்தியாவிற்குள் வருவது குறையும்

ஆதலால் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் இந்தியர்கள் யாரும் சீன பொருட்கள் எவ்வளவு மலிவாக கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.

தீபாவளி வரப்போகிறது. சாதாரணமாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்டாசு வெடிக்க போகிறோம்..

வருடத்தில் ஒரு தடவை தான், பரவாயில்லை காசை பொருட்படுத்தாமல் வெடிப்போம்..ஆனால் வெடிப்பது சிவகாசி பட்டாசாக இருக்கட்டும்., சீனப்பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம்..

நாம் கரியாக்கும் காசினால் தமிழர்கள் வாழ வேண்டும்...

சீனர்கள் பிழைக்க நாம் பண்டிகை கொண்டாடத் தேவையில்லை.. தயவு செய்து பகிர்வு கொள்ள வேண்டும்.....
[6:50 PM, 10/17/2015] +91 95516 56551: ஒரு டீ சொல்லேன்..                                                                                                                                     டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது. டீயில் என்னென்ன வகைகள்கள் உள்ளன? எந்த டீயை நம்பிச் சாப்பிடலாம்?
[6:52 PM, 10/17/2015] +91 95516 56551: வொயிட் டீ
[6:52 PM, 10/17/2015] +91 95516 56551: வொயிட் டீ                                                                                                                                      இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். தேயிலைச் செடியின் இளந்தளிர்களைப் பறித்துத் தயாரிக்கப்படுவதால், இந்த டீ புதுமையான சுவையுடன் இருக்கும். லேசான இனிப்புச் சுவையுடன் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதில், பாலிபினால்ஸ் என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து இருப்பதால், புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறன் கிடைக்கும். இதில், ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால், பற்சிதைவு மற்றும் பற்குழி போன்ற பிரச்னைகள் வராமல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, கிருமித் தொற்றுப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
[6:53 PM, 10/17/2015] +91 95516 56551: கிரீன் டீ
[6:53 PM, 10/17/2015] +91 95516 56551: கிரீன் டீ                                                                                                                                                            இதில் அதிக அளவு பாலிபினால்ஸ் இருக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சில புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
[6:54 PM, 10/17/2015] +91 95516 56551: ஓலாங் டீ
[6:54 PM, 10/17/2015] +91 95516 56551: ஓலாங் டீ                                                                                                                                             பழங்கள், மல்லிகை போன்ற பல நறுமணங்களில் கிடைக்கிறது. வைட்டமின்கள், தாமிரம், செலினியம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும். எலும்புகள் உறுதி அடையும். அலர்ஜி, பற்கள் தொடர்பான பிரச்னைகள் வராது. புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்த டீயைக் குடிக்கலாம்.
[6:55 PM, 10/17/2015] +91 95516 56551: ஐஸ் டீ
[6:56 PM, 10/17/2015] +91 95516 56551: ஐஸ் டீ                                                                                                                                                         பிளாக், ஓலாங், வொயிட், கிரீன் போன்ற டீ வகைகளை, ஐஸ் டீயாகவும் தயாரிக்கலாம். டீயைத் தயாரித்துவிட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடவும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மூன்று துளசி இலைகள், தர்பூசணி, திராட்சை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சுப் பழத்துண்டுகள் - சிறிதளவு, மூன்று ஐஸ் கட்டிகளை, ஃபிரிட்ஜில் வைத்த டீயுடன் கலந்தால், மணமும் சுவையும் மிக்க ஐஸ் டீ தயார். வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளதால், ஒரு நாளுக்குத் தேவையானப் புத்துணர்வு ஒரு கப் டீயில் கிடைக்கும்
[6:56 PM, 10/17/2015] +91 95516 56551: மூலிகை டீ
[6:57 PM, 10/17/2015] +91 95516 56551: மூலிகை டீ                                                                                                                                                  துளசி, புதினா, ரோஸ்மெரி, செம்பருத்தி, ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ, மல்லிகை, லாவண்டர், ஏலக்காய், லெமன் கிராஸ், இஞ்சி போன்றவற்றைக் கலந்து, மூலிகை டீ தயாரிக்கலாம். குமட்டல், தலைவலி, இருமல், சளி போன்ற தொல்லைகள் தீரும். புத்துணர்வைத் தரும். கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்கள் அண்டாது. நீண்ட, ஆழமான தூக்கம் கிடைக்கும். வயிறு மற்றும் செரிமான இயக்கங்களுக்கு மிகவும் நல்லது. நல்ல மனநிலையைத் தரும். நரம்பு மண்டல இயக்கத்தைச் சீராக்கும். தலைவலி குணமாகும். உள்ளுறுப்புகளில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.
[7:02 PM, 10/17/2015] ஆறுமுகம் (கிரேன்): Super information Thiru. Thanks
[7:09 PM, 10/17/2015] சித்ராதிருவாசகம்: Hai Naveen
[7:39 PM, 10/17/2015] சங்கர்: அருமை0:48
[6:02 AM, 10/18/2015] +91 95516 56551: இணையத்தளம் இயங்குவது எப்படி ?
[6:04 AM, 10/18/2015] +91 95516 56551: இணையத்தளம் இயங்குவது எப்படி ?                                                                                            எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.

தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல்கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் (இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக்) என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதனை "கிளையண்ட்" என அழைக்கிறோம். இந்த "கிளையண்ட்" நீங்கள் தேவை என்று சொன்ன, (இணைய தளம் வேண்டும்) உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்" என்னும் அதிவேக வழியில் செல்கிறது.

இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்" என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.

நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது.

இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது TCP-IP, HTTP, FTP, SMTP WiFi எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக TCP-IP பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.

இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.*****.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும்.

இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது.

முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன.

இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது.

ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். Transmission Control Protocol என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு.

ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.                                                                                                                          நன்றி       http://tamilrockers.com/
[5:54 PM, 10/18/2015] +91 95516 56551: படித்ததில் பிடித்தது.
[7:08 PM, 10/18/2015] +91 95516 56551: சிரிப்புகள் பலவிதம்                                                                                                                                               *  ஓயாமல் சிரிப்பவன்- பைத்தியக்காரன்

* ஓடவிட்டு சிரிப்பவன்- வஞ்சகன்

* இடம்பார்த்து சிரிப்பவன்- எத்தன்

* குழைந்து சிரிப்பவன்- கோமாளி

* இன்பத்தில் சிரிப்பவன்- ஏமாளி

* கண்பார்த்துச் சிரிப்பவன்- காரியவாதி

* யாரும் காணாமல் சிரிப்பவன்- கஞ்சன்

* கற்பனையில் சிரிப்பவன்- கவிஞன்

* வெற்றியில் சிரிப்பவன்- வீரன்

* நினைவோடு சிரிப்பவன்- அறிஞன்
[11:27 PM, 10/18/2015] +91 90925 52551: நடிகர் சங்க தேர்தல்: விஷால் வெற்றி
http://nhunt.in/DVjy
via NewsHunt.com
[6:35 AM, 10/20/2015] +91 95516 56551: கொடநாடும் ,வெளிநாடும்                                                                                                     சமீபகாலங்களாக அத்தியாவசியபொருட்களின் விலைதொடர்ந்து உயர்ந்துவருவதைமத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதுகவலைஅளிக்கிறது.
மாநிலத்தில் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசு கொடநாட்டில் ஓய்வெடுக்கிறது.அவ்வளவு பணிகளை இரவு பகலாக பார்த்து களைத்து பொய் விட்டது.
இந்தியா முழுக்க கண்காணிக்க வேண்டிய மத்திய அரசோ நாடு,நாடாக சுற்றுப்பயணம் மேற் கொண்டு ம்,மாட்டிறைச்சி அரசியலும் செய்து கொண்டிருக்கிறது.
விலை உயர்வைகட்டுப்படுத்தாமல் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக உணவுப் பொருட்களின் விலைஅறுவடைக் காலங்களில் குறைந்தும் அதன்பிறகுகாலப்போக்கில் உயர்ந்தும் காணப்படுவது இயல்பு.
ஆனால் அறுவடைக்காலம் அல்லதுஅறுவடைக்குபிந்தையகாலம் என்றுஎவ்விதவேறுபாடுகளும் இல்லாமல் தொடர்ந்துஉயர்ந்துகொண்டேபோகிறது.
பெரும் சூப்பர் மார்க்கெட்டுகள் நடத்தும் அம்பானி,ஐ.டி.சி,போன்ற பெரும் முதலாளிகள்தான் இந்த பருப்பு கொள்முதல்-பதுக்கலில் உள்ளனர் என்பது தெரிந்தும் கண்டு கொள்ளாமல்  ஜெயா ,மோடி அரசுகள் இருக்கின்றன.அவர்களுக்கு அந்த முதலாளிகள் கொட்டிக்கொடுக்கின்றனர்.ஆனால் மக்கள் அம்பானி,அதானிக்களுக்கு தங்கள் இருப்பையே கொடுக்கின்றனர்.
இதனால் சாதாரணஏழை-எளிய நடுத்தரமக்களை இந்தவிலைஉயர்வுபெரிதும் பாதிக்கிறது. நாங்கள் ஆட்சிக்குவந்தால் விலைஉயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்றுமோடியும் உடனடியாகதடுத்துநிறுத்துவோம் என்று ஜெயலலிதாவும் வாய் கூசாமல் வாக்குறுதிதந்துஆட்சிக்குவந்தார்கள்.
ஆனால் விலை வாசி உயர்வு விண்ணை முட்டுகிற போது இவர்கள் வாய் மூடி மவுனியாக இருப்பதன் ரகசியம் என்ன?
பருப்பு,எண்ணெய், புளி, மிளகாய்,அரிசி,காய்கறிகள் எனஅனைத்துஉணவுப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாகஉயர்ந்துள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுஎன்றும், நியாய விலைக் கடைகளில் பருப்பு கிடைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்த போது உணவு த்துறை அமைச்சர் ஆர். காமராஜ் நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்து விட்டேன்.
எல்லாக் கடைகளிலும் பருப்பு உள்ளது என்று கூறினார்.புகாரையும் மறுத்தார். இப்போது பருப்புதட்டுப்பாடுமற்றும் விலைஉயர்வுகுறித்து என்னசொல்லப்போகிறார்?எண்ணெய் வகைகள் ரூ.150,மிளகாய் ரூ.140,காய்கறிகள் ரூ.50 எனவிலைஉயர்வுநாளுக்குநாள் அதிகரித்துகொண்டேபோகிறது.
நவராத்திரி, ஆயுதபூஜை,தீபாவளி,கிறிஸ்துமஸ் எனதொடர்ந்துவரும் பண்டிகைக் காலங்களில் இது போன்றதாறுமாறானவிலைஉயர்வுபெரிதும் பாதிக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்களைஒட்டுமொத்தமாகபதுக்கிவைப்பதேவிலைஏற்றத்துக்கான காரணம் என வியாபாரிகள் சங்கம் புகார்தெரிவித்துள்ளது.

அதேபோல் துவரம் பருப்பையும்,உளுந்தம்பருப்பையும் ஒரேநேரத்தில் அதிகளவிற்குகொள்முதல் செய்திடதமிழகஅரசுஒப்பந்தம் கோரியதும் விலைஏற்றத்திற்கு காரணம் என்றுசொல்லப்படுகிறது.கடந்த 25 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த இரண்டுமாதங்களாகபருப்பு வகைகள் விலை இரு மடங்குஉயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு மூடை விலை ரூ.13,000 லிருந்து ரூ.16,000 ஆகஉயர்ந்துள்ளது. இந்த வகை துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.140 லிருந்து ரூ.170 ஆக கூடியுள்ளது.
பாக்கெட் பருப்புரூ.150 லிருந்து ரூ.180 ஆக உயர்ந்துள்ளது.
(இதில் பாசிப்பருப்புவிலைகுறித்துகணக்கீடுசெய்யப்படவில்லை)துவரம் பருப்புவிலையைகட்டுக்குள் வைக்கஆப்பிரிக்கநாடுகளிலிருந்து 5000டன் பருப்பு இறக்குமதிசெய்யப்படும் என்றுமத்தியஅமைச்சர்அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்படும்பட்சத்தில் கூடுதலாக 2000டன் இறக்குமதி செய்வதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள் ளார். துவரம் பருப்பு விலையை போல உளுந்தம் பருப்பு விலையும் அதிகரித்துக் கொண்டேவருகிறது.
கடந்தவாரம்100 கிலோ எடைகொண்டஉளுந்தம் பருப்பு மூடைரூ. 16,200 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அதன் விலைரூ.17,200 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.170 லிருந்து ரூ.180 ஆகவும் பாக்கெட் உளுந்தம் பருப்புரூ.180 லிருந்துரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்திற்கு குஜராத்,மத்தி யப்பிரதேசம்,உத்தரப்பிரதேசம்,மகாராஷ்டிரா,கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்க ளிலிருந்து பருப்பு விறபனைக்குவருகிறது. இந்தமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பால் வரத்துஅடியோடுகுறைந்துள்ளதுஎன்பதும் விலைஉயர்வுக்குகாரணம் என்றுசொல்லப்படுவதைமுழுமையாகஏற்றுக்கொள்ளமுடியாது. கடந்த 2014-2015ல் பருப்புஉற்பத்தி 12சதவிகிதம் சரிந்து உள்ளதுஎன்று அரசுதெரிவித்துள்ளது.
அப்படி இருந்தாலும் படிப்படியாகஅதுவும் அசுர வேகத்தில் விலைநாள்தோறும் உயர்வதற்குசாத்தியமில்லை. இத்தகையவிலை உயர்வுகளுக்கு யார் காரணம்?
அரசா?
வியாபாரிகளா?
பதுக்கல்காரர்களா?
ஆன்-லைன் வர்த்தகமா?
இங்குதான் அரசு மவுனம் சாதிக்கிறது.
மத்திய-மாநில அரசுகளின் மவுனம் கலைந்து விலை உயர்வுக்கான அடிப்படைக் காரணங்களை வெளிக் கொண்டு வந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டும்.
கொடநாடும் ,வெளிநாடும் சுற்றுப்பயணம் செல்லும் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் மக்கள் தங்களுக்கு எதற்காக வாக்களித்தார்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டு விலைகளைகட்டுப்படுத்தவேண்டும் .
இல்லை என்றால் நிரந்தரமாக ஓய்வெடுக்க இதே மக்கள் அனுப்பி வைத்து விடுவார்கள்.நன்றி http://suransukumaran.blogspot.in/
[6:48 AM, 10/20/2015] +91 95516 56551: எவ்வளவுதான் ஒதுக்கினாலும் இந்த நடிகர் சங்கத் தேர்தலை தாண்டி போகமுடியவில்லை .தொல்லைக்காட்சி ஊடகங்கள் 24X 7 அதைப்பற்றித்தான் பேசுகிறார்கள்,பேசுகிறார்கள்,பேசுகிறார்கள். இந்த முட்டல்கள்,மோதல்களுக்கான மையப்புள்ளி கமல்ஹாசனிடமிருந்துதான்  விஸ்வரூபம் கொண்டது என்றால் அது உண்மையே.
விஸ்வரூபம் வெளியாவதில் மத,அரசு பக்கம் இருந்து உண்டான சிக்கல்களில் கமல்ஹாசன் அல்லோகலப்பட்டுக்கொண்டு நாட்டை விட்டே போவதாக சொல்லும்போதும் அவர் இருந்த தென்னிந்திய நடிகர்சங்கம் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.
ஒரு வெற்று அறிக்கை கூட ஒப்புக்கு வெளியிடவில்லை.

காரணம் .தலைவர்,செயலாளர்களான மாமன்,மச்சான்களாகிய சரத் குமார்-ராதாரவி இருவரும் அதிமுக அல்லக்கைகள்.அம்மாவின் ஹெலிகாப்டர் வரும் ஓசை கேட்டே வானத்தை நோக்கி கும்பிடும் சாதி.கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ள,பிழைப்பை கெடுத்துக்கொள்ள இருவரும் தயார் இல்லை.

இந்தி,தெலுங்கு,கன்னடம்,வங்காளி என்று இந்திய மொழி நடிகர்கள்,இயக்குனர்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அறிக்கைகள் .சொந்த வீட்டையே படம் வெளியாகாவிட்டால் விற்று விட வேண்டியதுதான் என்ற போது அவருக்கு ஆறுதல் கூறி தமிழகம் முழுக்க இருந்து சொத்துப்பத்திரங்கள் அவர்  வீட்டுக்கு தாபாலில் வந்து குவிகிற கண்கலங்க வைக்கும் நிகழ்வுகள்.

அப்போது கமல்ஹாசனை பார்த்து ஆறுதல்  கூறிய நடிகர்கள் வாயிலில் இருந்த ஊடகங்களிடம் கருத்துகளை தெரிவித்து செல்கிறார்கள்.
அப்போது வந்த விஷால் கருத்துகளை கூறி விட்டு இந்த விடயத்தில் நடிகர் சங்கம் ஒன்று செய்யாதது வருத்தமளிக்கிறது என்றார்.
அதுவரை வாயையே திறக்காத மாமன் மச்சான்கள் அதாவது நடிகர்சங்க காவலர்கள் கோபத்துடன் குமுறி விட்டனர்.


சின்னப்பயல் விஷாலுக்கு என்ன தெரியும்.நடிகர் சங்கம் எவ்வளவு உழைக்கிறது [?]தெரியுமா?தவறாக கருத்து தெரிவித்த விஷால் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ஆனால் பல்வேறு நடிகர்கள் கூறியதால் விஷால் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும் ,விஷாலை அவ்வப்போது போட்டு தாக்கிக்கொண்டுதான் இருந்தனர்.

தன்னையே கமல் விடயத்திலும்,வரலட்சுமி விவகாரத்திலும் சரத் குமார் ,ராதாரவி குறி வைத்து தாக்குவதை கண்டு கோபம் கொண்ட விஷாலுக்கு பூச்சி முருகன்.குமரி முத்து வழக்கு விவகாரம் நடிகர் சங்கம் சத்தியம் சினிமா செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம்,நடிகர் சங்க கட்டிடம் இடிப்பு ஒரு பிடியாக கிடைத்துக்கொண்டது.

அதை தொட்ட விஷாலுக்கு நடிகர் சங்க ராதா ரவி .சரத்குமார்  செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்த முன்னணி ,இளம் நடிகர்கள் ஆதரவு ரகசியமாகவும்,பகிரங்கமாகவும் கிடைக்க அதன் விளைவுதான் தேர்தல் மோதல் வரை வந்து விட்டது.


பல ஆண்டுகளாக எதிர்க்க ஆள் இல்லாமலும்,எதிர்ப்புக்குரலை நசுக்கி விடுவதாலும் பல கோடிகளை சம்பாதித்த இருவராலும் நடிகர் சங்க பொறுப்பை.சுகத்தை விட முடியவில்லை.

பதவியில் இல்லாவிட்டால் தங்கள் முறைகேடுகள் அம்பலமாகி தங்களை அசிங்கப்படுத்தி விடும் என்ற பயம்தான்.

அதுதான் ராதாரவி,சரத்குமார் அணியினரை என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே அசிங்கமாக ,ஆத்திரமாக சாதி,மதம் எல்லாவற்றையும் இழுத்து பேசுகிறார்கள்.

இதில் தயாரிப்பாளர் தாணு உள்ளே நுழைந்து சமரசம் என்ற பெயரில் சரத்குமாருக்கு ஆதரவாக பேசினார்.அவர் தயாரிப்பாளர் சங்கத்திலேயே உண்டான எதிர்ப்பால் வாயை சூயிங்கம் போட்டு ஒட்டிக்கொண்டார்.

இப்போது ஒரே  குடும்பமாக இருக்க வேண்டிய  நடிகர் சங்கம் ஒரு குடும்பமாக ராதிகா,அவர் கணவர் சரத்குமார்,அண்ணன் ராதாரவி.தங்கை நிரோஷா,அவர் கணவராக வேலை பார்க்கும் ராம்கி[இருவருக்கும் முறைப்படி மணமாக வில்லை].சரத் குமாரின் மகள் வரலட்சுமி என்று மாறி போனதால் வந்த கோளாறுதான்.

இந்த கலகத்தில் வாகை சந்திரசேகர் ஒதுங்கிக்கொண்டார்.
தேர்தலில் விஷால் அணிக்குபின்னணி ஆதரவு கமல்ஹாசன்.

அதானால்தான் ராதா ரவியும்,சரத்குமாரும் கமல்ஹாசன் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.ஆனால் இவர்களை கமல் கண்டு கொள்ளவில்லை.
தனது நண்பர் நாசரை தலைவராக முன்மொழிந்து விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு மேலும் அவர்களின் மூலக்கடுப்பை அதிகப்படுத்தினார்.


விஷால் அணி வெற்றி பெறுவது சந்தேகம்தான்.
காரணம் .திரைப்பட நடிகர்கள் ஆதரவு 95% விஷாலுக்கு இருந்தாலும் அவர்கள் வாக்குகள் 900 பக்கம்தான்.மீதி 2000க்கும் அதிகம் நாடக நடிகர்கள்  வாக்குகள்.

அந்த பட்டியலில் உண்மையில் சில நாடக நடிகர்கள் இருந்தாலும் ராதாரவி  மகன்,வேலைக்காரர்கள் உடபட பலர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளராம்.

அதிமுக,சமக கட்சி உறுப்பினர்கள் நாடக நடிகர்கள் போர்வையில் இருக்கின்றனர்.அவர்கள் வாக்குகள் யாருக்கு போகும் என்பது இதை படிக்கும் நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.

திரை நடிகர்களில் 240 பேர்கள் சந்தா தரவில்லை என்று நீக்கப்பட்டுள்ளார்கள்.அதுவும் விஷால் அணியை ஆதரிக்கும் சச்சு,மன்சூர் அலிகான் போன்ற 40க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்களுக்கு வாக்குகள் இல்லை.இருப்பவர்களிலும் மோகன் போன்ற பலர் வாக்குகளை அவர்கள் வரும் முன்னரே போட்டு விட்டார்களாம்.

இப்போது சொல்லுங்கள் யாருக்கு வெற்றி.

சென்னையில் நடித்துக்கொண்டிருக்கும் மன்சூர் அலிகான்,சச்சு போன்றவர்கள் சந்தா கொடுக்க வில்லையாம்.ஆனால் தமிழகம் முழுக்க உள்ள நாடக நடிகர்கள் 2000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சந்தாவை சென்னையில் வந்து தவறாமல் செலுத்தியுள்ளார்களாம்.

ராதாரவி சொல்லுகிறார் கண்டிபாக நம்ப வேண்டும் .இல்லையென்றால் பச்சையாக திட்டுவார்.

ஆனாலும் உள்ளூர சரத்குமார் அணியினருக்கு உதறல்தான்.அதுதான் கமல்ஹாசன்,சிவகுமார் போன்ற பெரும் நடிகர்களை தாக்கிப்பேசவும் விஷால்,சங்கீதா போன்றவர்களை தாக்கும் அளவுக்கும்  கொண்டு போய்  விட்டுள்ளது.


இவர்கள் சண்டையில் தேர்தல் நடக்கையில் ஊடகங்கள் மற்றொரு தலைப்பை பிடித்து தொங்கிக்கொண்டு அதை ஊதி பெருசாக்கும் பணியில் முனைந்து விட்டன.

அது தென்னிந்திய நடிகர்க சங்கத்தை தமிழக நடிகர் சங்கமாக பெயர் மாற்றும் திருப்பணிதான்.
வழக்கமாக தேர்தல்களில் வாய்ஸ் கொடுக்கும் ரஜினிகாந்தை விஜயகுமார் மூலம் தூண்டி அவரும் நடிகர்கள் சங்கம்  வாஸ்து படிஇடிக்கப்பட்டாலும் நியுமராலஜி படி தமிழ் நாடு  நடிகர்கள் சங்கம் என்று  மாற்றினால் பாபா அருளால் நல்லதே நடக்கும் என்று வாய்ஸ் கொடுக்க வைத்தனர்.

அதை வருகிற போகிற வர்களிடம்  வாக்களிக்க காத்து நிற்பவர்களிடம் சுண்டல் விற்கும் நபர் வரை கருத்துகளை கேட்டு காலத்தை ஊட்டி விட்டனர்.
இந்த மோதலுக்கும்,தேர்தலுக்கும் காரணம் பெயர் மாற்றம்தானா என்று எண்ணும் அளவு கருத்து கந்தசாமிகள் வரவு ஊடகங்களில்.

எல்லாம் சரி.கலைவாணர்  போன்றோரால் ஆரம்பிக்கப்பட்ட தென்னிந்திய சங்கம் என்ற பெயரை மாற்ற இப்போது என்ன அவசியம் வந்தது.
இயக்குனர் சங்க ஆர்.கே.செல்வமணி இந்த பெயர் மாற்றத்தில் முன்னணியாக இருக்கிறார்.இயக்குனருக்கு நடிகர் சங்கம் பெயர் மாற்ற என்ன ஆர்வம்?

பெயர் மாற்ற காரணமாக மலையாள நடிகர்சங்கம்,ஆந்திர ,கன்னட சங்கங்களை எல்லாம் தூக்கி எடுத்துக் காட்டுகிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற சங்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தங்களுக்கு தனி சங்கம் வைக்கும் போது அவர்களுக்கான பெயர்களை சூட்டுவது வழமைதானே?தென்னிந்திய நடிகர் சங்கம் - ஆந்திரா,தென்னிந்திய நடிகர் சங்கம்-கேரளா என்றா வைப்பார்கள்.

அது போகட்டும்.
 திராவிடர் கழகத்தில் இருந்து திமுக,அதிமுக.மதிமுக,தேமுதிமுக என்று வரிசையாக பிரிந்து வந்ததால் திராவிடர் கழகம் பெயரை மாற்றிட முடியுமா?மாற்றால் தேவையா?மாற்றத்தால் அதனை தோற்று வித்தவர்களை அவமதிப்பதல்லவா?இப்போது மலையாள நடிகர்கள்,ஆந்திர நடிகர்கள் என்று அனைவரும் தனி சங்கம் கண்டு போன பின்னர் இப்போது தமிழ் நடிகர்கள் மட்டுமே மிஞ்சிருக்கையில் பெயர் மாற்றம் எதற்கு?

வேலையற்ற வீனர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே-இது தென்னிந்திய நடிகர் சங்கம் ஆரம்பித்தவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர்.படப்பாடல்களில் வரிகள்.
பெயர் மாற்றம் ஒன்றும் சாதித்து விடாது.தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தான் செயல்பட்டு சாதிக்க வேண்டும்.முறைகேடான தலைமையை மாற்றுங்கள் சங்கப்பெயரை அல்ல.
[10:10 AM, 10/20/2015] அருள் (பர்னஸ்): ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப்பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது." கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை." உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது. மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது. அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்ட். து என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள். கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது. பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது. ______________________________ நீதி ::-- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.
[11:08 AM, 10/20/2015] மதன் ( ஆ: ஆந்திராவிலுள்ள கோதாவரி மாவட்டத்தில் ஒரு கல்யாணத்தில் சுமார் 2500 பேருக்கு படைக்கப்பட்ட விருந்து. இலை ஒன்றுக்கு கிட்டத்தட்ட 75 வகை உணவுகள். அதில் இனிப்பு மட்டும் 12 விதங்களுக்கு மேல். கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு இலையில் பரிமாறிய உணவு வகைகள். இந்த இலை ஒருவர் சாப்பிட மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக