[8:14 AM, 8/15/2015] +91 95516 56551: நேற்று என் கம்யூனிச நண்பர் ஒருவர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் என்னை பார்த்து
நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா என்று கேட்டார்.
நான் சொன்னேன் நாம ஆங்கிலேயர்கிட்ட இருந்து விடுதலை ஆன நாள் அது அதனால கொண்டாடுறோம் என்று.
அதுக்கு அவர் சொன்னது அதுதான் நாம தவறாக கொண்டாடிட்டு இருக்கோம் என்று நான் நினைக்கிறேன் .
இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
நாம எதுக்கு கொண்டாடுகிறோம்,நமது வருங்கால தலைமுறைக்கு நாம இத்தனை கோடி பேர் இருந்தும் அடிமை பட்டு கிடந்தோம் என்று சொல்வதற்காகவா என்று கேட்டார்.
அதற்கு நான் அது அப்படி இல்லை இத்தனை பேர் இருந்தும் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லாததால் நம்மை இன்னொருத்தான் அடிமைபடுத்தி ஆண்டான்,அது மாதிரி நிலை வரக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைவு படுத்த தான் நாம கொண்டாடுகிறோம் என்று சொன்னேன்.
அதற்கு அவர் சரி சுதந்திர தினம் ஒற்றுமைய வலியுறுத்தி கொண்டாடபடுகிறது என்றால் இத்தனை வருடத்தில் நம்மிடையே ஒற்றுமை வளர்ந்து இருக்கிறதா என்று கேக்கிறார்.
[8:16 AM, 8/15/2015] +91 95516 56551: அவர் கேட்ட கேள்வியிலும் தவறு இல்லை,சொல்லியதில் தவறு இல்லை,நாம் நாட்டின் நிலைமை அப்படி இருக்கு,கீழே உள்ள பதிவு ஒரு தளத்தில் கண்டது.
இன்று நாம் சுதந்திரம் கொண்டாடுவது ஒரு போலித்தன்மை கொண்ட விசயமாகும்.
உண்மையில் சுதந்திர தினத்தை மனதார கொண்டாடுவது தியாகிகளும், இன்றைய நாட்டை பற்றி முழுதும் அறியாத ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகள்தான்...
கொஞ்சம் பெரிய பிள்ளைகள்கூட இன்று எந்த சினிமா வரும்? என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தது கல்லூரி மாணவர்கள் கேட்கவே வேண்டாம், அவர்களும் சினிமா, கிரிக்கெட் என்று அலைய ஆரம்பித்து எஸ்.
ஒரு சில பெரியவர்களே அப்பாடி மூணு நாள் சேர்ந்தாப்புல லீவு விட்டது என்று கலைஞர்,ஜெயா முன் உட்கார ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியாவது அந்த தொலைக்காட்சிகளில் ஏதாவது ஒரு தியாகியை அழைத்து உட்கார வைத்து சுதந்திரத்தை பற்றி பேசுகின்றார்கள் என்றால் அப்படி எதுவுமே கிடையாது. யாராவது ஒரு நடிகையை உட்கார வைத்து கொண்டு சுற்றி அமர்ந்து கும்மாளம் அடிக்கிறது சன், கலைஞர், மற்றும் ஜெயா டிவி, நம் நாட்டு தியாகிகளை ஒரு முதலமைச்சராக இருக்கும் அல்லது இருந்தவர்களே மதிப்பதில்லை. அப்புறம் எப்படி சாமானிய மக்கள் அல்லது வளரும் தலைமுறைக்கு நாட்டின் தன்மை, அருமை புரியும்??
[8:21 AM, 8/15/2015] +91 95516 56551: கம்யூனிஸ்ட் நன்பரின் பதில் கம்யூனிச சிந்தாந்தம் எப்போதும் சுயசார்பை, சுய சிந்தனையை வலியுறுத்துகிறது.
அவர்கள் தத்துவப்படை 1947 இல் நடந்தது ஆட்சி மாற்றமே. விடுதலை அல்ல. அதைத்தான் நாம் கொண்டாடுகிறோம்.
ஆங்கேலேயர்களிடம் இருந்து அவர்களால் வளர்க்கப்பட்ட காங்கிரசார் கையில் இருந்த மக்கள் விலகி வேறு ஒரு திசைக்கு சென்று ஆங்கிலேயருக்கு எதிராக எழும் சூழல் நேர்ந்ததால் இதை உணர்ந்த அவர்கள் மேல் தட்டு மக்களிடம் செய்த ஆட்சி மாற்றமே இந்த சுதந்திரம். இதை மக்கள் [b]மறக்கவே/ மறைக்கவே [/b]சுதந்திரம் கொண்டாடப்படுகிறது.
பல காலமாக ஒருவன் ஆள, அவனையும், அவன் அருகில் கூஜா தூக்குபவரின் கீழ் வளரும் சூழலைத்தான் இந்தியாவில் பன்னெடுங்காலமாக பெரியோர்கள் போற்றிப் பாராட்டி, வளர்த்து வந்தனர். இன்று அமரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகளுக்கு ஆதரவாகத் தான் நம் நாட்டில் பல திட்டங்கள் போடுகின்றனர். கோல்ட் ஸ்பாட் போயி பெப்சி வந்ததும் இதனால் தான்.
இது எனக்கு கம்யூனிச கருத்தில் தோன்றிய பதில் என்றார்
[8:22 AM, 8/15/2015] +91 95516 56551: இதை மேலும் புரிய வைக்க ஒரு சிறு உதாரணம்.
ஒருவர் சென்னையை தலைமயிடமாகக் கொண்டு, பிற மாவட்டங்களில் கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்றை நடுத்துகிறார் என்று வைத்து கொள்வோம். இதில் ஒரு மாவட்டத்தில் உள்ள கிளை தலைமை நிறுவனத்துடன் சண்டையிட்டு தனியாக பிரிந்து வேறு ஒரு புதிய பெயருடன் போனால் அந்த நிறுவனதிற்கு கிடைத்தது விடுதலை. அந்த தலைமை நிறுவனம் வேறு ஒருவரின் கைக்கு போனால் அதன் பெயர் நிர்வாக மாற்றம். விடுதலை அல்ல. இப்படி நிர்வாகம் மாறும் போது அங்கு வேலை செய்பவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடாது என்பதற்காக நாம் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, போனஸ் கொடுப்போமே. மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்குவதுப் போல் தான் இந்தியா சுதந்திரம் உள்ளது. இது தான் கம்யூனிச (சுயசிந்தனை) கொள்கைவாதிகளின் தத்துவம்.
இதே போல் இந்தியாவில் 1947 இல் நடந்தது வெறும் ஆட்சி மாற்றம், சுதந்திரம் அல்ல. பாகிஸ்தானுக்கு நடந்தது தான் சுதந்திரம்.
[8:26 AM, 8/15/2015] +91 95516 56551: நம் பாடப் புத்தகங்களில் இடம்பெறாத இந்தியா வரலாற்றை புரட்டி பார்த்தால், இந்தியா என்ற ஒரு மிகப் பெரிய நாட்டின் வரைபடம், எல்லைகளை நிர்ணயம் செய்தது வெள்ளையன் தான்.
அப்போது ஒவ்வொரு மன்னனும் அவர்களின் ஆட்சி செய்த காலத்தில் தங்களால் பிடிக்கப்பட்ட எல்லைகளை தங்கள் நாடு என்று கூறி கொண்டு இருந்தனர். தமிழனும் தான். கடாரம் வென்றான் , இமயம் சென்றான் என்று நாம் பெருமைப் படுவதும் இதைத்தான்.
இப்படி பிடித்த பின்பு அந்த நாட்டு மன்னனிடம், அல்லது அவர்கள் நிர்ணயம் செய்யும் குறு நில மன்னனிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர்களிடம் இருந்து வரி அதாவது கப்பம் வாங்கி வந்தனர். இது பாபர் முன்னர் இருந்து முதல் ஔரங்காசீப் வரை தொடர்ந்தது. இதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த வெள்ளையர்கள் அவர்களின் பிடித்த ஒவ்வொரு நாடுகளையும் அவர்களின் எல்லைகளுக்குள் அதாவது இன்றிய தென் இந்தியாவையும் ஒருங்கே இணைத்து ஆட்சி செய்தனர். இது தான் முழு இந்தியா என்று இன்று நாம் கூறுகிறோமோ அதற்கு அவர்கள் கொடுத்த அடையாளம்.
அவர்களுக்கு முன்னும் இங்கு ஒவ்வொருவரும் சிறு சிறு நாடுகளாகத் தான் செயல் பட்டு இருந்தனர். நாமும் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, பல்லவ நாடு என்று பல பிரிவுகளை வைத்து இருந்தோம்.
இன்று இலங்கைத் தமிழர்களை பல நாடுகள் சேர்ந்து வீழ்த்தி விட்டன என்று கூறி காசு பார்க்கின்றனர். ஒரு சிறு குறு நில மன்னன் பாரி புகழ் வளர்ந்து விடக்கூடாது என்று மூவேந்தர்களும் இணைந்து பாரியை வீழ்த்தினர். இது ஒன்றும் உலகுக்கு புதுசில்லை. சரித்திரத்தில் இதெல்லாம் சகஜம்.
இப்படி இருந்து சிறு சிறு நாடுகள் சுதந்திரம் கிடைத்த பிறகும் ஒரே நாடாக செயல் பட விரும்பவில்லை. ஆதலால் மொழியின் அடிப்படையில் இவை மாநிலங்களாக பிரிக்க வேண்டிய சூழல் இருந்தது . இப்படி ஒரு பிரிவுக்காகவும் நாம் சண்டை இட்டுக் கொண்டோம். இவை நம் சரித்த புத்தகத்தில் இடம் பெறா வண்ணம் நம் பெரியவர்கள் பார்த்து கொண்டனர். அப்பன் சொத்தை ஆளாளுக்கு பிரிச்சி கொடுங்க என்று பிள்ளைகள் சண்டை போடுவது போல். ஒற்றுமை அன்று முதல் இருந்ததில்லை. இனி மேலும் வாராது. இது தான் வெள்ளையனின் வெற்றிக்கு காரணம்.
இந்தியர்கள் மட்டுமே வெளிநாட்டில் வேலை செய்யும் போதும் தமிழன், மலையாளி, குஜராத்தி, மராத்தி என்று தனித் தனியே செயல் படுகிறோம்.
இந்தியன் என்ற ஒற்றுமை அல்லது உணர்வு திரைப்படங்களிலும், கவிதைகளிலும், கிரிக்கெட் பார்க்கும் போதும், பாஸ்போர்டில் மட்டும் தான் இருக்கிறது.
[8:29 AM, 8/15/2015] ஆறுமுகம் (கிரேன்): ஆ.ஜெ. கார்க்கி .
[8:33 AM, 8/15/2015] +91 95516 56551: சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்
சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்
உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை
திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!
உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு
பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு
மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை
விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!
அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு
உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு
உடமையெல்லாம் இழந்தாலும் –
எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்
மார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
காதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
யாரடிச்சு யார் மாண்டுபோயினும் – எவனடிச்சும் சாகா தமிழனுக்கு
எழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்!
பெண்ணென்றால் போகமென்றே வாழ்ந்தவனும்
அடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்
வைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்
திடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்
சேர்த்துக் கிடைத்தது; சுதந்திரம்!
உயிருக்கெல்லாம் மண்ணென்ற விலைவைத்து
மண்ணிற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர்வைத்து
ஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்
மாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; சுதந்திரம்!
காக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த
வெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்
மார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்
தியாகத்திற்குக் கிடைத்தது; சுதந்திரம்!
ரத்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து
முடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை
அடிமை அடிமை என்ற ஓர்சொல்
அடங்கமறுத்து அடங்கமறுத்து பெற்றது; சுதந்திரம்!
வீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து
வீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து
வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து
என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை
எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!! , நன்றி வித்யாசாகர்
[8:41 AM, 8/15/2015] +91 95516 56551: 1947, ஆகஸ்ட் 15 – முதல் சுதந்திர தினத்தன்று. . . இந்திய சுதந்திர தினத்தன்று எங்கள் குடும்பம் லால்குடியில் இருந்தது. எங்கள் தந்தையார் திரு ராமலிங்கம் அவர்கள் திருச்சி மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தார். நான் பத்தாவது வகுப்பில் இருந்தேன். (அன்றைய ஐந்தாவது பார்ம்). ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இந்தத் திருநாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் மாமா திரு. சிட்டி சுந்தர்ராஜன் அப்போது வானொலி ஆசிரியராக, திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
திராவிடக் கழகம் அப்போது திருச்சி மாவட்டத்தில் கொடிகட்டிப்first-independance-day1 பறந்து கொண்டிருந்தது. சாதாரணமாக மேடைப் பேச்சாளர்கள் அடுக்கு மொழியில் பிராமணர்களை, வட இந்தியர்களை, ஹிந்தி மொழியை, மற்றும் இதிகாசங்களை இயன்ற வரை சாடிக்கொண்டிருந்த நேரம். எங்கள் வகுப்பாசிரியரும் தலைமை ஆசிரியரும் கூட திராவிடக் கழக அனுதாபிகள். அப்போது அக்கட்சி இன்னும் இரண்டாகப் பிரியவில்லை. ஆனாலும் அப்போதே உட்கட்சிப் பூசல்கள் இருந்தன. அவர்களுள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதா கூடாதா என்ற ஒரு அபிப்ராய பேதம் இருந்தது. அந்த நிலையில் மாணவர் சங்கத்துத் தேர்வுகள் நடக்க இருந்தன. நான் என்னையே ஒரு வேட்பாளனாக அறிவித்துக் கொண்டேன் எனக்கும் சில தோழர்கள் இருந்தனர். அப்போது திராவிடக் கழகத்தின் மூலம் ஒரு மாணவன் நிறுத்தப்பட்டான். அவனுக்கு எதிராக நான் போட்டியிட்ட போது அது ஒரு பிராமாணர், பிராமணல்லாதார் போட்டியாகவே ஆகிவிட்டது. ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் மறைமுகமாக அம்மாணவனுக்கு ஆதரவு அளித்தனர். முடிவு? சொல்ல வேண்டுமா? அப்பையனே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது!
நான் விட வில்லை தொடர்ந்து “செந்நாப்போதார் செந்தமிழ்ச் சங்கம்” என்ற ஒரு சங்கத்தை அமைத்து அதற்கு ஆரம்ப விழாவிற்கு எங்கள் தலைமை ஆசிரியரையே அழைத்திருந்தேன். சில நாள்களில் எங்கள் சங்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது! தலைமை ஆசிரியரே எங்கள் சங்கத்திற்கு ஆதரவை அளிக்க ஆரம்பித்தார்.
ஆகஸ்டு இரண்டாவது வார ஆரம்பத்தில் நான் காலணாindia_flag போஸ்டு கார்டுகள் இருபதோ முப்பதோ வாங்கி எல்லாவற்றிலும இடது மேல்மூலையில் சிறிய இந்திய கொடிச் சின்னத்தை ஒட்டி, கலர் மையில்
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
என்றெழுதி அதன் முடிவில் சி. சுப்பிரமணி பாரதியார் என்றும் குறிப்பிட்டு சொந்தக்காரர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன். எங்கள் ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்ததில் அவர்கள் பெருமை அடைந்தனர். முதல் நாளன்றே எங்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டம் கூட்டி, விழாவைக் கொண்டாடினோம். அன்றே எங்கள் தாயார் இனிப்புகள் செய்து நண்பர்களுக்கும் வழங்கத் தந்தார்.
சுதந்திர தினத்தன்று, மாலை திருச்சி சென்றிருந்தேன். அங்கு சிட்டி அவர்கள் குடியிருந்த, ஆனை கட்டி மைதானத்து வேதமாணிக்கம் ஸ்டோர்ஸில் சிட்டி தலைமையில் ஒரு சிறப்புக் கூட்டம். பல நண்பர்கள் வந்திருந்தனர்.
independencedayindiaசுதந்திர தினத்தை ஒட்டி மணிமண்டபத்திலும் ஒரு கூட்டம் நடந்ததாக நினைவு; மதுரை மணி அய்யர் பாட்டுக் கச்சேரியுடன். அப்போது தலைசிறந்த எழுத்தாளர்களான ந. பிச்சமூர்த்தி, சாலிவாஹனன், திருலோக சீதாராம் போன்றவர்களை சிட்டி மாமாவுடன் சந்தித்துள்ளேன். அவர்களெல்லாம் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகையில் மெய் சிலிர்க்கும்.
இரவில் திருச்சி ஜங்ஷனுக்கு எல்லோரும் சென்றோம். அங்கு மின்சார பல்புகளால் அலங்கரிக்கப்பட்ட கொடியுருவம் மின்னிக் கொண்டு திகழ்ந்தது இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. ‘சுதந்திர இந்தியாவில் மாணவர்கள் பணி’ என்ற தலைப்பில் எங்கள் சங்கத்தில் ஒரு கூட்டம் போட்டோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஊரில் பலகூட்டங்கள் நடந்தன. சின்ன அண்ணாமலை பேசியதுகூட நினைவில் உள்ளது.
தீவிர உற்சாகத்துடன் நாங்கள் எதிர் கொண்ட சுதந்திர இந்தியாவை இவ்வளவு சீக்கிரத்தில் அரசியல்வாதிகள் குப்பைமேடாக ஆக்கிவிடுவார்கள் என்று அப்போது எங்களுக்குத் தோன்றியதேயில்லை! - நரசய்யா
[8:46 AM, 8/15/2015] +91 95516 56551: உங்களைப் பொறுத்த வரை சுதந்திரம் என்றால் என்ன ? நன்பர்களே பதிவிடுங்கள்
[4:28 PM, 8/16/2015] ஆறுமுகம் (கிரேன்): அடிப்படைத் தேவைகள்-
அடித்தட்டு மக்களில்
அனைவரும் அடையும் வரை
சுதந்திரம் என்பது
உயிரற்ற உபயோக மற்ற
மலட்டு வார்த்தை.
[7:25 PM, 8/17/2015] சங்கர்: இன்று வரை யாறோ ஓரு வருக்கு அடிமை யாக தான் இருகிறோம்
[1:47 PM, 8/18/2015] +91 90925 52551: வங்கிக் கணக்குகளைத் திருடும் வைரஸ் .0 . .இந்திய இணைய வெளியில், 'Golroted' கோல்ரோடெட் என்னும் வைரஸ் பரவி வருவதாக, வைரஸ் பரவுதல் குறித்து கண்காணித்து வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இவை, தனிநபர் மின் அஞ்சல்களையும், அவர்களின் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் இலக்கு வைத்து திருடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு ட்ரோஜன் வகை வைரஸ் ஆகும். தன் நிலையை மறைத்துக் கொண்டு, நல்ல புரோகிராம் போல, நம் கம்ப்யூட்டருக்குள் வந்து நாச வேலையைத் தூண்டும் வகையான வைரஸ் இது எனக் கண்டறியப்பட்டுள்ளது. Golroted என்ற வகையில், நம்மை உளவு பார்க்கும் புரோகிராம்களும் பரவி வருகின்றன. இவை, நம்மை ஈர்க்கும் வகையிலான மின் அஞ்சல்களாகத் தரப்படுகின்றன. பின்னர், ஏதேனும் ஒரு லிங்க், பொதுவாக, ஸிப் செய்யப்பட்ட பைலாகத் தரப்பட்டு, அதில் கிளிக் செய்திடுகையில், வைரஸ் நுழைகிறது. இந்த தகவலை Computer Emergency Response Team of India (CERT-In) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, இந்திய இணைய வெளியில், இவ்வாறு பரவும் வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் பைல்களைக் கண்காணித்து, பயனாளர்களை எச்சரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
வெற்றிகரமாக, கம்ப்யூட்டர் ஒன்றுக்குள் நுழைந்தவுடன், கம்ப்யூட்டரில் உள்ள தனிநபர் அடையாளம் காட்டும் தகவல்களை (Personal Identifiable Information - PII) இலக்கு வைத்து திருடுகிறது. கம்ப்யூட்டரின் பெயர், இயங்கும் இடத்தின் நேரம், தேதி, இணைய இணைப்பில் அதன் முகவரி, இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு தரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகிய தகவல்களுடன், தனிப்பட்ட அந்தரங்க தகவல்களையும் திருடுகிறது. குறிப்பாக, இந்த வைரஸ், வங்கி கணக்குகள் சார்ந்த தகவல்களை அடையாளம் கண்டு கொண்டு திருடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கிகளின் இணைய தளங்கள், இணையத்தில் நிதி பரிமாற்றத்திற்கு வழி தரும் இணைய தளங்கள், மின் அஞ்சல் கணக்குகள், சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றைத் தனியே அடையாளம் கண்டு, தன் நாச வேலையை மேற்கொள்ளும்படி புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.
திருடப்பட்ட தகவல்கள், வடிகட்டப்பட்டு, தேவையான தகவல்கள் மட்டும், அதற்கென இணைக்கப்பட்ட File Transfer Protocol சர்வருக்கு இணைப்பாக அனுப்பப்படுகிறது. பின்னர், நம் நிதியைத் தன் வசம் கொண்டு செல்கிறது. இந்த வைரஸ் இரு வகை தோற்றத்தைக் கொண்டுள்ளதாகவும், இதனைக் கண்டறிந்த அமைப்பு அறிவித்துள்ளது. கம்ப்யூட்டரில் நாம் பாஸ்வேர்ட் போன்றவற்றை அமைக்கையில், நாம் இயக்கும் கீகளை அடையாளம் கண்டு கொண்டு, சேமிக்கும் திறன் இந்த வைரஸ் புரோகிராமிற்குத் தரப்பட்டுள்ளது.
இதிலிருந்து தப்பிக்க, Computer Emergency Response Team of India (CERT-In) அமைப்பு தந்திருக்கும் சில வழிகளை இங்கு பார்க்கலாம். கம்ப்யூட்டர்களின் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினை அடுத்தவர் பயன்படுத்தும் வகையில் தர வேண்டாம். முன் பின் அறியாத நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து, இணைப்புகள் மற்றும் லிங்க் இணைந்து உங்களை அடையும் மின் அஞ்சல்களைத் திறக்க வேண்டாம். லிங்க் மீது கிளிக் செய்திட வேண்டாம். புரோகிராம்களை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டாம். பயர்வால் புரோகிராமினை இயக்கி வைக்கவும்.
ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களை, கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்து வைத்தல் ஓர் அத்தியாவசியத் தேவையாகும். இதனை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்க வேண்டும். சமூக வலைத் தளங்களில் நீங்கள் இடம் பெற்றுள்ள குழுக்களிடமிருந்து வரும் இணைப்புகளையோ, இணைய தளங்களுக்கான லிங்க்களையோ கிளிக் செய்திட வேண்டாம். குறிப்பிட்ட ஒரு குழுவிலிருந்து அடிக்கடி இது போல அனுப்பப்படுகிறது என்றால், அந்த குழுவிலிருந்து விலகிவிடவும்.
TamilRockers.com
[6:35 PM, 8/18/2015] அருள் (பர்னஸ்): விதைப்பந்து//////////////// இவை சாப்பிடும் திண்பண்டம் இல்லை. விதைப்பந்து. மண் மற்றும் உரம் அல்லது பசுஞ்சாணத்தால் ஆன உருண்டை. இவற்றின் நடுவே மர விதை. உள்ளது.
செம்மண்ணில் பாதியளவு சாணத்தை கலந்து நீரூற்றி பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே நீங்கள் சேகரித்த விதைகளை வைத்து உருண்டையாக்கி விடுங்கள். சூரிய வெப்பத்தில் ஒரு நாள் காய்ந்தால் அது இறுகி விடும்.
நீங்கள் வெளியே செல்லும் போது மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் வீசி செல்லுங்கள். அவ்விதை மழை வரும்வரை எலி, எறும்பு, குருவிகளிடமிரிந்து பாதுகாப்பாய் இருக்கும். ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.
விதைகளைப் பொருத்தவரை சில நாட்களுக்கு தேவையான சத்துக்கள் விதையிலேயே வைக்கப்பட்டிருக்கும். எனவே சில நாட்களுக்குப்பின் உரம் தேவைப்படும். மண்ணில் கலந்துள்ள சாணமானது மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் பக்குவப்படுத்தி விடும். மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை செடியின் வேர் உண்டு தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக்கொள்ளும்.
ஆனால் வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரிணங்களால் உணவாக்கப்படலாம். வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதை முளைக்காது. ஆனால் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இளகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை உழுது இளகுவாக்கி விடம்.
எனவே உங்கள் வீடுகளில் சிறிது செம்மண் மன்றும் சாணத்தை சேகரித்து வையுங்கள். பழங்களை சாப்பிட்ட பின் நல்ல விதைகளை எடுத்து சேகரித்து வையுங்கள். ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும் போது நல்ல இடம் பார்த்து வீசி விடுங்கள். கோடை காலமானாலும் வீசி விடுங்கள். செய்து பார்த்து எப்படி இருக்கிறதென்று சொல்லுங்கள். இதை அதிகமாக சேர் செய்யுங்கள். காக்கை கூட தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக்கடனாக விதைகளை நிலத்தில் எச்சமாக விதைத்துச் செல்கிறது. ஆனால் நாம்???
[12:39 AM, 8/19/2015] C N. ராமச்சந்திரன்: 😄
[6:15 PM, 8/21/2015] +91 95516 56551: பேமெண்ட் வங்கி என்றால் என்ன?
வருமானம் குறைவாக உள்ள மக்கள், சிறு வர்த்தக நிறுவனங்கள், முறைப்படுத்தாத துறைகளுக்கு முறையான நிதி சேவை அளிக்கும் அமைப்பு தான் இந்தப் பேமெண்ட் வங்கி. இவ்வங்கியில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குச் சிறு சேமிப்புக் கணக்கை கொண்டு பணப் பிரிமாற்றம் மற்றும் நிதி செலுத்துதல் போன்ற சேவைகளை அளிக்கும். சரி சாதாரண வங்கிகளுக்குப் பேமெண்ட் வங்கிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பார்ப்போம்
கடன் கொடுக்க முடியாது..
இந்தியாவில் உள்ள பிற வங்கிகளைப் போல, பேமெண்ட் வங்கிகள் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குக் கடன் அளிக்க முடியாது.
டெபாசிட்
இவ்வங்கியில் தனிநபர் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இதனால் இத்தகைய வங்கிகள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மட்டுமே இயங்க இயலும்.
கிரேடிட் கார்டு இல்லை..
சாதாரண வங்கிகளைப் போல் பேமெண்ட் வங்கி கிரேடிட் கார்டு கொடுக்க முடியாது. ஆனால் டெபிட் கார்டுகளை விநியோகம் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
வணிக நிருபர்கள்
இத்தகைய பேமெண்ட் வங்கிகள் நாட்டின் பிற வணிக வங்கிகளுடன் இணைந்து வணிக நிருபர்களாகச் செயல்பட ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது. இதனால் கிராமம் மற்றும் சிறு நகரகங்களில் அதிகளவிலான வர்த்தகம் உருவாகும். இதனால் வங்கிகளும் லாபம் அதிகம்
100 கோடி ரூபாய்
பேமெண்ட் வங்கிகளுக்கு அனுமதி பெற்ற நிறுவனங்கள் 100 கோடி ரூபாய் முதலதன தொகையுடன் துவங்கப்பட உள்ளது. இதில் பேமெண்ட் வங்கி உரிமையாளர் குறைந்தது 40 சதவீதம் அதாவது 40 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என் ரிசர்வ் வங்கி உத்திரவிட்டுள்ளது.
அன்னிய முதலீடு
இந்திய வங்கித்துறையில் உள்ள அன்னிய முதலீட்டு வழிமுறைகளே இத்தகைய வங்கிகளுக்கும் விதிக்கப்பட உள்ளது. இதனால் எப்டிஐ திட்டத்தில் மாறுதல்கள் ஏதுமில்லை.
வாடிக்கையாளர் சேவை மையம்...
முழுமையான வணிக வங்கிகளில் இருப்பது போலவே பேமெண்ட் வங்கிகளுக்கு வாடிக்கையாளர் சேவை மையம் இருக்கும். இதில் வாடிக்கையாளர்களின் குறைகள் மற்றம் சந்தேகங்கள் முழுமையாகத் தீர்க்கப்படும்.
பிற நிதி திட்டங்கள்
வைப்பு நிதி சேவை மட்டும் அல்லாமல் பேமெண்ட் வங்கிகள் மியூச்சுவல் பண்ட், காப்பீடு, கடன் பத்திரங்கள் போன்ற சேவையும் அளிக்க இயலும். இச்சேவையில் வணிக வங்கிகளும் ஈடுபட ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

11 பேமெண்ட் வங்கிகள் இந்திய மக்கள் அனைவருக்கும் நிதிச்சேவை கொண்டு சேர்க்கும் இலக்குடன், பேமெண்ட் வங்கிச் சேவைகளை அளிப்பிற்காக 11 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் தீவிர ஆய்விற்குப் பின் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
Read more at: http://tamil.goodreturns.in
[6:33 PM, 8/21/2015] +91 95516 56551: கூகுளைவிட துல்லியமான தேடல் பொறி! - . சவால் விடும் 16 வயது மாணவன்நாம் தினம் ஒரு முறையாவது பயன்படுத்திவிடும் கூகுளில், எதைத் தேடினாலும் நொடி நேரத்தில் ஐந்தாறு இலக்கங்களில் தேடல் முடிவுகளை கொட்டிவிடும்.
இருந்தாலும் இரண்டு பக்கங்களுக்கு மேல் போகவே மாட்டோம். ஏனெனில் அந்த அளவுக்கு துல்லியமாக நமக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் தர வல்லது கூகுள் தேடல் பொறி. ஆனால் இந்த பதின்ம வயது சிறுவன், கூகுளுக்கே சவால் விடுகிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகனான அன்மோல் டக்ரெல் என்பவர், தான் கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார்.
இந்த தேடல் பொறி, கூகுள் நடத்திய ’Google Science fair’ எனும் ஆன்லைன் போட்டிக்காக அன்மோல் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அன்மோல் பயன்படுத்தியது ஒரு 1ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஒரு கணினி, பைத்தான்-மொழி மேம்பாட்டுத் தொழில்நுட்பம், விரிவுத்தாள் செய்நிரல் (spreadsheet program) போன்ற சொற்பமான கருவிகளே!
"இப்போதைய தேடல் பொறிகள் ஒருவருடைய இருப்பிடம், இணைய உலாவல் வரலாறு, மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ள ஆப்ஸ் போன்றவற்றை கருத்தில் கொண்டே இயங்குகின்றன. ஆனால் இது சமன்பாட்டின் ஒரு பக்கம்தான். என் தேடல் பொறி இதன் இன்னொரு பக்கத்தையும் பயன்படுத்தி தேடல் முடிவுகளை வழங்குகிறது. ஒருவர் தேடும் வாக்கியத்தில் உள்ள உள்ளர்த்த்ததை ஆராய்ந்து, அவர் என்ன மாதிரியான முடிவுகளை விரும்புவார் என்று என் தேடல் பொறி கணித்து, பிறகே முடிவுகளை வெளியிடும்" என்கிறார் அன்மோல்.
இதை வடிவமைப்பதற்கு 60 நாட்களும், கோடிங் (coding) செய்வதற்கு 60 மணி நேரமும் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார் பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைக்கப்போகும் இந்த இளம் ஜீனியஸ்.
பெங்களூரிலுள்ள ஐஸ்க்ரீம் லேப்ஸ் எனும் நிறுவனத்தில் இரண்டு வார பயிற்சி வகுப்பிற்காக வந்திருந்தார் அன்மோல்.
அதன் இணை நிறுவனரும் ’மிந்த்ரா’ நிறுவனத்தின் முன்னாள் மார்க்கெட்டிங் மேலாளருமான சஞ்சய் ராமகிருஷ்ணன், “ஏற்கனவே பெரும் வெற்றிகண்ட கூகுள் தயாரிப்போடு போட்டி போட்டு அதை விட ஒரு நிலை மேம்படுத்தி செயல்படுத்துவதென்பது அசாத்தியமானது” என்று வியக்கிறார்.
தன் மூன்றாம் வகுப்பிலேயே ப்ரோக்ராமிங் படிக்கத் தொடங்கிவிட்ட அன்மோல், ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பது தன் கனவென்கிறார். ஆனால் இவரைச் சுற்றியுள்ளவர்களோ, சில உலக ஜாம்பவான்களைப் போல தன் யோசனைகளை செயல்படுத்த இவரும் கல்லூரி செல்வதை புறக்கணித்துவிடுவாரா? என கேள்வி எழுப்ப, “கல்லூரிப் படிப்பை புறக்கணிப்பது உண்மையில் முட்டாள்தனம். நம் யோசனைகள்தான் சிறந்தது, இதற்கு மேல் எதுவும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்ற கர்வம் கொள்ளக் கூடாது” என அட்டகாசமாக பதிலளிக்கிறார்.
இது மட்டுமல்ல, இப்போதே பெற்றோர் அனுமதியோடு டகோகேட் கம்யூட்டர்ஸ் (Tacocat Computers) என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சுந்தர் பிச்சை vs அன்மோல் டக்ரெல்! சபாஷ், சரியான போட்டி! . .நன்றி. eவிகடன்
[6:46 PM, 8/21/2015] +91 95516 56551: ஹெல்மட் பிரச்னைக்கு புதிய தீர்வு : ஜனாதிபதி தட்டிக்கொடுத்த தமிழக மாணவிகள் . தமிழக மக்களுக்கு தலைவலியாய் இப்போது இருப்பது ஹெல்மட் பிரச்னை.
ஹெல்மட் உயிர்காக்கும் என எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும், பல்வேறு காரணங்களை கூறி வாகன ஓட்டிகள் பலர் அதனை தட்டிக்கழிக்கிறார்கள். இந்த நேரத்தில் ஹெல்மெட் போடாமல் வண்டியையே இயக்க முடியாதபடி புதிய சென்சார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லுாரி மாணவிகள்
சமீபத்தில் டெல்லியில் National Innovation Foundation நடத்திய கண்காட்சியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தங்கள் கண்டுபிடிப்பை விளக்கி காண்பித்து, அதற்கும் பரிசும் பெற்றிருக்கின்றனர் இவர்கள்.
தமிழகத்து பெண்களின் இந்த கண்டுபிடிப்பை தேசிய அளவில் சிறந்ததாக அறிவித்ததோடு, அதற்கு பரிசும், பாராட்டும் அறிவித்ததோடு மட்டுமின்றி அவர்கள் கண்டுபிடித்த அறிவியல் உபகரணத்திற்கு பேடன்ட் உரிமையையும் பெற்றுத் தந்திருக்கிறது மத்திய அரசு.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த டி.லைலா பானு, எஸ்.எம்.ஆர்த்தி, எஸ்.வினோதா, ஆகியோர்தான் இந்த சாதனை மாணவிகள். தங்கள் கண்டுபிடிப்பால் தமிழ் மண்ணின் பெருமையை டெல்லியில் நிலை நாட்டிய மாணவிகளுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பாராட்டு குவிந்துகொண்டிருக்கிறது இப்போது.
"வளர்ந்து வரும் நம் இந்தியாவில், மக்கள் தொகையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. அதே நேரம், சாலை விபத்துகளால் நடக்கும் உயிர் இழப்புகளும் அதிகரிக்கின்றன. இதனால் மனித வளம் தேவை இல்லாமால் குறைந்து நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக விளங்குகிறது.
ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தைக் கூறும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் எவ்வளவு நடத்தினாலும், மக்கள் எதற்கும் செவிகொடுப்பது இல்லை. இதற்கு தீர்வாகத்தான் எங்கள் கண்டுபிடிப்பு உருவானது" என்கிறார்கள் ஒரே குரலில் இந்த பெண்கள்.
''விபத்துகள் நடக்க முக்கியக் காரணம், பாதுகாப்பற்ற பயணம்தான். பல விபத்துகளில் சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகின்றனர். அதற்குக் காரணம், ஹெல்மெட் அணியாததே. ஹெல்மெட் போட்டு இருந்தால் காயங்களுடன் உயிர்பிழைத்து இருப்பார்கள். சாலை விபத்தில் உயிரிழந்த எங்கள் ஆசிரியர், எங்கள் உறவினர் என நிறையப் பேருக்காக நாங்கள் வருத்தப்பட்டு இருக்கிறோம்” என்கிறார் லைலா பானு.
“ஒருமுறை, ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது, அங்கு கை கழுவுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த அதிநவீன சென்சார் கருவியைக் கவனித்தேன். அப்போது 'க்ளிக்' ஆனதுதான், இந்த ஹெல்மெட் போடாமல் வண்டி இயங்காது என்ற ஐடியா" என்கிறார் வினோதா.
''அகமதாபாத்தை சேர்ந்த 'நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு, எதிர்கால இந்தியா வுக்குப் பயன்படும் பல ஐடியாக்களை கேட்டிருந்தனர். அப்போது நன்னிலம் அரசு பெண்கள் மேல்பள்ளி மாணவிகளான நாங்கள், அந்த குழுவினரிடம் எங்கள் யோசனையை எழுத்து வடிவமாக கொடுத்தோம். இந்தியா முழுவதிலிமிருந்து 12,800 பள்ளிகளில் கிடைத்த 8,000 ஐடியாக்களில் 21 ஐடியாக்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் 32 மாணவர்களை அகமதாபாத், ஜோத்பூரில் நடந்த விழாவுக்கு அழைத்து இருந்தார்கள். தமிழ் நாட்டில் இருந்து 11 பேர் தேர்வாகி இருந்தோம். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எங்களுக்கு விருது வழங்கினார். இப்போது கல்லுாரியில் படிக்கும் நாங்கள் இந்த கண்டுபிடிப்பை மேலும் செழுமைப்படுத்தி இருக்கிறோம்.” என்கிற வினோதா குரலில் பெருமிதம் மிளிர்கிறது.
“சீக்கிரமாகவே ரெடி டூ மார்க்கெட் கொண்டு வந்துவிடுவோம். அதற்குத்தான் நாங்க நிறைய முயற்சிகள் எடுத்துக்கொண்டு வர்றோம். அகமதாபாத் விழாவோடு எங்கள் பங்களிப்பு முடியவில்லை, அதற்கும் மேல் டெக்னாலஜி இம்ப்ரூவ்மென்ட் கொடுத்ததால் திரும்பவும் இப்போது டெல்லியில் நடந்த தேசிய அளவிலான 8 வது கிராஸ் ரூட்ஸ் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இடம் பெற முடிந்தது.
மீண்டும் நாங்கள் சென்றுவர அரசாங்கம் ஏற்பாடு செய்தது. இந்த விழாவில் ஜனாதிபதி முன் தங்கள் கண்டுபிடிப்பை விளக்க ஒவ்வொருவருக்கும் 1.30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அவர் எங்களிடம் உபகரணம் இயங்கும் முறை, தேவையான என்னென்ன உப பொருட்கள், மற்றும் பிற தேவைகள் பற்றியெல்லாம் ஆர்வமாக கேட்டறிந்தது பெருமிதமாக இருந்தது. எங்கள் கண்டுபிடிப்பு இன்வென்ஷன் கேட்டகரியில் பங்கு கொண்டு பரிசை வென்றது ” என்கிறார் ஆர்த்தி உற்சாகமாக.
''எல்லாம் சரி, நீங்கள் கண்டுபிடித்து இருக்கிற இந்த ஹெல்மெட் எப்படி இயங்குது? பைக்கை ஓட்ட முடியாமல் எப்படித் தடுக்குது?'' என்றோம்.
''அது இன்னும் கொஞ்ச நாளைக்கு ரகசியம். இப்போ ஐடியா அளவில்தான் பரிசு வாங்கி இருக்கோம். இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததும் உங்களுக்கே புரியும். இந்த ஹெல்மெட் முழுமை அடைந்து, சந்தைக்கு வரும் போது, இதை மேலும் சராசரி மனிதனும் பயன்படுத்தும் அளவிற்கு கொண்டு செல்வோம் '' என்கிறார்கள் மூவரும் ஒரே குரலில்.
ஆர்த்தி மட்டும் திருச்சியில் உள்ள எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படிக்கிறார். வினோதா திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரியில் கணிதமும், லைலாபானு திருவாரூரில் உள்ள ராபியம்மாள் மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பமும் படித்து வருகின்றனர்.
பள்ளி விட்டு பிரிந்தாலும், பிரியாமல் தொடருகிற நட்பில் சாதனை புரிந்து பரிசுகள் விருதுகள் வாங்கி சேர்த்திருக்கும் இவர்கள் அறிவியல் துறையில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களை நாமும் வாழ்த்துவோம்!
- த.க. தமிழ்பாரதன்
படம்:க.சதீஷ்குமார் .நன்றி. eவிகடன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக