புதன், 23 மார்ச், 2016

[11:50 AM, 9/25/2015] +91 95516 56551: பங்கு நெருக்கடி                                                                                                                                                                       தென்னை மரத்தில் தேள் கொட்டி னால் பனை மரத்திற்கு நெறிகட்டுமா என்று கேட்பது போல் சீன பங்குச் சந்தை யில் உருவாகும் நெருக்கடி, இந்திய நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்குமா என்றுவிவரம் அறிந்தோர் கேட்கமாட்டார்கள்.
ஏன் எனில் இன்றைய உலக நாடு களின் பங்குச் சந்தைகள் உலக பணஅமைப்பால் இணைக்கப்பட்டு இருக் கிறது.

இந்த பண அமைப்பு இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் வெற்றி பெற்ற மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் தங்களது ஆதிக்கம் நீடிக்க உருவாக்கிய உலகம் தழுவிய அமைப்புக்களில் ஒன்று.

அன்று நாடுகளிடையே நிலவும் உறவில் பகைமையை நீக்கி வர்த்தக உறவால் நேசமயமாக்க உலக பண அமைப்பு அவசியம், அந்த அமைப்பு நாடுகளிடையே பாகுபாடு இல்லாமல் சம உரிமைகொண்டதாக இருக்க வேண்டும் என்று சோவியத் யூனியன் வலியுறுத்தியது.
ஆனால் ஒரு நாட்டின் மொத்த வருவாய் அடிப்படையில் வாக்குகளை கொண்ட அமைப்பாக ஆக்கி அமெரிக்க டாலரை பொது நாணயமாக்கி சோவியத் யூனியனை ஒதுக்கி பண அமைப்பையும் உலக வங்கியையும் அன்றைய வெற்றிபெற்ற ஏகாதிபத்திய வாதிகள் அமைத்துக் கொண்டனர்.
வளர்ச்சியுறாத நாடுகளை வேட்டை யாடலாம், சோவியத்தை முடக்கலாம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்றும் மகிழ்ந்தனர்.
1971க்குப் பிறகு அந்த அமைப்பை அந்நிய செலாவணியை வாங்கி விற்கிற சந்தையாக மாற்றினர். அதோடு அந்நிய செலவாணி சந்தையும் உலக நாடுகளின் பங்கு சந்தைகளும் காந்தத்தின் இரு துருவம் போல் பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டது,
இந்த அமைப்பு பின் நாளில் அவர்களுக்கே உலைவைக்கும் என்று ஏகாதிபத்திய வாதிகள் எதிர்பார்க்க வில்லை.

ஒரு கட்டத்தில் மேற்கத்திய முத லாளித்துவ நாடுகள் புகுத்திய தாராளமய அணுகு முறை பணக்கொழுப்பு உள்ள வர்களை பங்குகள், நிலம், தங்கம் சரக்கு வர்த்தக சீட்டு போன்ற சொத்துக்களின் விலைகளை செயற்கையாக ஏற்றி இறக்கி பணத்தை குவிக்க பங்குச் சந்தையிலும் அந்நிய செலாவணி சந்தையிலும் சூதாடும் சுதந்திரத்தை கொடுத்துவிட்டது,
அமெரிக்கா விற்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த சூதாட்டம் வள்ளு வர் குறிப்பிட்ட தூ ண்டிற்பொன் மீன்விழுங்கிய கதையாகிவிட்டது.
2008ல் முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்குமாஎன்ற கேள்வி எழுகிற அளவிற்கு இந்த சூதாட்டம் வெடித்து நெருக்கடியை அந்த நாடுகள் சந்தித்தன.
அது தந்த அதிர்ச்சி யிலிருந்து உலகில் பல நாடுகள் இன்றும் மீளவில்லை. அன்று 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருந்தது ஒரு டாலருக்கு 60 ரூபாய் என்று ரூபாயின் மதிப்பை ரிசர்வ்வங்கியால் குறைக்க நேர்ந்தது.
போர்ச்சுக் கல், ஸ்பெயின், கீரிஸ் போன்ற நாடுகள் கடன் சுமையை ஏற்க நிபந்தனைகளை விழுங்க நேர்ந்தது. அது இப்பொழுதும் தொடர்கதையாக இருப்பதை காண் கிறோம்.இந்த சூதாட்டம் நமக்கும் புதிதல்ல பல ஆண்டுகளுக்கு முன்னால் ஹர்சத் மேத்தா கேத்தன் பரேக் போன்ற பங்குச் சந்தை தரகர்களால் குறுக்கு வழியில் பணத்தை குவிக்க ஆசைப்பட்ட பலரைசூதாட வைத்து ஏமாற்றினர்.
கடன் கொடுத்த பொதுத் துறை வங்கிகளுக்கு பங்கு விலைகளின் தி டீர் சரிவால் நட்டம் ஏற்படுத்தியதை அறிவோம்.

2008 அதிர்ச்சிக்குப் பிறகே முதலாளித்துவ பொருளாதார தத்துவ முகாமிலேஜால்ரா சத்தம் குறைந்தது, முதலாளித் துவ முறையை கண்டித்த காரல் மார்க்சை விரோதியாக பார்க்காமல் அவரும் நம்மஆளுதான் என்று பார்க்கும் தாமஸ் பிக்கெட்டி போன்ற நிபுணர்கள் தோன்றிஉலக பண அமைப்பின் முதலாளித் துவ சுரண்டல் தன்மையை விமர்சிக்க தொடங்கினர்.
இன்று முதலாளித்துவ பொருளாதார தத்துவ முகாமிலே விரிசல் ஏற்பட்டு இன்றைய முதலாளித்துவ பண அமைப்பை பாதுகாக்கும் முகாமிற்கு எதிராக மாற்றங்கள் தேவை என்று சொல் லுகிற முகாம் மோதுவதை காணலாம், உலக வங்கி நிபுணர் நோபல் பரிசு பெற்ற ஜோசஃப் ஸ்டிக்கிளிட்ஸ் உலக வங்கியை கடுமையாக விமர்சிப்பதை அறிவோம்.அதோடு இன்னொன்றும் கண்ணில் படுகிறது.
 மார்க்சிய பொருளாதார நிபுணர்களும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் 2008க்கு பிறகு டாலர் ஆதிக்க உலக பண அமைப்பை மாற்றிட குரல் கொடுத்து வருகிறார்கள்.
அது மட்டுமல்ல எந்த நாட்டு நாணயமும் ஆதிக்கம் செலுத்தாத ஒரு அமைப்பை உருவாக்கிட குரல்கொடுக்கிறார்கள். பிரிக்ஸ் என்ற அமைப்பையும் துவங்கியுள்ளனர்.
இந்த பங்குச் சந்தைநெருக்கடியை பொருளாதார பலம் உள்ள நாடுகளில் சமாளிப்பது அவ்வளவு கடினமல்ல. சுய சார்பு இல்லாத அந்நிய மூலதனத்தை சார்ந்த தொழில் அமைப்பு உள்ள நாடுகள் கடன் வலையில் விழநேரிடுகிறது. இந்த பின்னணியோடு இப்பொழுது சீன வர்த்தக சூதாடிகளின் லீலைகளால் சீன பங்குச் சந்தை நெருக்கடியில் மாட்டிக்கொண்டதை பரிசீலிப்பது அவசியம். நெருக்கடியை சமாளிக்க சீனா தனது நாணயத்தின் மதிப்பை 2சதவீதம் குறைத்தது. உலக மயமும் கடன் சுமையும் இந்த குறைப்பு உலக பண அமைப்பு வழியாக இந்தியா உட்பட பல நாடுகளின் நாணயச் சந்தைகளில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
நமது தொழில் உற்பத்தி நூறு சத அந்நிய மூலதனத்தையும் அந்நிய செலா வணியையும் அதிகம் சார்ந்து இருக்கிறது. நமது ஏற்றுமதி வருமானம் கடந்த 50 ஆண்டுகளாக இறக்குமதியை விட குறைவாக இருந்து வருகிறது. 2015 ஜூலை நிலவரப்படி நமது ஏற்றுமதி குறைந்து அந்நியச் செலாவணி பற்றாக்குறை 10.8 பில்லியன் டாலரிலிருந்து 12.8 பில்லி யனாக உயர்ந்துவிட்டது.
 நிலக்கரி முதல் பெட்ரோலிய பொருட் கள் மற்றும் இரும்பு வரை இறக்குமதிசெய்யாமல் நமது தொழில் சக்கரம் சுழலாது என்ற நிலை உள்ளது.

அரசு இந்நிலையில் மோடி அரசும் நமது பெருமுதலாளிகளும்,நெருக்கடியில் மாட்டி இருக்கும் சீனாவை தாக்குகின்றனர்.
சீனா நாணயத்தின் மதிப்பைகுறைத்து கரன்சி யுத்தத்தை துவக்கி வைப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். சீனா ஆதிக்க நோக்குடன் செயல்படுவதாக அமெரிக்க பத்திரிகைகளும் தாக்கு கின்றன.
கடன் சுமை இல்லாமல் பிரிக்ஸ் அமைப்புமூலம் சமாளிக்க வாய்ப்பு இருந்தும் அதை நாடாமல், அதற்கு வேட்டு வைக்கிற வேலையில் இந்திய அரசு இறங்கியுள்ளது.
மோடியின் சாணக் கியத்தால் ஒரு வேளை ஐ.எம்.எஃப் சிபாரிசில் இறக்குமதிக்கு தேவையான கடன் கிடைக்கலாம்.
சுயசார்பை பலப்படுத்தாமல் ஏற்படுகிற வளர்ச்சி மக்களுக்கு உதவாது அது தூண்டில்பொன் மீனை விழுங்கியதற்கு ஒப்பாகும்.
நன்றி:வே,மீனாட்சி சுந்தரம்.
[11:55 AM, 9/25/2015] +91 95516 56551: சுண்டைக்காய் கால் பணம்.சுமை கூலி முக்காப் பணம்.
மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 20 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.ஓராண்டில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சென்ற வகையில் அதிகபட்சமாக ரூ.8.91 கோடியும், ஜெர்மனி, பிஜி, சீன நாடுகளுக்கு அவர் சென்ற வகையில் செலவு முறையே ரூ.2.92 கோடி, ரூ.2.59 கோடி, ரூ.2.34 கோடி ஆகும்.

பூடானுக்கு சென்ற போதுதான் மிக குறைந்த அளவில் ரூ.41.33 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில், பிரதமர் மோடி ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.5.60 கோடியாகும். அவருடன் சென்றவர்களின் கார் பயணத்துக்கு ரூ.2.40 கோடி வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது.
நியூ யார்க்கில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த நியூயார்க் பேலஸ் ஓட்டல் வாடகை ரூ.9.16 லட்சம். பிரதமரின் ஓட்டல் அறை வாடகை ரூ.11.51 லட்சம்.
அங்கு பாதுகாப்பு படையினருக்கான கார் வாடகையாக ரூ.39 லட்சமும், தூர்தர்ஷன் குழுவினர் பிரதமரின் சுற்றுப்பயணம் குறித்து செய்தி சேகரிக்க ரூ.3 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.1.06 கோடி, வாகனங்களுக்கான வாடகை ரூ.60.88 லட்சம், விமான செலவு ரூ.5.90 லட்சம், அதிகாரிகளுக்கான தின பயண செலவு ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
இதேபோல், வங்காளசேத்துக்கான பயண செலவு ரூ.1.35 கோடி.
அதில் ஓட்டலில் தங்கியதற்கான வாடகை ரூ.19.35 லட்சம்.
மொழி பெயர்ப்பாளர்களுக்கான செலவு ரூ.28.55 லட்சம், பிரதமரின் இன்டர்நெட் செலவு ரூ.13.83 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இக்கணக்கு ஜூன் 30,2015 வரைக்குமானது மட்டும்.அதன் பின் சில நாடுகள் மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார்..முதலீடுகள் குவிவதாக சொல்லுகிறார்.இதுவரை இந்தியாவில் குவிந்த அந்நிய முதலீடு எவ்வாளவு கோடி.?
[12:04 PM, 9/25/2015] +91 95516 56551: 100 கோடி ரூபாயில்                                                                                                                               உலகத் திருடர்கள் மாநாடு?                                                                                                                                         காலம் மாறிப்போச்சிங்க, அந்தக் காலத்தில் எல்லாம் திருடர்களை திருடர்கள் என்றுதான் சொல்வார்கள். இப்ப பாருங்க அவர்களை முதலீட்டாளர்கள் என்று சொல்கின்றார்கள்.
போதாத குறைக்குத் திருடர்களை வான்ட்டடாக வரவழைத்தது மட்டும் இல்லாமல் எங்க வீட்டில் திருடிக்கோ, எங்க வீட்டில் திருடிக்கோ என்று காலில் விழுந்து கெஞ்சுகின்றார்கள். இப்படிப்பட்ட மானங்கெட்ட அரசியல்வாதிகளை நீங்கள் எங்கேயாவது பார்த்திருக்கின்றீர்களா?
பார்க்க வேண்டும் என்றால் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் போய் பார்க்கலாம்.

 உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015 என்ற ஒரு சோக நாடகம் அ.தி.மு.க கும்பலால் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது. அம்மா என்று கூழைக்கும்பிடு போடும் பேர்வழிகளால் அன்போடு அழைக்கப்படும் செல்வி ஜெ.ஜெயலலிதா தன்னுடைய கடைசி காலத்தில் அதாவது ஆட்சியின் கடைசி காலத்தில் இப்படி ஒரு நாடகத்தை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நாடகத்தை நடத்துவதற்காக மக்கள் வரிப்பணம் 100 கோடி ரூபாய் அள்ளி இறைக்கப்பட்டுள்ளது.
 வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தத் திருடர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் சொகுசாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்படியே ஓசியிலேயே சென்னை நகரை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மக்களின் வரிப்பணத்தை இப்படி கண்ட கண்ட நாய்களுக்குச் செலவழிக்கலாமா என்று ஆட்சியில் இருக்கும் உள்நாட்டுத் திருடர்களுக்கும் தெரியவில்லை, மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் தங்கிக்கொண்டு ஓசியில் நக்கி நக்கி தின்கலாமா என்று அந்த வெளிநாட்டுத் திருடர்களுக்கும் தெரியவில்லை.
 இந்த மாநாட்டுக்காக சென்னை முழுக்க வைக்கப்பட்ட கட்அவுட்டர்களில் ஜெயலலிதாவின் சிரித்த உருவமே பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டுக்குள் யார் புதிதாக வந்தாலும் அவர்களுக்குப் பூச்சாண்டி காட்டாமல் விடமாட்டோம் என்று அ.தி.மு.க வின் கூழைக்கும்பிடு அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றார்கள்.
 முதலீட்டாளர்களின் சொர்க்கம் என்று வேறு பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து இருக்கின்றார்கள்.
இலவசமாக மின்சாரம், தண்ணீர், சாலைவசதி, வரிச்சலுகைகள் என்று அனைத்தையும் கொடுத்து, போதாத குறைக்கு மலிவான கூலிக்குத் தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் கொடுத்தால் அது உண்மையிலேயே முதலீட்டாளர்களுக்குச் சொர்க்கம் தானே!.
நோக்கியா கம்பெனியாலும், பாக்ஸ்கான் கம்பெனியாலும் நடுத்தெருவுக்குத் துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் போய் கேட்டால் சொல்வார்கள் முதலீட்டாளர்களின் சொர்க்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் நரகத்தின் வேதனையை.
 இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழ்நாட்டுக்கு ஏறக்குறைய 1.5 லட்சம் கோடிகளுக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று சொல்கின்றார்கள்.
இது அப்பட்டமான பொய்யாகும். ஜெயலலிதா அரசு பதவியேற்ற பின்பு தமிழ்நாட்டுக்கு இந்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த மொத்த முதலீடு என்பதே வெறும் 31,706 கோடி ரூபாய் மட்டுமே. இதை நாம் சொல்லவில்லை. 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது.

”கடந்த நான்கு ஆண்டுகளில் 31,706 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு மேற்கொண்டுள்ளது” என்று சட்ட சபையில் ஒத்துக்கொண்டு இருக்கின்றார். நிலைமை இப்படி இருக்கும் போது இன்னும் ஆறுமாதமே இருக்கப்போகும் அ.தி.மு.க அரசை நம்பி எந்த இளிச்சவாயன்கள் 1.5 லட்சம் கோடிகளை கொட்டப் போகின்றார்கள்?
 ஓசியிலேயே விமானப்பயணம், ஒசியிலேயே சொகுசாக தங்குமிடம், ஒசியிலேயே நாக்குக்கு ருசியாக விதவிதமான சாப்பாடுகள், ஒசியிலேயே ஊர்சுற்றி பார்ப்பதற்கு ஏற்பாடு, இது எல்லாம் கொடுப்பதாலேயே அவர்கள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு இங்கு வந்திருக்கின்றார்கள். ஏற்கெனவே 4 லட்சம் கோடிகள் கடனில் ஓடிக்கொண்டிருக்கும் தமிழக திவால் அரசு இந்த மாநாட்டில் இன்னும் நூறுகோடி ரூபாய் சேர்த்துக் கடனாளி ஆகப்போகின்றது. பின்பு இந்தக் கடனையும் சேர்த்துக் கட்டுவதற்குத் தமிழ்நாட்டுக் குடிமகன்களுக்கு இன்னும் அதிகமாக டார்கெட் வைக்கப் போகின்றார்கள்.
 நமக்கு என்ன சந்தேகம் என்றால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்கின்றார்கள். பிறகு அங்கு வங்கிகளுக்கு என்ன வேலை என்பதுதான். 25 பொதுத்துறை மற்று தனியார் வங்கிகள் அரங்கங்களை அமைத்திருப்பதாக சொல்கின்றார்கள்.
இவர்களுக்கு அங்கு என்ன வேலை என்று விசாரித்தால் பெரு, சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன்கள் வழங்குவதற்கு வந்திருக்கின்றார்களாம். வங்கிகள் கடன்கொடுத்தால் பின் வருபவர்கள் என்ன கொண்டுவருவார்கள் என்று தெரியவில்லை.
 ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகள் வாராக்கடன்களால் நஷ்டத்தில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இப்போது தன்பங்கிற்கு ஜெயலலிதாவும் அதை திவாலாக்கப் பார்க்கின்றார். ஜெயலலிதாவுக்குப் பொதுத்துறையைச் சார்ந்த நிறுவனங்களை திவாலாக்குவதென்றால் அப்படி ஒரு சந்தோசம்.
ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார வாரியம் 1.6 லட்சம் கோடி கடனும், தமிழ்நாடு போக்குவரத்துகழகம் 2084 கோடி கடனும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டுமாம்.

உலக முதலீட்டாளர்களிடம் காரியம் சாதிக்க குத்தாட்ட பெண்கள்?
அரசே இப்படி பெண்களைக்காட்டி காரியம் சாதிக்க
முனைவதற்கு என்ன பெயர்?
இப்போது அ.தி.மு.க திருடர்களின் பார்வை நேராக வங்கிக்கே திரும்பி இருக்கின்றது. மாநாட்டிற்கு வருபவர்களிடம் “கையெழுத்த மட்டும் போடுங்க சார் மத்ததை எல்லாம் எங்க அம்மா பார்த்துக்குவாங்க” என்று சொல்லி ஒரு தீட்டு தீட்டப் போகின்றார்கள்.
ஏற்கெவே ஜெயலலிதா மோடியின் நண்பர் என்பதால் 1.5 இலட்சம் கோடி என்ன 30 லட்சம் கோடிகள் முதலீடு வந்துள்ளதாகக் கூட நம்மை நம்பவைக்க முயற்சி செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
 ஆட்சி செய்த இந்த நான்கரையாண்டுகளில் ஒரு ஆணியைக் கூட புடுங்காத அ.தி.மு.க அரசு இப்போது மொத்தமாக புடுங்கப் போகின்றோம் என்று சொல்லி அனைவரையும் ஏமாற்றப் பார்க்கின்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆண்கள் குடிநோயாளிகளாக மாறிவிட்டார்கள். இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அப்போதும் மனசு அடங்காமால் இன்னும் ஏதாவது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாவும் அவரது அடிமைகளும் இரவும் பகலுமாக யோசித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
சரியாக பேரம் படிந்தால் இரவோடு இரவாக தமிழ்நாட்டையே விற்றுவிட்டு ஓடிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்!
இருந்த நோக்கியா,பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களை தக்க வைக்க முடியாத இந்த அரசு புதிதாக நிறுவனங்களை கொண்டு வருமா?பார்க்கலாம்.
                                                                                                                                                                                                     -செ.கார்கி
[12:47 PM, 9/25/2015] +91 95516 56551: இந்திய வளர்ச்சிக்கு உதவுகிறதா அந்நிய முதலீடுகள்?                                                                                          அந்நிய முதலீடு பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது
எங்கு நோக்கினும் வளர்ச்சி முழக்கங்கள். அந்நிய முதலீடு… அந்நிய முதலீடு… எனும் கோஷங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் உண்மையிலேயே உதவி செய்கின்றனவா?
கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் துறையின் நிகர மூலதன உருவாக்கத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்களிப்பு வெறும் 10% அளவில்தான் இருக்கின்றன என்பதை இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கிற தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
நிகர மூலதன உருவாக்கத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களே பெரும் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்தே வெளியேறிவிடக்கூடிய நிலைமை உருவாகும் என்ற எச்சரிக்கை உணர்வு அரசுக்கு இருப்பதாகவே தெரியவில்லை.
லாபம்தான் குறிக்கோள்!
எந்தவொரு முதலீடும் லாபத்தை முன்னிட்டே.
அதுவும் அந்நிய முதலீடு என்னும்போது சந்தேகத்துக்குச் சிறிதும் இடமின்றி அது மிகைலாபம் குவிக்கும் திட்டமே. அதிலும் அந்நிய நேரடி முதலீடு என்பது இட்ட முதலீட்டைத் திரும்பப் பெறுவதில் நீண்ட கால நடைமுறைக் கொள் கையை அடிப்படையாகக்கொண்டது.
அதனால், முதலீடு செய்யும் நாடுகள் முதலீடு செய்வதிலுள்ள நடைமுறை களை எளிமைப்படுத்துவதில் தொடங்கி, தொழில் சச்சரவு களுக்கு மாற்றுத் தீர்வழிகளை உருவாக்குவதுவரை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமது முதலீட்டின் உறுதியான பாதுகாப்புக்கு முயற்சிகளை மேற்கொள் கின்றன. முதலீடு செய்யப்படும் நாடுகளும் அதை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக் கல்ல.
ஆனால், தமது பொருளாதாரம் மிக நூதனமான முறையில் சுரண்டப்படுகிறது என்பதை அறிந்ததைப் போலவே இந்திய அரசு காட்டிக்கொள்வதில்லை. மாறாக, முதலீட்டின் அளவு அதிகரிப்பதைத் தமது சாதனையாக முன்னிறுத்துகிறது.
1990-களுக்குப் பிறகு, அந்நிய முதலீட்டுக்கு இசைவாக இந்தியாவில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
1999-ல் கம்பெனிகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, கம்பெனிகளுக்கு இடையேயான கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தொழில் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர் தமது உள்ளூர் கூட்டாளிகளின் துணைகொண்டு கம்பெனி நடவடிக்கைகளில் வெட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் - சட்ட விரோதம்!
இருவேறு நிறுவனங்களுக்கு இடையே எழும் வழக்குத் தகராறுகள் நீதிமன்றத்துக்குச் சென்று கால தாமதத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்திட, இசைவுத் தீர்ப்பாயம் மற்றும் சமரச முறைகளை மாற்றீடாக அரசே பரிந்துரைக்கிறது. இவற்றோடு தொழிலாளர்களிடம் இருந்த ஒரே ஆயுதமான வேலைநிறுத்தம் செய்யும் உரிமை யும் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைமுறை யிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குப் பொருந்தாது. ஆனாலும் கூட, இவை எல்லாம் போதாது, இன்னும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று தாராளமயத்தை ஆதரிக்கும் சர்வதேசப் பொருளாதாரப் பத்திரிகைகள் ஆலோசனைகளை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கின்றன.
அண்டை நாடான சீனா, உலகளவிலான அந்நிய நேரடி முதலீட்டில் 10%-ஐப் பெற்றிருந்தாலும், இந்தியா அளவுக்குப் படுமோசமான சமரசங்களைச் செய்துகொள்ள வில்லை.
அந்நாட்டின் வலுவான உட்கட்டமைப்பு வசதிகள், சந்தைப் பரவலாக்கம், எளிதில் கிடைக்கும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் காரணமாக ஈர்க்கப்பட்டே வெளிநாடுகள் சீனாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட மற்ற எல்லா நாடுகளிலும் ஏறக்குறைய ஒரே நிலைதான். மிகக்குறைவான ஊதியத்தில் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்வதன் மூலம் முதலீட்டு நிறுவனங்கள் தமது உற்பத்திச் செலவைப் பெருமளவு குறைத்துவிடுகின்றன.
அதைப்போலவே அந்நிய முதலீடு செய்யப்படும் நாடுகளில் மட்டுமின்றி, அந்நாட்டோடு ஏற்றுமதி இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளையும் சேர்த்து, தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விநியோகிப்பதற்கான விரிந்து பரந்த சந்தைப் பரப்பையும் எளிதாகச் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு உற்பத்தி, விநியோகம் என்று இரண்டு நிலைகளிலும் கிடைக்கிற லாபம் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

மீள்வது சுலபமல்ல
அந்நிய நேரடி முதலீட்டை ஏற்றுக்கொண்டுள்ள நாடுகள் தமது முதலீட்டாளர்களின் சந்தைப் பரப்பைக் கவனத்தில் கொள்ள நேரும்போது, தாம் வணிக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள நாடுகளுடனான அயலுறவுக் கொள்கையிலும் தன்னிச்சையாக முடிவெடுத்து விட முடியாது. அவசியமற்ற அரசியல் அழுத்தமொன்றை ஒரு நாடு வலிந்து ஏற்றுக்கொண்ட பின்னால், அதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடுவதில்லை.
பன்னாட்டு வணிகப் போட்டியைச் சமாளிக்க இயலாத நிலையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் வளரும், வேலைவாய்ப்புகள் பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதுதான் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவான ஒரே வாதம்.
ஆனால், உள்நாட்டிலேயே முதலீட்டைத் திரட்டுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதித்து, இருக்கிற வாய்ப்புகளை இழந்துவிட்டதோடு, அதை அந்நியர்களுக்கு அளித்துவிட்டது இந்திய அரசு.
வங்கித் துறையில் 74% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டாகிவிட்டது.
காப்பீட்டுத் துறையிலோ 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் அந்நிய முதலீட்டாளர்களின் சந்தைப் பரப்பு விரிவடைந்துகொண்டே இருக்கிறது.
அவர்களது உற்பத்திப் பொருட்களின் விற்பனை அளவும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இருந்தாலும், எவ்விதமான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

100% முதலீடு வெற்றியா?
உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம்.
இரும்பு மற்றும் எஃகு உருக்காலைகள் உள்ளிட்ட ஆதாரத் தொழில் துறைதான் உற்பத்தித் துறை இயங்குவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதிகளவு முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிற இந்தத் துறைதான் அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் தேவையான இயந்திரங்களையும் கருவிகளையும் தயாரிக்கிறது.
இந்த ஆதாரத் தொழில்துறையின் தேவை என்பதும்கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் ஒரு முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது. இத்துறையில் 1985-யே 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுவிட்டது.
 ஆனாலும் 2000 தொடங்கி 2012 வரையிலான 12 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் இத்துறையில் செய்யப்பட்ட முதலீடு வெறும் 4% மட்டுமே.
அந்நிய நேரடி முதலீட்டால் தொழில்நுட்பப் பரிமாற் றங்கள் நடக்கும், அதன் காரணமாக உள்நாட்டுத் தொழில் துறையின் தொழில்திறன் மேம்படும் என்றும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பன்னாட்டு உடன்படிக்கை களை அடிப்படையாகக்கொண்டு இயற்றப்பட்டுள்ள அறிவு சார் சொத்துரிமைச் சட்டங்களின்படி, காப்புரிமைச் சட்டங்கள் வணிகத்தில் ஏகபோக உரிமையைத் தக்கவைத்துக் கொள்ளவே உதவும்.
புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழில் நுட்பங்கள் யாவும் இனி அதன் கண்டுபிடிப்பாளருக்கே முழுவுரிமை கொண்டதாக இருக்கும். அத்தொழில் நுட்பத்தைப் பிறிதொருவர் பயன்படுத்த வேண்டுமெனின் அதற்கான காப்புரிமைத் தொகையை அளித்தாக வேண்டும். அதாவது, உற்பத்திப் பொருட்களை விநியோகிப்பது போலவே தொழில்நுட்பமும் அதற்கான விலையைப் பெற்றுக்கொண்ட பிறகே பரிமாற்றம் செய்யப்படும்.
அதுவும் ஒரு வணிகமே.
இன்றைக்கு ஏதாவது ஒரு வழியில், எப்படியாவது அந்நிய முதலீட்டைக் கவர்வது ஒன்றே மத்திய - மாநில அரசுகளின் முக்கியமான பணியாக இருக்கிறது. அந்நிய முதலீடு என்கிற நாற்றினை எங்கிருந்தோ கொண்டுவந்து இங்கே ஊன்றி, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, அறுவடையும் முடித்துப் பலனை எங்கோ கொண்டுபோவதில் வயல்காரனுக்கு என்னதான் பயன்?
இவனுக்கு குத்தகையும் இல்லை, கூலியும் நிரந்தரமில்லை!

- செல்வ புவியரசன்,
[1:04 PM, 9/25/2015] +91 95516 56551: இந்திய, அந்நிய மூலதனம் வரு வது மிக முக்கிய தேவையாகும். இதில் யாருக்கும் இரண்டாவது கருத்துஇருக்க முடியாது.
ஆனால், மூலதனவருகையால் நாம் பெறும் நன்மை மூலதன வருகைக்காக நாம் கொடுக்கும் விலையை விட அதிகமா என்கிற கேள்வியோடு பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

உதாரணமாக, ‘நோக்கியா’ தமிழகத்திற்கு வந்தது மிகப்பெரும் வரம் போல சித்தரிக்கப்பட்டது.
அதுவும் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். விவசாயிகளிடம் ஒரு ஏக்கர் நிலத்தை8 லட்ச ரூபாய்க்கு வாங்கி அதை செம்மைப்படுத்தி 4.5 லட்சம் ரூபாய்க்கு 210 ஏக்கர் நோக்கியாவுக்கு கொடுக்கப்பட்டது. முத்திரைத்தாள் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப் பட்டது.
5 ஆண்டுகளுக்கு அவர்கள் எந்த வரியும் கட்டத் தேவையில்லை.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு வரிகளில்50 சதவிகிதம் கட்டினால் போதும்.
மேலும் அந்த நிறுவனம் விற்கும் செல்போன்களுக்கு செலுத்தும் மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசாங்கமே திருப்பிக் கொடுத்துவிடும்.
அதில் மட்டும் ஒரு நிபந்தனை அந்தத் தொகை நோக்கியா நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்யும்தொகையை மிஞ்சக்கூடாது என்பதுதான்.
அப்படி கொடுத்த தொகை 856 கோடி ரூபாய்.
இதோடு தமிழகம் முழுவதும் கடுமையான மின்பற்றாக் குறையால்பாதிக்கப்பட்டிருந்தபோது மூன்று நிமிடத் திற்கு மேல் நோக்கியாவிற்கு மின்தடை இருக்காது என்றும் அதற்கு மேல் மின்சாரம் தடைப்பட்டால் அதனால் ஏற்படும் உற்பத்தி இழப்பை தமிழக அரசாங்கம் ஈடுகட்டும் என்றும் சலுகை மழையால் நனைய வைத்தது.
ஆனாலும், பத் தாண்­­டுகள் முடிவதற்கு முன்பாகவே அந்த நிறுவனம் காலி செய்து விட்டுச் சென்று விட்டது.
அதைத் தடுக்க திராணியற்று மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தன. அவர்கள் நிறுவனத்தை காலி செய்தபோது மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய 2430 கோடி ரூபாய் வரியையும், மத்திய அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 21000 கோடி ரூபாய் வரியையும் ஏய்த்து விட்டதாக முறையே உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
அதில் பணியாற்றிய 6,000 பெண்கள் உட்பட 8,000 பேர் 30 வயதுக்குள் வேலை இழந்தவர்களாக வெளியே வந்து விட்டார்கள்.
அந்த நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்கள் கொடுத்துக் கொண்டிருந்த பாக்ஸ்கான் நிறுவனமும் மூடப்பட்டு அதில் இருந்த 22,000 பேருக்கும் வேலை பறிபோனது.
நோக்கியாவுடன் போட்ட ஒப்பந்தத்தால் தமிழக அரசுக்கு, இந்திய அரசுக்கு தமிழக மக்களுக்கு ஏதாவது லாபம் உண்டா?
சிறு, குறு தொழில்கள் செழிக்குமா?
இத்தகைய தொழில்கள் வந்தால் சிறு,குறு தொழில்கள் செழிக்கும் என்றும், அதன் மூலம்பல பேருக்கு வேலை கிடைக்கும் என்றும்சொல்லப்படுகிறது
. இதுவும் கூட உண்மை யில்லை.

உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்வ தற்கு ஒவ்வொரு நிறுவனமும் அவரவர் நாட்டிலிருந்து ஒப்பந்தக்காரர்களை கூட்டி வந்து நடத்துகிறார்கள். உதாரணமாக, சென்னையைச்சுற்றி உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மறைமலைநகர் பகுதியிலுள்ள ஹூண்டாய், ரெனால்ட் நிசான், போர்டு ஆகிய நிறுவனங் களுக்கு உதிரிப்பாகங்களும், சிறு சிறு பணிகளும் செய்யும் ஒப்பந்தங்கள் சில கம்பெனி களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
 இவை அனைத்தும் அந்நியக் கம்பெனிகள். டேவூ ஆட்டோமேட்டிவ் சீட்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட், கேபிஐ, ஊசூ ஆட்டோமேட்டிவ் இந்தியா லிமிடெட், அசாகி இந்தியா சேப்டி கிளாஸ் பிரைவேட் லிமிடெட், பிரைட் ஆட்டோ பிளாஸ்ட், ஜேகேஎம் டைனமிக் டெக்னாலஜி லிமிடெட், யசாகி, யுக்கால் ஃபியுயல் எனவே, சிறு,குறு தொழில்கள் செழிக்கும் என்பதும் உண்மையல்ல.எப்படியானாலும் அதில் வேலை செய்கிறவர்கள் இந்தியர்களாகத்தானே இருப்பார்கள் என்று எண்ணக்கூடும்.
இங்கு வேலை செய்பவர்கள் இந்தியர்களே. ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் அத்தக்கூலிகள். கேபிஐ, ஊசூ ஆட்டோமேட்டிக் இந்தியா ஆகிய 2 கம்பெனிகளிலும் ஒருவர் கூட நிரந்தரத் தொழிலாளிகள் இல்லை. (பட்டியல் 2)
கை நிறையச் சம்பளம்?
அந்நிய நிறுவனங்களில் சம்பளம் கொட்டிக் கொடுப்பதைப் போன்ற ஒரு கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில், இந்த நிறுவனங்கள் எல்லாவித மான சலுகைகளையும் பெற்றுக் கொண்ட பிறகு குறைந்தபட்ச கூலிச்சட்டம் உட்பட, இந்தியாவின் எந்தச் சட்டத்தையும் அமல்படுத்துவது இல்லை. சம்பளமும் மிகக் குறைவே. இந்தக் கம்பெனிகளில் பணிபுரிபவர்களில் 55 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளி, தினக்கூலித் தொழிலாளி, வேலை பழகுநர், பயிற்சியாளர், தகுதிகாண் பருவத்தினர் என்று பல்வேறு பெயர்களில் அத்துக்கூலிகளாக வைக்கப்பட் டுள்ளனர். (பட்டியல் 1).
இவர்களின் மாதச் சம்பளம் 10,000 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது. கட்டுமானப் பணியில் ஈடுபடும் கொத்தனார்கள் பலருக்கும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் என்பதோடு ஒப்பிட் டால் எத்தகைய சுரண்டலுக்கு இவர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது விளங்கும். இது தவிர, வேலைத்தளத்தில் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட பணிகளில் எந்திர மனிதனை பயன்படுத்துவதன் மூலம் மனிதர்களை எந்திரம் போல் வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றன.
சம்பளமும் அதிகமில்லை, வேலையும் நிரந்தர மில்லை.
கடுமையான ஒடுக்குமுறைகள், இதுதான் இந்தியாவிற்கு வந்துள்ள பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய தொழிலாளர்களின் நிலை.
அம்மான்னா சும்மாவா?
அம்மா ஜெயலலிதா ஒரு லட்சம் கோடிரூபாய் மூலதனம் வரும் என்றுதான் எதிர்பார்த்தாராம். ஆனால், 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் வந்து விட்ட தாக அம்மாவும், அவரது புகழ் பாடும் பத்திரிகைகளும் பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளுகிறார்கள்.
 ஆனால், கடந்த காலத் தோடு ஒப்பிட்டால், அம்மாவானலும், ஆண்டவனே ஆனாலும் அந்நிய நேரடி மூல தனம் சொன்னபடி வந்துவிடுவதில்லை. உதாரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு அரசாங்கம் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 31 ஆயிரத்து 706 கோடி ரூபாய் என்று தொழில் துறை அமைச்சர் தங்கமணி தொழில்துறை மானியக் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒவ்வொரு வருடமும் அவர்கள் சொன்னதை எல்லாம் கூட்டினால் அந்தத் தொகை இதைப்போல பல மடங்கு. (பட்டியல் 3).
இந்தப்பணத்தில் எவ்வளவு வந்தது என்பதை கேர் ரேட்டிங் என்கிற நிறுவனம் கணக்கிட்டுள்ளபடி கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்த மொத்த மூலதனம் வெறும் 5,592 கோடி ரூபாய் மட்டும்தான். எனவே, கடந்த காலத்தில் நடந்தவைகளை எல்லாம்கவனத்தில் கொண்டு பார்த்தால் போடப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 10 சதவிகிதம் வந்தாலே பெரிய விஷயம். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, எல்லா இடத்திற்கும் பொருந்தும்.

இதை விட பெரும் வாய்ப்புகளை அளந்த குஜராத்திற்கு அவர்கள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகத்தை விட குறைந்த அளவே வந்தது.
இந்த ஆண்டு ஜனவரி குஜராத் அரசாங்கம் நடத்திய இதேபோன்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 21,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டதாக அந்த அரசாங்கம் ஜம்பம் அடித்துக் கொண்டது.
அதற்கு முன்னர் 2013ம் ஆண்டில் 15 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகச் சொன்னார்கள்.
ஆனால் வந்த மூலதனம் அதில் 5 சதவிகிதத்திற்கும் குறைவே.
 ஆனாலும், அம்மா அலட்டிக் கொள்ளாமல் வாயளக்கிறார்.
அவரது துதிபாடிகள் அம்மான்னா சும்மாவா என்று புளகாங்கிதத்தோடு பேசுகிறார்கள்.
சொன்னது நீ தானா?
அம்மா சொன்னால் அடையாமல் விடமாட்டார் என்பது அவர் கட்சிக் காரர்களும், அவரை ஆதரிக்கும் பத்திரிகை யாளர்களும் சொல்லும் கருத்து.
 ஆனால் அம்மாவின் கடந்த காலச் செயல்பாடு அதற்கு நேர் எதிராக இருக்கிறது.
2012-ம் ஆண்டு தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ வெளியிட்டு தமிழகத்தை கனவில் மிதக்க விட்டார். 2023-ல் ஆசியாவிலேயே மூலதனம் அதிகமாக வரும் இடமாக சென்னை இருக்குமென்றும், அதற்குள் 15 லட்சம் கோடி ரூபாய் அந்நிய மூலதனம் இந்தியாவில் வந்து குவிந்து விடுமென்றும், வேலை வாய்ப்புகள் வந்து வரிசையில் நிற்குமென்றும் பீற்றித் திரிந்தார்கள்.
ஒவ்வொன்றிலும் என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்பதற்குப் பதிலாக ஒரே ஒரு துறையில் குறிப்பாக, எந்தத் தொழில் வந்தாலும் அதற்குத் தேவையான மின்சாரத்துறையில் அவர் சொன்னது என்ன? நடந்திருப்பது என்ன என்பதைப் பார்த்தால் சொன்னது நீதானா என்று கேட்கத் தோன்றும். தொலைநோக்குத் திட்டம் 2023-ல் மொத்த முதலீடு 15 லட்சம் கோடி என்றால் அது ஏறத்தாழ மூன்றில் ஒருபங்கு, 4.5 லட்சம் கோடி ரூபாய் மின்துறையில் முதலீடு செய்யப்படுமென்றும் அதன் மூலம் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமென்றும், அதில் 2017 இறுதிக்குள் 5,000 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுமென்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த மூன்று வருட காலத்தில் உருப்படியாக ஒரு திட்டம் கூட துவங்கவில்லை என்பது மட்டுமல்ல, 2017 வருகிற போது 500 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்பட்டிருக்காது என்பதுதான் உண்மை.இதேபோன்று மதுரை, தூத்துக்குடி தொழில் வளாகம் பணிகள் பற்றி கடந்த 4 பட்ஜெட்டிலும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

-சு.கனகராஜ்,
 இன்னும் அது தவழவே இல்லை.குப்புறத்தான் கிடக் கிறது.
இதேபோன்று தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏதுமில்லை. எனவே, அம்மா அவ்வப்போது ஊதிப் பெரிதாக்குவார், ஆனால் காற்று போகும்போது இன்னொன்றை எடுத்து ஊதிப் பெருக்கி அதை மறக்கச் செய்வார்.
இதுதான் ஜெயலலிதா அவர்களின் கடந்த காலச் செயல்பாடாக இருந்து வந்திருக்கிறது. எனவே, அந்நிய மூலதனம் வரட்டும். அதற்காக அது கொள்ளையடித்துக் கொண்டு போகவோ, இந்தியச் சட்டங்களை உடைக்கவோ அனுமதிக்கக்கூடாது.
தமிழக அரசு ஆட்டோமொபைல் தொழிற் கொள்கையில் அத்தொழிலை பொதுப் பயன்பாட்டுச் சேவை என்று சொல்லி வேலை நிறுத்தத்தை தடை செய்திருக்கிறது. விநாசகாலே விபரீத புத்தி என்பார்கள். விபரீத புத்தி விநாச காலத்திற்கு பட்டுக்கம்பளம் விரிக்கும்.
மூலதனம் வரட்டும்.
இந்தியச் சட்டங் களுக்குட்பட்டு இயங்கட்டும்.
தரமான, சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பை உருவாக்கட்டும்.
 வரிகளை ஒழுங்காக கட்டட்டும்.
லாபமும் சம்பாதிக்கட்டும். இப்படி இருந்தால்தான் அது தொழிற்கொள்கை.
இல்லையேல் அது கொள்ளைத்தொழில்.
தமிழக அரசு தொழிலை அனுமதிக்கட்டும்.கொள்ளையை அல்ல!

                                                                                                                            -சு.கனகராஜ்,
[4:54 AM, 9/26/2015] செந்தாமர: ♠♠♠♠♠♠♠♠♠♠
♠♠இது ஒரு மன வேதனை அதிர்ச்சி பகிர்வு...கவனம். ♠♠
♠♠கலப்படம்...தலை முடி அவுட்... ♠♠
♠♠உணவில் சேர்த்தால் வியாதி.... ♠♠

தற்போது பாக்கெட்டுகளில்அடைத்து விற்கப்படும் சில கம்பெனி தேங்காய் எண்ணெய், தேங்காயில் இருந்து தயாரிக்கப்பட்டதில்லை.

⛵⛵தேங்காய் எண்ணெய் என்றாலே அதற்கு முழுமையான மூலப்பொருள் தேங்காய்தான். பருத்த தேங்காய் களை உடைத்து, காய வைத்து செக்கில் ஆட்டி எடுத்து எண்ணெய் பெறப்படுகிறது. தலை முடிக்கு தேய்ப்பது மட்டுமல்லாது, சித்தா உள்ளிட்ட பலதரப்பட்ட மருந்துகள் தயாரிப்பிலும், உணவிலும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயனாகிறது.

⛵⛵ஆனால் சமீப காலமாக பெரும்பாலான கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயே இல்லை.

⛵⛵சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

⛵⛵தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .

⛵⛵பின் எப்போது தான் கூடுகிறது ?

⛵⛵கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
⛵⛵கச்சாஎண்ணெய்க்கும், தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

⛵⛵பல கம்பெனிகள் தேங்காய் எண்ணெயை மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்கிறார்கள்.

⛵⛵அவர்கள் பொய் சொல்வதில்லை.

⛵⛵உண்மையை அவர்களின் தயாரிப்புக்களின் மேல் அட்டையிலேயே (லேபிள்) அச்சடித்தும் இருக்கிறார்கள்.நாம்தான் பார்த்துப் படித்து புரிந்து கொள்வதில்லை.

⛵⛵மினரல் ஆயில் என்றால் என்ன ? ⛵⛵

⛵⛵பொதுவாக கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை 24 வகைப் பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதில் பெட்ரோலியப் பொருட்களின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ‘அமெரிக்க மண்ணெண்ணெய்’ இதை இப்படியும் சொல்வார்கள்”சீமை எண்ணெய் – சீமெண்ணெய்” .

⛵⛵இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .

⛵⛵எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .

⛵⛵மினரல் ஆயிலில் உருவாகும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் தோல் வறண்டு போகும். தலைமுடி தன் ஜீவனை இழக்கும். பலருக்கும் ஒவ்வாமையில் முடி கொட்டும். சீக்கிரமே நரைத்துப் போகும். அரிப்பு வரும், குழந்தைகளுக்கு பயன்படுத்துவது மேலும் ஆபத்தானது. இந்த மினரல் தேங்காய் எண்ணெய்யை உணவுக்குப் பயன்படுத்துவது இன்னும் கொடுமையானது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

⛵⛵பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.

⛵⛵நாம் முன்பெல்லாம் பனிக்காலங்களில் நம் வீட்டில் வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் உறைந்து போய் விடும். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெய் உறைவதில்லை. இதை யோசித்திருக்கிறோமா?

⛵⛵ஆனால் அதே சமயம் பெரும்பாலான எல்லாக் கம்பெனி எண்ணெய் பாட்டில்களின் மேலே லேபிளில் ஒரு முக்கியமான விஷயம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது இதுதான்.

“STORE IN A COOL & DRY PLACE PROTECTED FROM SUN LIGHT”

⛵⛵புரிந்து கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயாக இருந்தால் குளிர் காலத்தில் உறைந்து போகும். வெயிலில் வைத்து உபயோகிப்போம். ஏனெனில் அது உண்மையான தேங்காய் எண்ணேய். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெயை குளிர்ந்த, வறட்சியான இடத்தில் வைக்க சொல்கிறான். கூடவே வெயில் படாமல் வைக்கவும் சொல்கிறான்.

⛵⛵ஏனெனில் வெயில் பட்டால் மண்ணெண்ணெய் ஆவியாக ஆரம்பித்து விடும்.
என்ன ஜாக்கிரதை பாருங்கள்!?.

⛵⛵இதை விட இன்னொரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கை. ⛵⛵

♠♠Warning : For External use only ♠♠

✖✖Keep out of reach of children to avoid

✖✖accidental drinking; and inhalation which can cause serious injury.

✖✖Discontinues use if skin irritation occurs

இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

♠♠எச்சரிக்கை: ♠♠
♠♠வெளி உபயோகத்திற்கு மட்டும். ♠♠

✖✖குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

✖✖தற்செயலாக குடிப்பதையோ, நுகர்வதையோ தவிர்க்கவும்,
ஏனெனில் அவை மோசமான தீங்கை உண்டாக்கும்.

✖✖தோலில் எரிச்சல் ஏற்பட்டால் உபயோகிப்பதை நிறுத்தவும்.

⛵⛵இரண்டு எலும்பும், ஒரு மண்டை ஓடும் போட்டு அபாயம்னு சொல்லவில்லை. அவ்வளவுதான். இது நான் சொல்லவில்லை குழந்தைகளுக்கென்றே பிர்த்யேகமாக பொருட்களை தயாரித்து விற்கும் புகழ்பெற்ற ஜான்ஸன்ஸ் & ஜான்ஸன்ஸ் கம்பெனி அதன் ஹேர் ஆயில் லேபிளில் சொல்கிறது.

♠# குழந்தைகளுக்கு உபயோகிக்கும் ஆயிலையே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க சொல்கிறது.
♠# எண்ணை வாய்க்குள் போகவும், சுவாசிக்கும் போது மூச்சுக் காற்றோடு உள்ளே போகவும் வாய்ப்பிருக்கும்போது அது மோசமான தீங்கை உண்டாக்கும் என்கிறது.
♠# எரிச்சல் வந்தால் நிறுத்துஎன்கிறது.

⛵⛵நம்ம பாப்பா எரிச்சல்னு சொல்லி பேசத் தெரியுமா? யோசியுங்கள் நண்பர்களே!.

⛵⛵தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள். டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள்.

♠♠மாய வலையில் வீழாதீர்கள்...
இந்த எண்ணை மட்டுமல்ல.
எல்லா எண்ணெய்யும் இதே
கதைதான்!? ♠♠

♠♠வாழ்க கலப்பட தமிழகம்... ♠♠
♠♠வளர்க சுகாதாரத் துறை... ♠♠

அழிக மக்கள்!!!???

♠♠இதை மீண்டும் மீண்டும் பகிருங்கள் என் நண்பர்களே♠♠
♠♠♠♠♠♠♠♠♠♠
[6:02 PM, 9/26/2015] செந்தாமர: Maruti Suzuki reaches wage settlement, workers bag Rs 16,800 monthly salary hike - The Economic Times on Mobile - News
Maruti Suzuki reaches wage settlement, workers bag Rs 16,800 monthly salary hike
Whatsapp
Facebook
Google Plus
Twitter
Email
26 Sep, 2015, 0412 hrs IST, Nabeel A Khan, ET Bureau

After about six months of negotiations, Maruti Suzuki India has reached a wage settlement with its three labour unions.
NEW DELHI: After about six months of negotiations, Maruti Suzuki India has reached a wage settlement with its three labour unions, entailing employees an average salary increase of around Rs 16,800 spread over three years. The wage hike of about 38 per cent will take effect retrospectively from April 1 and will be valid till March 31, 2018. The wage agreement with workers at its Manesar and Gurgaon plants will set a new benchmark for the automobile industry in India.

According to a source, the monthly cost to company in 2014-15 for a worker would be a little over Rs 50,000, a month, which is better than the industry average. Maruti workers will receive 50 per cent of the increased component in the first year and 25 per cent each in the remaining two years. This would mean a salary raise of Rs 8,430 a month, will be given in the first year and an increment of Rs 4,200, a month in the second and third year respectively.
[6:36 AM, 9/27/2015] செந்தாமர: 🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
படித்ததில் பிடித்தது
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன்.

அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.

எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார்.

அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன்.

உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்?

இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன்.

அவள் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.

ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னாள்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா

ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா?

மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா?

அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட் டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார்.

நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாகசிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம்.

அதே போல் தான் நாட்களின் பெயர்களும்
பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமை என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சக்ர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது?

அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள்.

என்றேன் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர்.

இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள்.
க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்
றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்?

இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம்.

பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்)

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது
(10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது
அல்ல(4நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை

(2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை
(3 முக்கால்)

தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?


என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமை


அறியாமை நீங்க இறைவனிடம் வேண்டுவோம்.
[8:53 PM, 9/28/2015] +91 90925 52551: சாவியும் சுத்தியலும் பேசிக்கொண்டதாக ஒரு கதை...சுத்தியல் சாவியிடம் கேட்டதாம்..நான் பலசாலி.பூட்டை உடைத்து திறக்கப் பலத்தை உபயோகிக்கிறேன்.நீயோ பலமற்றவன்.ஆனால் எளிதில் பூட்டை திறந்து விடுகிறாய்...அது எப்படி?
சாவியின் பதில்.,நீ அடித்து திறக்கப் பார்க்கிறாய்.நானோ பூட்டின் இதயத்தைத் தொட்டுத் திறக்க முயற்சிக்கிறேன். ஒன்றை உடைத்துத் திறப்பதை விட இதயத்தைத் தொட்டுத் திறக்க வைப்பதுதானே சிறந்தது.
கற்பனை கதை என்றாலும் அது வலியுறுத்தும் உண்மை...மனிதர்கள் விசித்திரமானவர்கள்.அவர்களின் இதயத்தை எப்படி திறப்பது என யாருக்கும் தெரியாது.
அன்பு ஒன்றேதான்  மனதைத் திறக்கும் சாவி.அது எப்போது,எப்படி ஓர் இதயத்தைத் திறந்து தன்வசப்படுத்தும் என்பது விந்தையே !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக