செவ்வாய், 21 ஜூலை, 2015

கட்டணம் உயருமா?

நெட் நியூட்ராலிட்டி பிரச்னை: அரசின் தீர்வால் வாட்ஸ்அப், வைபருக்கு பாதிப்பா?                                                                                                                       கடந்த ஏப்ரல் மாதம் வரை 'நெட் நியூட்ராலிட்டி' என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு கூட,   அதுகுறித்து  ஊடகங்களும், சமூக வலைதளங்களில் உள்ளவர்களும் வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு காட்டுத்தீயாக பரவியது நெட் நியூட்ராலிட்டி பிரச்னை.

இதற்கு மூலகாரணமாக இருந்தது ஏர்டெல் ஜீரோ திட்டம்தான். இந்த திட்டத்தில் இணையும் நிறுவனங்களின் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், மற்ற இணையதளங்கள் கட்டணமாக்கப்படும் என்ற அறிவிப்பே இந்த புரட்சி போராட்டத்துக்கு காரணமானது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் குரல்கள் ஒலிக்க துவங்கின.



மக்கள் தங்களது எதிர்ப்புகளை 'நெட் நியூட்ராலிட்டி'க்கு எதிராக,  #இணையத்தைகாப்போம் #SaveTheInternet என்ற ஹாஷ்டேக்குகளை பயன்படுத்தி,  இந்தியாவில் இணைய சமநிலை வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தினர். செல்போன் நெறிமுறையாளரான 'ட்ராய்',  மின்னஞ்சல் மூலம் மக்கள் கருத்துக்களை கேட்டது. அதன் அடிப்படையில் அரசின் தொலைதொடர்பு துறை இன்று அறிக்கை மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு வழங்கியுள்ளது.


அரசின் தீர்வு என்ன?




  'நெட் நியூட்ராலிட்டி'  விவகாரத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர்களான மக்களின் நலன்தான் முக்கியம், அதற்கு ஏற்பதான் செல்போன் நிறுவனங்களும், ஓடிடி எனும் ஆப்ஸ் சேவை நிறுவனங்களும் தங்களது சேவையை வழங்க வேண்டும். பல லட்சம் பேரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இணைய பயன்பாட்டை செல்போன் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஓடிடி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்குவதில், தகவல் பரிமாற்றத்திற்கு எந்த நெறிமுறையும் இல்லாமல் தங்களது பழைய நடைமுறையிலேயே இயங்கலாம் என கூறியுள்ளது. ஆனால் இது தகவல் பறிமாற்றத்துக்கு மட்டுமே என்று கூறியுள்ளது. அதே போன்று தொலைதொடர்பு நிறுவனங்களையும் அனைவருக்கும் அனைத்து தளங்களையும் இணைய சமநிலையோடு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.



வாட்ஸ்அப், வைபருக்கு ஆபத்தா?




இதனால் வாட்ஸ் அப், வைபர் போன்ற ஆப்ஸ்களுக்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அவர்கள் தகவல் பரிமாற்றத்தை மட்டும் இலவசமாக வழங்கலாம். ஆனால் விஓஐபி(VOIP) எனும் இணையதள கால் சேவைகளை இலவசமாக வழங்க முடியாது. அதனை நெறிமுறைப்படுத்த வேண்டும். அவை தொலைதொடர்பு நிறுவனங்களின் அழைப்பு கட்டணங்கள் போலவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் போன்ற சேவைகள் பாதிப்புக்குள்ளாகும், குறிப்பாக வாட்ஸ் அப் மூலம் பேசினால், அழைப்புக் கட்டணங்கள் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் தகவல் பரிமாற்றத்துக்கு ஏற்றதுதான் இந்த ஆப்ஸ்கள்; அதில் எந்த பிரச்னையும் இருக்காது என்கின்றனர் சிலர்.


ஆனால் சர்வதேச அழைப்புகளுக்கு இந்த நெறிமுறைகளில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், " அப்பாடி... ஒரு வழியாக இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது!"  என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.



கட்டணம் உயருமா?



தற்போது நெட் நியூட்ராலிட்டி நிறைவேறியுள்ள நிலையில்,  ஏர்டெல் ஜீரோ போன்ற தொலைபேசி நிறுவனங்களது கொள்கைக்கு மாறுபட்ட தீர்வாக இது இருப்பதால்,  வேறு வழியின்றி நெட் நியூட்ராலிட்டியை ஏற்றுக்கொண்டாலும் கட்டணங்களை அதிகப்படுத்தலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது. ஏற்கெனவே இணைய பயன்பாட்டு கட்டணம் அதிகமாக இருப்பதால், அது இன்னும் அதிகரித்தால் மக்கள் அவதிப்படுவார்கள்.

இணைய சமநிலையை கொண்டு வந்துள்ள அரசு, கட்டணக்களுக்கும், நிறுவனங்களுக்கும் சமமான ஒரு கொள்கையை கொண்டு வந்து நெறிமுறைபடுத்தினால் நெட் நியூட்ராலிட்டி மட்டுமின்றி, அனைவருக்கும் இணைய சேவையை கொண்டு சேர்க்க முடியும்.இதையும் அரசு கவனத்தில் கொண்டால் இந்தியா,  இணையத்தால் முழுமையாக இணைக்கப்பட்ட நாடாகும்.
LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக்
கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல்
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம்  விட்டுக் கொடுப்போம்…!!!
                   🙏
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புனர்வை ஏற்படுத்துவோம்,
நன்றி !!     🙏

ஊழலும் மர்ம மரணங்களும் தனஞ்செயன் 91 9043669805

‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது. ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள்.

மத்தியப் பிரதேச அரசுப்பணி நியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல். ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய ஆஷிஷ் சதுர்வேதி என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம்! ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல்களில் தப்பி, நம்பிக்கை மனிதராக நடமாடிக் கொண்டிருக்கிறார்.

இஸ்திரி செய்யாத தொள தொள பேன்ட் - சட்டை அணிந்தபடி ஒரு பழைய சைக்கிளில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் குவாலியரில் வலம் வரும் 26 வயது இளைஞர் ஆஷிஷ் சதுர்வேதியைப் பார்க்கும் எவருக்கும் ஆச்சரியம் எழும், ‘இவரா இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்?’ என! ஆனால் அவரது பாதுகாப்புக்காக உடன் வரும் போலீஸ்காரரைப் பார்த்தால் நம்பிக்கை வரும்.

‘‘என் அம்மாவின் மரணம்தான் இந்த ஊழலை எனக்கு உணர்த்தியது’’ என நெகிழ்ச்சியோடு சொல்கிறார் சதுர்வேதி. கடந்த 2009ம் ஆண்டில் புற்றுநோய் தாக்கிய தன் அம்மாவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார் அவர். அங்கிருந்த மருத்துவர்களுக்கு அடிப்படை மருத்துவ அறிவுகூட இல்லாதது கண்டு அதிர்ந்தார் சதுர்வேதி. பலருக்கும் குத்துமதிப்பாகவே சிகிச்சை நடந்திருக்கிறது.

‘‘சிகிச்சை பலனளிக்காமல் என் அம்மா சில நாட்களிலேயே இறந்துவிட்டார். எனக்குக் கோபம் பொங்கி வந்தது. சாதாரண மருந்துக்கடை விற்பனையாளருக்கு மருந்துகள் பற்றித் தெரியும் விஷயங்கள்கூட அறியாமல் இவர்கள் எப்படி எம்.பி.பி.எஸ் முடித்து வந்திருப்பார்கள் என கேள்வி எழுந்தது.

எத்தனை அப்பாவிகள் இந்த அரைகுறைகளால் தினம் தினம் சாகடிக்கப்படுகிறார்கள்! இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என விசாரணையை ஆரம்பித்தேன்’’ என்கிறார் சதுர்வேதி.

அங்கு பழக்கமான ஒரு மருத்துவ மாணவரோடு நெருங்கிப் பழகியதில் உண்மைகள் தெரிந்தன. மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மத்தியப் பிரதேசத்தில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

உண்மையான மாணவர்களுக்கு பதிலாக வேறு யாரோ தேர்வு எழுதுவார்கள். இப்படி ஆள் மாறாட்டம் செய்வதில் எல்லோருக்கும் பங்கு! தேர்வு நடக்கும் நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் இருக்க, அந்த மாணவர் எங்காவது சினிமா பார்த்துக் கொண்டிருப்பார். ‘‘ஒரு சினிமா பார்த்தால் எம்.பி.பி.எஸ் அட்மிஷன் கிடைப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான்’’ என சொல்லி சிரிக்கிறார் சதுர்வேதி.

இது ஊழலின் ஒரு துளிதான். மாணவர்கள் போய் விடைத்தாளை வாங்கி, எதுவுமே எழுதாமல் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க, வேறு இடத்தில் வைத்து அதை யாரோ ஒரு பேராசிரியர் எழுதி முடிப்பார். ஒன்றுமே தெரியாத ஒரு நபர், முதல் மார்க் வாங்கி நல்ல கல்லூரியில் சீட் பெறுவார். இப்படி மோசடி நடந்தது வெறுமனே மருத்துவக் கல்லூரி அட்மிஷனுக்கு மட்டுமில்லை. எஞ்சினியரிங் அட்மிஷன், அரசு வேலைகளுக்கான தேர்வுகள் என சகல மட்டத்திலும் இதே ஆள்மாறாட்டம், தகிடுதத்தம்.

நுழைவுத் தேர்வு மையங்கள், கவுன்சிலிங் நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஆதாரங்களைத் திரட்டி, 2013ம் ஆண்டில் ஒரு உயர் அதிகாரியிடம் புகார் கொடுக்கப் போனார் சதுர்வேதி. அவரோ, ‘இந்த நெட்வொர்க்கில் நீயும் சேர்ந்தால் நல்ல பங்கு சம்பாதிக்கலாம்’ என பேரம் பேசினார். அங்கிருந்து விலகி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை அணுகினார் சதுர்வேதி.

இதேபோல வேறு மூன்று பேர் பல்வேறு தகவல்களைத் திரட்டிக் கொடுத்த புகார்களும் அந்த அதிகாரி கையில் இருந்தது. ‘இவ்வளவு அப்பட்டமாக மோசடி செய்ய முடியுமா?’ என்ற அவநம்பிக்கை மனதில் சூழ, அரைமனதோடு ஒரு நுழைவுத் தேர்வு மையத்துக்கு திடீர் சோதனை நடத்தச் சென்றார் அந்த அதிகாரி. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பலர் சிக்கினர். அதன்பின் ஒவ்வொன்றாக முழு பூதமும் வெளியில் வந்தது.

இது எவ்வளவு மெகா சைஸ் ஊழல் என்பது சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் புரியும். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது 1930 பேர். இன்னும் 500 குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கின்றனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் மனைவிக்கு இதில் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மாநில கல்வி அமைச்சர் சிறையில் இருக்கிறார்.

மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவின் மகன் கைது செய்யப்பட்டு, மர்மமான முறையில் இறந்துவிட்டார். இப்படி இதுவரை மர்ம மரணம் அடைந்தது 36 பேர். கவர்னருக்கே இதில் தொடர்பு இருப்பதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

‘‘இப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை நடக்கிறது. இதுவரை இந்த ஊழலின் சூத்திரதாரிகளை போலீஸ் நெருங்கவில்லை. உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டுமின்றி பல நீதிபதிகளின் வாரிசுகளும் உறவினர்களும்கூட இதில் பலன் அடைந்திருக்கிறார்கள்.

அதனால் விசாரணை எப்படிப் போகும் என்பது தெரியவில்லை. இதில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பலருக்குத் தொடர்பு இருக்கிறது. மர்ம மரணங்களுக்குப் பின்னணியை போலீஸ் ஆராயவில்லை’’ என்கிறார் சதுர்வேதி.

இந்த ஊழலை அம்பலப்படுத்திய தினத்திலிருந்து இவருக்குக் கொலை மிரட்டல் வருகிறது. போலீஸ் பாதுகாப்பு கேட்டபோது, ‘மாதம் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் பாதுகாப்பு தருவோம். இல்லாவிட்டால் எங்கும் வெளியில் வராமல் வீட்டில் இரு’ என பதில் தந்தது போலீஸ்.

பிறகு கோர்ட் உத்தரவிட்டதும் போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. சதுர்வேதி ஒரு சைக்கிளில் போக, அவருக்கு பாதுகாப்பாக ஒரு கான்ஸ்டபிள் இன்னொரு சைக்கிளில் வருவார். அந்த கான்ஸ்டபிள் கண்ணெதிரிலேயே ஆறு முறை சதுர்வேதி மீது தாக்குதல் நடந்தது. அவர் வேடிக்கை மட்டுமே பார்த்தார்.

‘‘இப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை எனக்கு வாழ்நாள் முழுவதும் தரச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம்கூட என்னை கண்டம் துண்டமாக வெட்டிப் போடப் போவதாக, என் பாதுகாப்புக்கு வரும் கான்ஸ்டபிளிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள் சிலர். மரணம் பற்றி எனக்கு பயமில்லை. 14 முறை பிழைத்துவிட்டேன்.

அடுத்த மர்ம மரணம் எனக்கு நிகழலாம். ஆனால் அதற்கு முன் இதில் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் அத்தனை பேரையும் அம்பலப்படுத்த வேண்டும், முதல்வர் உட்பட! இல்லாவிட்டால் என் ஐந்து ஆண்டு உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்!’’நீண்ட பெருமூச்சோடு சொல்லி விட்டு சைக்கிளை மிதிக்கிறார் ஆஷிஷ் சதுர்வேதி.

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?). தனஞ்செயன் 91 9043669805

" The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?).

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்
கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதம் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே
👉எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? 👉ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?

👉காமராசரின் ஆட்சி காலம்:

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
👉ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 👉14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்
தீட்டி நிறைவேற்றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்
பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத்
தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!
👉1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
👉2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
👉3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
👉4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
👉5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
👉6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
👉7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
👉8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
👉9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
👉10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
👉11.துப்பாக்கி தொழிற்சாலை
👉12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
👉13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
👉15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
👉16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
இவை மட்டுமா?👇👇
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்ற போது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே...!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில
விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
இந்தச் சாதனைகளில்...
இந்தியாவிலேயே தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர்
செய்தது சாதனையா..?
இல்லை
"இலவச"த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?👌👍 💥please share friends 💥
அவரவர் அவரவர் மதத்தையோ அல்லது பிடித்த கருத்துகளை உயர்த்தி பேசலாம். உரிமை உண்டு. பிற மதத்தை இகழ கூடாது. நாம தெருவில் கைய வீசி வீசி நடக்கலாம் உரிமை உண்டு. பிறர் கண்ணை குத்த கூடாது.


இறைவன் ஒருவனே. அவனை நாம், சிவன், விஷ்ணு, ஏசு, ஹல்லா என்று அழைக்கிறோம். தங்கம் ஒன்று தான் அதை நாம் எப்படி செயின், மோதிரம்,வளையல், ப்ரேஸ்லெட்-னு செய்து கொள்கிறோமோ அதே போல் தான் இறைவனும்.


விவேகனந்தர் கூறியது போல நதிகள் பலவாறாக தோன்றினாலும் கடைசியில் கடலை அடைகிறது. அதே போல் நாம் எந்த மதத்தையும் பின்பற்றினாலும் பரம் பொருளை(இறைவன்) ஒருவனையே அடைகிறோம்.


எனக்கு தெரிந்த வரை ஆதி காலத்தில் மனிதன் தன் சக்திக்கு மிஞ்சிய சக்திகளுக்கு பயந்தான். அதனால் நமக்கு பாதிப்பு வரகூடாது என்பதற்காக. பொதுவா எப்படி உயர் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்வது போல!!!

புயல் காற்று பலமாக அடிக்கிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை என்ன செய்வது ? உடனே காற்றை கும்பிட்டான் - வாயு பகவான் என்று ,

காட்டு தீ அதிகமாக பரவுகிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை - அக்னி பகவான்,இந்த பக்கம் வரதே

மழை அல்லது வெள்ளம் அதிகமாக வருகிறது மனிதனால் தடுக்க முடியல - வருண பகவான்.

இதை போன்றே பாம்பை பார்த்தல் படையே நடுங்குகிறது அதுவும் சாமி, இடி , மின்னல்களை பார்த்தல் சாமி, சிங்கம் , புலி கடவுளின் வாகனங்கலாக்கி வணங்கினான்.

பசு - தாய்க்கு அடுத்தபடியாக பசுவின் பாலை அருந்துகிறோம் - அதை கோமாதா ஆயிற்று.

இதை போன்றே கால போக்கில் வந்து இருக்கலாம் என்பதே என் அனுமானமே தவிர இது தான் உண்மை என்று கூறவில்லை.


இப்படியாக சிவனுக்கு இவர்களாகவே ஒரு உருவம் கொடுத்திருக்கலாம். அவர் படையே நடுங்கும் பாப்பையே தான் கழுத்தில் வைத்து இருக்கிறார். புலியின் மீது அமர்ந்து இருக்கிறார். இப்படியாக இருக்கலாம். மனிதனின் உறவு முறைகளை போல மனைவி மற்றும் குழந்தைகள் இருகிறார்கள் என்று சொல்லி இருக்கலாம்.


எனக்கு தெரிந்த இப்படியாக இந்து மதம் வந்து இருக்கலாம்.


யார் கடவுள் என்றால் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி என்று சொல்கிறார்கள்.

அதாவது தொடக்கமும் முடிவும் இல்லாத ஜோதி தான் கடவுள்னு சொல்லிட்டு வைகாசி விசாகம் முருகர் பிறந்த நாள்.கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ணர் பிறந்த நாள், ஏசு கிருஸ்து பிறந்த நாள் என்றால் இறந்த நாள் கண்டிப்பாக இருக்கும் என்று தானே பொருள் கொள்ளவேண்டும்.

தவறுகள் இருப்பின் தெரிய படுத்தவும்.

பிரபஞ்சம் எப்படி உருவானது?

பிரபஞ்சம் எப்படி உருவானது?                                                                                             பிரபஞ்சம்
என்பது ஒரு அதி அடர்த்தியா
ன பந்து போலத்தான்
முதலில் உருவானதாகக்
கருதப்படுகிறது.

இந்த
அடர்த்தியான 'பிரபஞ்ச முட்டை’ (Cosmic egg) தான்
படுபயங்கரமான
ஒரு வெடிப்பினால்
அப்படியே விரிவடைந்து,
இப்போது நாம் காணும்
பிரபஞ்சமாக உருவாகியுள்ளது.

இந்தக்
கருத்தை முதலில் கூறியவர்
பெல்ஜிய நாட்டு வானியல்
வல்லுனர் ஜார்ஜ் லமாய்டர்
(Georges Lemaitre) என்பவர் தான்.
இப்படி ஒரு சிறிய அதி அடர்த்தியான உடல்
வெடித்து அதனால்
பிரபஞ்சம் உருவான
நிகழ்வை 'மகா வேட்டு’
அல்லது 'மகா வெடிப்பு’ (Big
Bang) என்று அழைக்கின்றனர். 

இப்படி வெடித்ததனால் அந்த
முட்டையின் பாகங்கள்
எல்லாம் விண்வெளியில்
வெகு தூரத்துக்கு சிதறடி
க்கப்பட்டன. அப்படி சிதறின
பாகங்கள் எல்லாமே விநாடிக்கு பல்லா
யிரம் கிலோமீட்டர்கள் என்கிற
வேகத்தில் இன்னும்
பயணிக்கின்றன. இந்த
சிதறின, விரைவாக நகரும்
பருப்பொருட்கள் தான் பின்னர் காலக்சிகளாகவும்,
விண்மீன்களாகவும்,
கிரகங்களாகவும்
உருவாகின.


இப்போது கூட
பிரபஞ்சத்தின் எல்லா உடல்களும் வேகமாக
விரிவடைந்து கொண்டே தா
ன் செல்கின்றன.
இதனை 'விரிவடையும்
பிரபஞ்சம்’ (Expanding Universe)
என்று அழைக்கின்றனர். காலக்சிகள்
என்பவை நம்மை விட்டு வில
கிச்
சென்று கொண்டே உள்ளன.
வெகு தொலைவில்
இருக்கும் டிம்மான காலக்சிகள் இன்னும்
வேகமாக
நம்மை விட்டு விலகிச்
செல்கின்றன.

அமெரிக்க
வானியல் வல்லுனர் மில்டன்
ஹ்யூமாசன் (Milton Humason) என்பவர் 1929ஆம்
ஆண்டு நம்மை விட்டு விநா
டிக்கு 3800 கிலோமீட்டர்கள்
என்கிற வேகத்தில் விலகிச்
செல்லும் ஒரு காலக்சியைக்
கண்டு பிடித்தார். அவரே 1936ஆம்
ஆண்டு விநாடிக்கு 40,000
கிலோ மீட்டர்கள் என்கிற
வேகத்தில் விலகிச் செல்லும்
இன்னொரு காலக்சியையும்
கண்டார். எல்லா காலக்சிகளும்
இப்படி ஒன்றை விட்டு ஒன்ற
ு விலகிச் செல்வது எதனால்
என்கிற காரணம்
வானியலாளர்களுக்கு பெரி
ய பிரச்னையாக இருந்தது. மேலும் காலக்சிகளின்
தொலைவு அதிகமாகும்
போது,
அவை நம்மை விட்டு விலகிச்
செல்லும் வேகமும்
அதிகமாகிறது.

1929ஆம் ஆண்டு எட்வின் ஹப்புள்
(Edwin Hubble) என்கிற அமெரிக்க
வானியல் வல்லுனர் (நம்
பால்வெளிகாலக்சி அல்லாம
ல் இன்னும் நிறைய
இலட்சக்கணக்கான காலக்சிகள் பிரபஞ்சத்தில் உள்ளன
என்று முதலில் சொன்னவர்)
தான் இந்த விரிவடையும்
பிரபஞ்சம் என்கிற
கருத்தை முதலில்
விளக்கினார்.

அவரது கருத்துப்படி முழு
பிரபஞ்சமுமே சீராக
விரிவடைகிறது. இதனால்
காலக்சிகள் கூட
ஒன்றை விட்டு ஒன்று விலகி
ச் செல்கின்றன.

'மகா வெடிப்பு’ என்கிற
நிகழ்வு தான் பிரபஞ்சத்தின்
ஆரம்பம்
என்று முன்பே கண்டோம்.
அப்படியானால் அந்த
நிகழ்வு எப்போது நிகழ்ந்தத ு என்று கேள்வி எழலாம்.
காலக்சிகளுக்கிடையேயா
ன சராசரி தொலைவு,
அவை ஒன்றை விட்டு ஒன்று
விலகிச் செல்லும் வேகம்
இவை தெரிந்தால், அவை எல்லாமே எப்போது ஒ
ரே முட்டைக்குள்
அடர்த்தியான பொருளாக
அடங்கி இருந்தன
என்று பின்னோக்கி கணக்கிட
முடியும். 

ஆனால் காலக்சிகளுக்கிடையேயா
ன சராசரி தூத்தைக்
கணக்கிடுவது, கடினமான
காரியம். மேலும்
அவை எவ்வளவு வேகத்தில்
ஒன்றை விட்டு ஒன்று விலகி ச் செல்கின்றன
என்பதை அறிவதும் கடினம்
தான். மேலும் இந்த விலகும்
வேகம் கூட எல்லாச்
சமயங்களிலும்
ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.


இதனால் மேற்கூறிய
எல்லாவற்றுக்கும் சில
அனுமானக்
கணக்குகளை வைத்து ஹப்ப
ுள் என்பவர் கணக்கிட்டு பிரபஞ்சம்
என்பது 2 பில்லியன்
வருடங்களுக்கு முன்
தோன்றியிருக்கக் கூடும்
என்று சொன்னார். ஆனால்
புவியியல் வல்லுனர்கள் மற்றும உயிரியல்
ஆராய்ச்சியாளர்களின்
கணக்குப் படி நம் தாய்
கிரகமான பூமியே 2
பில்லியன்
வருடங்களுக்கு முந்தைய வரலாற்றைக்
கொண்டிருந்தது.


எனவே பிரபஞ்சம்
என்பது நிச்சயம்
பூமியை விடவும்
வயதானதாக இருக்க வேண்டும்
என்று கருதப்பட்டது.
தற்போது நிலவும்
கருத்துப்படி பிரபஞ்சம்
உருவாகக் காரணமான
'மகா வேட்டு’ என்ற நிகழ்வு சுமார் 15 பில்லியன்
வருடங்களுக்கு முன்னால்
நிகழ்ந்திருக்க வேண்டும்
எனப்படுகிறது. நம் சூரியக்
குடும்பம் என்பது வெறும் 5
பில்லியன் வருடங்களாகத்தான்
பிரபஞ்சத்தில் உள்ளது.
சூரியக் குடும்பம்
பிறப்பதற்கு முன்பு 10
பில்லியன் வருடங்கள்
பிரபஞ்சம் என்பது இருந்து வந்துள்ளத
ு. 

'மகா வேட்டு’
அல்லது 'மகா வெடிப்பு’
என்ற வார்த்தையை முதலில்
உருவாக்கியவர் அமெரிக்க
வானியல் வல்லுனர் ஜார்ஜ் கேமோ (George Gamov)
என்பவர்தான். அவர் தான்
பிரபஞ்சம் உருவாகக்
காரணமான
நிகழ்வை இப்பெயரிட்டு அழ
ைத்தார். 

உண்மையில் இந்த பெரு வெடிப்பை நம்மால்
காண முடியுமா என்ற
கேள்வி எழலாம்.
ஒரு விண்மீன் நம்முடைய
பூமியில் இருந்து 10
ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது என்று வைத்து
க் கொள்வோம். அந்த விண்மீன்
இரவு நேரத்தில் கண்
சிமிட்டும் சிறு ஒளிக்
கற்றையாக நம் கண்ணுக்குத்
தெரிகிறது. உண்மையில் நாம் பார்க்கும் அந்த ஒளி 10
ஆண்டுகளுக்கு முன்பு அந்
த விண்மீனில்
இருந்து கிளம்பியிருக்க
வேண்டும். அப்போது தான்
அதன் ஒளியை நாம் இப்போது காண
முடிகிறது. 
நாம்
வெகு தொலைவு பின்னோ
க்கிச் செல்லும் போது கூட,
இந்த மகா வெடிப்பை காண
முடிவதில்லை.

தற்போது 'குவாசர்கள்’
என்கிற ஒரு பிரகாசமான
பொருட்களை விண்ணில்
வானவியல் வல்லுனர்கள்
கண்டுள்ளனர்.
இவற்றிலிருந்து வரும் ஒளி 15 பில்லியன்
வருடங்களுக்கு முன்பு கி
ளம்பி தற்போது தான்
பூமியை வந்தடைந்திருக்கி
றது.
அதாவது அவை பிரபஞ்சம் தொடங்கின
காலத்திற்கு சற்று பின்னால்
இருந்திருக்கினறன.
இப்படி குவாசர்களின்
ஒளி நம்மை அடையும்
போது, மகாவேட்டின் போது உண்டாகியிருக்கும்
ஒளியை ஏன் நம்மால் உணர
முடியவில்லை என்ற
கேள்வி எழுந்தது. 

1949&ஆம் ஆண்டு ஜார்ஜ்
கேமோ இதற்கான
விடையை அளித்தார்.
மகா வெடிப்பின்
எதிரொளியாக
அதிலிருந்து கிளம்பின ஆற்றல்
'மைக்ரோ அலைகளாக’ (Micro
waves) இப்போது எல்லாத்
திசைகளிலும்
பரவியுள்ளது என்று அவர்
சொன்னார். மேலும் இந்த மைக்ரோ அலைகளின் ஆற்றல்
அளவையும் அவர்
ஓரளவு அனுமானித்துச்
சொல்ல முடிந்தது.


இப்படி மகாவேட்டின்
போது உண்டான ஆற்றல் மைக்ரோ அலைகள் ரூபத்தில்
விண்வெளியின் எல்லாத்
திசைகளிலும் சமமான
அளவிலும் சமமான
ஆற்றலுடன் விரவியுள்ளன.


கேமோ அனுமானித்ததை அ மெரிக்க வானியல்
வல்லுனர்கள் ஆலன்
பென்சையஸ் (Allan Penzias)
மற்றும ராபர்ட் வில்சன் (Robert
Wilson) ஆகியோர் 1964&ஆம்
ஆண்டு நிரூபித்தனர். பிரபஞ்சம் என்பது முதன்
முதலாக
ஒரு அதி அடர்த்தியான
முட்டையாக
இருந்தது என்றும்,
இப்போது பிரபஞ்சத்தில் நாம் காணும்
எல்லா காலக்சிகளும்
விண்மீன்களும்
குவாசர்களும் ஆற்றல்களும்
அந்த சிறிய முட்டைக்குள்
தான் அடங்கியிருந்தன என்றும் நாம் கண்டோம்.
இந்த
முட்டை அதி வெப்பமாகவும்
அதி அடர்த்தியாகவும்
இருந்து வெடித்ததனால்
தான் பிரபஞ்சம் என்று இன்றைக்கு நாம்
காண்கின்ற
எல்லாமே (மனிதன், புல்,
பூண்டு, சூரியன், நிலா,
காலக்சி)
உருவானது என்றும் நாம் பார்த்தோம்.

அப்படியானால்,
இந்த பிரபஞ்ச
கரு முட்டை எப்படி உருவா
கியிருக்க வேண்டும் என்ற
கேள்வி எழலாம்.
பிரபஞ்சத்தை உருவாக்கியத ு இந்த கரு முட்டை. இந்தக்
கரு முட்டையை உருவாக்கி
யவன் தான் கடவுள்
என்று சிலர் சொல்லக்
கூடும். 

ஆனால் தற்கால
விஞ்ஞானம் என்பது கடவுள் என்ற
வார்த்தையை விட்டு வெகு
தூரம் விலகிச்
சென்று விட்டது. மனித
விஞ்ஞானம் எந்தக்
கருத்தையும் இப்படி கடவுளிடம்
விட்டு விட்டு சும்மா இருப்
பதில்லை. அறிவின்
மூலமாகவும் 'Reasoning’
எனப்படும்
அறிவாராய்ச்சியின் மூலமாகவும் மனிதன்
இயற்கையின்
ஆச்சர்யங்களுக்கு விடை தே
டுகிறான். பிரபஞ்ச
கரு முட்டையை கடவுள்
உருவாக்கினார் என்று சொல்லி சும்மா இரு
க்க விஞ்ஞானம்
விரும்பவில்லை.


1980ஆம் ஆண்டு அமெரிக்க
இயற்பியல் வல்லுனர் ஆலன்
கூத் (Alan Guth) என்பவர் இந்தக் கேள்விக்கான
விடையை 'குவாண்டம்
இயற்பியல்’ (Quantum Mechanics)
என்கிற ஒரு துறையின்
மூலமாக காண முற்பட்டார்.
அவரது கருத்துப்படி மகா வ ெடிப்புக்கு முன்னிருந்த
பிரபஞ்சம்
வெறுமனே ஒரு வெற்று வ
ெளிதான். 

அதாவது அதிக
ஆற்றலைத்
தன்னகத்தே கொண்டிருந்த ஒரு வெற்றிடமாகத் தான்
இந்தப் பிரபஞ்சம்
இருந்திருக்கிறது.
இதை இவர்
'போலி வெற்றிடம்’ (False
Vacuum) என்று அழைத்தார். அதாவது வெற்றிடம் போல
இருந்தாலும் அதில்
அபரிமிதமான ஆற்றல்
உள்ளார்ந்து நிறைந்திருந்தத
ு. அதனால் ஆரம்ப
பிரபஞ்சத்தை வெறுமனே வ ெற்றிடம் என்று சொல்ல
முடியவில்லை.
ஒரு சில குருட்டாம்
போக்கான
நிகழ்வு மாற்றங்களால் இந்த
ஆரம்ப ஆற்றல் வலிமையாக இருந்த இடங்களில் எல்லாம்
சில தோற்றக் கூறுகள்
உருவாகியிருக்க
வேண்டும். 

அதாவது கடலில்
எப்படி அலைகள்
நுரையை உருவாக்குகின்ற னவோ, அதே போல
எல்லையற்ற, ஆற்றல் வாய்ந்த
போலி வெற்றிடத்தில்
ஆங்காங்கே எல்லையற்ற,
ஆற்றல் வாய்ந்த
போலி வெற்றிடத்தில் ஆங்காங்கே சில தோற்றங்கள்
உருவாகின. இவற்றில் சில
தோற்றங்கள் உண்டாகின
அதே வேகத்திலேயே மறைந்
து, மீண்டும்
போலி வெற்றிட ஆற்றலாக மாறி விட்டன.


இவ்வாறு ஆதி ஆற்றலில்
இருந்து உருவான
ஒரே ஒரு தோற்ற
நுரை மட்டும்
எப்படியோ சில காரணங்களால் நாம் வாழும்
பிரபஞ்சமாக
விரிவடைந்து இருக்க
வேண்டும்.


மேலே ஆலன் கூத்
சொன்னவை எல்லாமே ஏதோ விஞ்ஞானக் கதைகளில்
வரும் நிகழ்வுகள்
போலத்தான் இருக்கிறது.
விஞ்ஞானம்
என்பது இன்னும் Ultimate
எனப்படுகின்ற இறுதியான விதிகளை கண்டுபிடிக்க
முடியவில்லை.

விஞ்ஞானம்
என்பது நிறைய
அனுமானங்களை முன்னே
வைக்கிறது. பின்
அவற்றை நிரூபிக்க முயற்சிக்கிறது. எதுவும்
இதில் உறுதி இல்லை. ஆலன்
கூத்தின் கருத்துக்கள் கூட
இன்னும்
விஞ்ஞானிகளிடையே ஒரு
புதிராகவே உள்ளது. கூத்தின்
தியரி சரி என்று வைத்துக்
கொண்டாலும் கூட,
பிரபஞ்சம்
உருவாவதற்கு முன்பு இரு
ந்து இந்த 'போலி வெற்றிடம்’ எங்கே இருந்து உருவாகியி
ருக்க வேண்டும் என்ற
கேள்வி எழுந்தது.


இப்படி பின்னோக்கி சென்று
பிரபஞ்சத்தின் தொடக்கம்
பற்றிய அறிய முற்படுவதில் நிறைய
கருத்து வேறுபாடுகள்
உள்ளது. அந்த
'போலி வெற்றிடம்’
என்பது கடவுளின்
படைப்பு என்று வைத்துக் கொண்டால், 'கடவுள்
என்பவரை யார்
படைத்தது என்று சிலர்
கேள்வி எழுப்பினர். கடவுள்
நிரந்தரமாக எப்போதும்
இருப்பவர் என்ற பதில் விஞ்ஞானிகளிடையே அவ்வ
ளவாக ஏற்றுக்
  1. கொள்ளப்படவில்லை.

கூகிளுக்குத் (Google) தெரிந்தது கூட, நம் தமிழர்களுக்குத் தெரியவில்லை

கூகிளுக்குத் (Google) தெரிந்தது கூட, நம் தமிழர்களுக்குத் தெரியவில்லை.

”அம்மா என்றால் தாய், மம்மி (Mummy) என்றால் சவம்.”
என எப்பொழுது இந்த சமுதாயம் புரிந்து கொள்ளும்?
பெற்ற தாயை மம்மி என்றழைப்பது மிகவும் தவறு, ஆங்கிலத்தில் மொம் (Mom) அல்லது மொம்மி (Mommy) என்று பெற்ற தாயை அழைப்பர்.